07-28-2004, 12:57 PM
Quote:நான் ஒர் அந்நியனாய் அகதியாய்
சிறீலங்கனாய் வேண்டாம்
புலத்தில் நிறபேதமில்லாத மனிதனாக
மதித்திடும் காலம் தான் எப்போ வரும்
_________________
SHANMUHI
வருந்திக் கொண்டே ஒரு செயலைச் செய்வது கடினம்தான்.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர்
உங்களைப் போலவே சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
போனவர் பற்றிய தகவல் மற்றும் தொடர்புகள்
ஆரம்பத்தில் இருந்தன.
பின்னர் தொடர்புகள் அற்றுப் போய் விட்டது.
பல கடிதங்கள் போட்டேன்.
பதிலேயில்லை.??????????????
அவரது பெயர்: என்.நடராசா
சுவிசை விட்டு 2000ம் ஆண்டு சென்றார்.
அவரை ஒரு முறை சந்திக்க ஆசை..........

