07-16-2003, 12:15 PM
நாங்கள் தூரவிருந்தாவது எம் மண்ணுக்கு செய்யவேண்டியதை செய்கின்றோம் சோதாரா. கொடுக்க வேண்டிய மதிப்பை மரியாதையயைக் கொடுக்கின்றோம். நாட்டுப்பற்றிருப்பதனால் தான் அவர்கள் கட்டுவதும் உடைப்பதும், அழிப்பதும். அந்த இருபது வருடங்கள் தான் தமிழன் என்ற ஒரு இனம் உள்ளது என்றாவது உலகிற்குத் தெரியவந்தது. ஒரு சிலதுகளுக்கு வெள்ளிபார்க்க நாட்டைவிட்டு ஓடிப் போகவாவது முடிந்தது. நிச்சயமாய் என் மண்ணிற்கு மண்ணின் மைந்தருக்கு எமக்காக தம்மின் உயரை அர்ப்பணித்தவர்க்கு, இனியும் அர்ப்பணிக்கக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குண்டு விழுந்தாலேன்ன துண்டு போனால் என்ன என்று என் தாய்மண்ணை நேசித்தபடி வாழ்பவர்க்கு அந்தத் தவப்புதல்வர்களுக்கு சேவகனாக இருக்க மனப்புூர்வமாக விரும்புகின்றேன். சமஸ்டி,இடைக்காலம்,நிர்வாகம்அணைத்தும் எல்லா வீதிகளும் ரோமுக்கே என்பது போல கேட்பவைகள் எல்லாம் என் தங்கத் தமிழீழத்திற்கே தான். பதறாதீர்கள். அவர்களின் மொழி புரியாதபடியால் தடுமாறுகின்றீர்கள். விரைவினில் பதில் கிடைக்கும். நல்லபதில்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

