07-16-2003, 09:14 AM
எமக்கு எந்த அந்நியனுடைய சார்பும் தேவையில்லை. ஏனேனில் எமது போராட்டம் அமெரிக்கனுக்காகவோ அல்லது ரஸ்சியனுக்காகவோ, பாக்கிஸ்தானுக்கு, இந்தியாவிற்குச் சார்பாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல. எமது போராட்டம் இந்துவுக்காகவோ, கிருஸ்தவனுக்காகவோ, முஸ்லிமுக்காகவோ அல்ல. எமது போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின், அவலப்பட்டு அவதிப்பட்டு நிற்கும் மக்களிற்காக. அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் சோரம் போகவேண்டிய, சார்ந்து நிற்க வேண்டிய அவலம் எந்த ஈழத்தமிழனுக்கும் இல்லை. எந்த வல்லரசு பயங்கரவாதிகளுக்கும் அஞ்சி நிற்க வேண்டிய தேவையும்மில்லை. உங்கள் பலன்ஸ் எப்படி என்று தெரிகின்றது. வாங்கல் கழுத்து உண்மையின் பக்கம் மட்டுமே பார்க்கும். உரிமைக்காகப் போராடுபவனின் பக்கம் மட்டுமே சாயும். அது ஆப்கனிஸ்தானியாக இருந்தால் என்ன செச்னியனாக இருந்தால் என்ன கஸ்மீரியாக இருந்தால் என்ன. வல்லரசுகளின் ஊடக வியலாலர்களின் எழுத்தாற்றல் இங்கு நார் நாராகக் கிழிபடுவது உங்களுக்கு புரியமல் இருக்கலாம். ஆயினும் நமக்கு நன்றாகவே புரியும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

