Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரான்ஸ், குறும்பட மாலை
#17
<span style='font-size:21pt;line-height:100%'><b>கலந்துரையாடலில் தெறித்த சில கருத்துகள்</b>

Idea சுமார் 5 வருடங்களாகியும் மாவீரர் போட்டியில் வென்ற படங்களைக் கூட எங்கள் தொலைக்காட்சிகள் ஏன் ஒளிபரப்ப வில்லை?
<b>- நடுத்தர வயதுடைய குடும்பத்தர்</b>

Idea இப்படங்களில் எமது வாழ்வையும், எம் பிள்ளைகளையும் பார்ப்பது போல இருந்தது.
<b>- நடுத்தர வயதுடைய குடும்பத்தர்</b>

Idea அந்த அக்கா மாதிரி எனக்கு அப்படியான திருமணப் பேச்சு வந்தால் நானும் எதிர்த்து விலகிப்போவேன் .............. நல்ல முடிவு
<b>- கனவுகள் தொடர்பாக 20 வயதுடைய பல்கலைக்கழக மாணவி</b>

Idea நாங்களும் இவ்வகையில் படங்கள் எடுக்கலாமே?
<b>- நடுத்தர குடும்பத்தர்</b>

Idea இதில் சில படங்களை நான் மீண்டும் பார்க்கிறேன் ஆனாலும் விறுவிறுப்பாகவே இருக்கிறது
<b>- குடும்பத் தலைவி</b>

Idea விலாசம் படத்தை எமது பிள்ளைகள் ஆர்வத்துடன் பார்த்தார்கள், இதில் இந்த இளைஞர்களது எண்ணங்கள் மிகத் தெளிவாக புலப்படுத்தப்படுகிறது. குறிப்பாக பாரதியின் கவிதை வரியில்….. « நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ? ............ மெட்டு இதயத்தைத் தொடுகிறது.
<b>- குடும்பத்தர் ஒருவர்</b>

Idea அழியாத கவிதையில் நீண்ட இடைவெளியின் பின் காணும் தகப்பனாரை வரவேற்கும் மகனின் உப்புச் சப்பற்ற உறவாடல்............. எமது பாச உறவுகளுக்கான உண்மையின் மேல் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகிறது.
<b>- நடுத்தர குடும்பத் தலைவி</b>

Idea ஈழத் தமிழர் வித்தியாசமானவர்கள். தமது தாயக உணர்வுகளை மீட்டுக் கொண்டிருப்பவர்கள். துடிப்பானவர்கள். குறைந்த கால புகலிட இருப்பிலேயே நிறையவே செய்ய முனகிறார்கள்.
<b>- இப்பட நிகழ்வை முதன்முதலாகப் பார்த்த பிரெஞ்சுகார நண்பர்</b>

Idea இப்படியான முயற்சிகள் ஊக்கமடைய எம்மவர் தொலைக்காட்சிகள் கை கொடுக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தைக் கொடுக்க நாங்கள் கடிதங்களை அல்லது மின்னஞ்சல்களை இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அனுப்பவேண்டும்.
<b>- பலத்த கரகோசத்தின் மத்தியில் கருத்துரைஞர்</b>

Idea \"நான் வாழ்க்கையில் நடிப்பதில்லை\"
<b>- மூத்த கலைஞர் இரகுநாதன்</b>

Idea \"அம்மா சிறிலங்காத் தமிழ் மாமாக்கள் இப்படி போத்திலால் குத்திச் சண்டை பிடிப்பார்களா ? \"
<b>- புலத்தில் பிறந்து வளரும் 9 வயது சிறுவன் தன் தாயிடம்</b>

Idea \"யாழ்ப்பாணச் சமூகம் விசித்திரமானது. தன்னை மிஞ்சிய பிள்ளையின் வளர்ச்சி கண்டே பொறாமை படக் கூடியது.........\"
<b>- ஏற்புரையின்போது இரகுநாதன்</b>

Idea நிழல்யுத்தம் புகலிட வாழ்வை மிகக் குறுகிய நேரத்தில் அழககாகச் சொல்கிறது.
<b>- நடுத்தரக் குடும்பத்தர்</b>

</span>http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=95&Itemid=
Reply


Messages In This Thread
வணக்கம் - by இளைஞன் - 07-17-2004, 12:10 PM
[No subject] - by AJeevan - 07-17-2004, 02:31 PM
[No subject] - by இளைஞன் - 07-18-2004, 02:03 PM
[No subject] - by AJeevan - 07-18-2004, 05:35 PM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 02:26 PM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 07:36 PM
[No subject] - by AJeevan - 07-19-2004, 08:56 PM
[No subject] - by Manithaasan - 07-22-2004, 12:22 PM
[No subject] - by vasisutha - 07-22-2004, 03:33 PM
[No subject] - by AJeevan - 07-22-2004, 03:59 PM
[No subject] - by shanmuhi - 07-22-2004, 04:18 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:18 PM
[No subject] - by AJeevan - 07-24-2004, 02:09 AM
[No subject] - by இளைஞன் - 07-24-2004, 10:57 AM
[No subject] - by AJeevan - 07-24-2004, 12:33 PM
[No subject] - by AJeevan - 07-26-2004, 01:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)