07-25-2004, 10:25 PM
கருணா அணியினர் மீதான தாக்குதல்: சம்பவ இடத்தைப் பார்வையிட்ட செய்தியாளரிடம் இருந்து தகவல்கள்
கொழும்பை ஒட்டிய பன்னிப்பிட்டியாவின் வீடொன்றில் நடந்த இந்த கொலைச் சம்பவம் குறித்து ராணுவ அதிகாரி சுமேத பெரைரா வழங்கிய தகவல்களையும், கொலைகள் நடந்த விதம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றையும் விளக்குகிறார் சம்பவ இடத்திற்குச் சென்று வந்துள்ள செய்தியாளர் கருணாகரன்.
எட்டு பேரும் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தலைமைக் காவல் அதிகாரி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
கொல்லப்பட்டுள்ள நபர்களுடன் தங்கியிருந்தவர்களே இக்கொலைகளைச் செய்துவிட்டு தப்பித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும் கருணாகரன் கூறினார்.
கருணா விவகாரம் சமாதானமாகத் தீர்க்கப்படுகின்ற வழி எப்போதோ கைநழுவி விட்டது - ஆய்வு
தற்போது நோர்வே தரப்பு எடுத்துவரும் முயற்சிகளுக்கு இந்த சம்பவம் பின்னடைவைத் தருமா என்பதையும், கருணா அணி முற்றிலுமாக வலுவிழந்துவிட்டதை இச்சம்பவம் குறிக்கிறதா என்பதையும் ஆராய்கிறார் கனடாவில் வாழும் இலங்கை அரசியல் ஆய்வாளர் D.B.S.ஜெயராஜ்.
கொழும்பில் கருணா அணியினருடன் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்திற்கு இலங்கை பாதுகாப்பு செயலர் மறுப்பு
கொழும்பில் கருணா அணியினருடன் கொல்லப்பட்டுள்ள ஒருவர், தம்மிக என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுசின்றன. ஆனால் இது தவறு என்றும், தம்மிக யார் என்பது விசாரணையில் தெளிவாகும் என்றும் பாதுகாப்புச் செயலர் சிரில் ஹேரத் கூறியுள்ளார்.
கறுப்பு ஜூலை நினைவு தினத்தை ஒட்டி இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடையடைப்பு
1983ல் நடந்த கறுப்பு ஜூலை இனக்கலவரங்களை நினைவு கூர்ந்தும், வெலிக்கடை சிறைக்கைதிகள் படுகொலை மற்றும் பல படுகொலைகளைக் கண்டித்தும் இன்று வடக்கு கிழக்கில் நடந்த கடையடைப்பின் விபரங்கள் அடங்கிய செய்திக் குறிப்பு.
இந்திய இலங்கைப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் அது இலங்கைத் தமிழர்கள் நலனுக்கு பாதகமாக அமையும் - பெங்களூர் மாநாட்டில் தீர்மானம்
பெங்களூரில் நடந்த தமிழ் தேசியவாத அமைப்புகளின் மாநாட்டில் இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த மாநாட்டில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பலர் பங்கேற்றபோதும், மாநாட்டில் உரையாற்றிய முக்கியத் தலைவர்கள் யாரும் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவதை தவிர்த்தார்கள் என்று, பெங்களூர் சென்ற, எமது செய்தியாளர் கோபாலன் தெரிவிக்கிறார்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Truth 'll prevail