07-24-2004, 10:39 PM
ஒரு பெண்ணின் எழுதுகோலுக்குப் பின்.......!!!!!?
பெண் எழுத்தாளரை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளர். மற்றது திருமணத்திற்குப் பிந்திய பெண் எழுத்தாளர்.
இவர்களுள் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் வருகை அதிகமாக இருந்தாலும் அதன் காலப்பகுதி மிக குறைவாகவே காணப்படுகிறது. காரணம் பெண்ணின் திருமண வயதென்பது பதினெட்டிலேயே ஆரம்பித்து விடுகிறது. இதனால் திருமணத்திற்கு முந்திய பெண் எழுத்தாளரின் கால எல்லை மிக குறைவே.
பல பெண் எழுத்தாளர்கள் திருமணத்தின் பின் மெதுமெதுவாக தமது எழுத்துப்பணியை முடித்துக்கொள்வதையே காணக் கூடியதாக உள்ளது. சில பெண்எழுத்தாளர்களே திருமணத்தின் பின்னும் எழுதிக்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் கணவன் பிள்ளைகள் வேலை வீட்டு வேலை என அவர்களின் நேரம் மிக குறைந்து வருவது கண் கூடே.
இதனால் காலப்போக்கில் அவர்களின் கையில் இருந்த பேனா மூலையில் முடங்கி விடுகிறது என்பது பெருந்துயரே. ஆனாலும் சில பெண்எழுத்தாளர் திருமணத்தின் பின்னும் எழுதிவருகிறார்கள். அதில் பெரும்பகுதியினர் குடும்ப வாழ்வைத் தொலைத்தவர்களாக தனித்து வாழ்ந்து கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பது கண் கூடே. ஏன் ஒளவையாரை எடுத்தக்கொண்டாலே தனித்த மனிசியாக இருந்ததாகவே வரலாறு கூறுகிறது.
பெண் எழுத்தாளர் குடும்பத்தில் இருந்து பிரிந்து எழுத்தை தொடங்குவதற்கான காரணங்களை ஆராய்கிறபோது பல அதிர்ச்சிமிக்க தகவல்கள் கிடைத்தன.
கணவனின் அனுசரணை ஒத்துழைப்பு இன்மை. கணவனின் சந்தேகப்பார்வை . எழுதும் எழுத்தின் மீதான விமர்சனமின்றி அந்த பெண் எழுத்தாளர் மீது சந்தேகத்தோடு வைக்கும் வாசகரின் விமர்சனம். இத்தகைய தன்மையால் ஒரு உணர்வு மிக்க பெண் எழுத்தாளியால் கணவனோடு இருந்து எழுத முடியாமல் போகிறது . இதனால் அந்த பெண் எழுத்தாளி விவாகரத்தை பெற்றுக்கொண்டு தனித்து நின்று எழுத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.
சமூகத்தின் எழுந்தமான விமர்சனத்தால் சந்தேகப்பார்வையால் மனம் துவண்டு தற்கொலை செய்த பெண் எழுத்தாளரும் உளர். அதேபோல் பேனாவை தூக்கி எறிந்து விட்டு குமுறும் மனதுடன் வாழும் பெண் எழுத்தாளரும் உளர். ஏன் சில பெண் எழுத்தாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவங்களும் உள. எத்தனை வேதனைகளுள் ஒரு பெண் எழுத்தாளி வளரவேண்டி உள்ளது.
ஆண் எழுத்தாளருக்கு இத்தனை துன்பமும் கிடையவே கிடையாது. சிந்தனை மலர மலர அவர்கள் எழுத வேண்டியது தான். வேலைப்பளுவோ அன்றி குடும்ப அக்கறையோ தேவையில்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். அங்கே ஆண் எழுத்தாளி வைத்தது தான் சட்டம். மனைவி எதையுமே கேட்க மாட்டாள். அவள் தனது கணவனின் முன்னேற்றத்திற்கும், தனது குடும்பத்திற்குமாக மாய்ந்தே போவாள். இதை விட அது அந்த ஆணின் தொழில் என வேறு பிதற்றிவிடுவதும் உண்டு.
ஆண் எழுத்தாளி எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப்போகலாம். அது கருத்தோடு நோக்கப்படும். விமர்சனம் அந்த ஆணையோ அல்லது அவனின் குடும்பத்தையோ சாடாது. எழுத்தோடு மட்டுமே நின்று கொள்ளும். ஒரு ஆண் எழுத்தாளன் காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எதையும் எழுதலாம். கற்பனையில் கூட தனது சிந்தனைக்குள் கொண்டுவந்து வார்த்தையால் வடித்து விடலாம்.
அது சமூகத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறான் என கூறும் வாசகர் கூட்டம் ஒரு பெண் எழுத்தாளி காதலை காமத்தை சமூக வரம்பு மீறலை எழுதிவிட்டால் அவளே அதை செய்ததாக குற்றச்சாட்டு வைத்து விமர்சனத்தை தந்துவிட்டுப்போகிறது. இதனால் ஒரு பெண் எழுத்தாளியால் உள்ளதை சமூகத்தில் கண்டதை அதனால் தனக்கு ஏற்பட்ட மன உணர்வுகளை எழுத முடியாதுள்ளது. ஏதோ சடைந்து சாக்குப்போக்குச்சொல்லி எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
ஆண்களுக்கு மட்டுமா காதல் உணர்வு உள்ளது பெண்களிற்கும் தானே.ஒரு பெண் எழுத்தாளி காதல் உணர்வை காமத்தை சமூக வரம்பு மீறல்களை எழுத பயப்படுகிறாள். சமூகம் தவறாக எடுத்து விமர்சித்துவிடுமோ என. இந்த நிலை மாற வேண்டும்.
ஆண் எழுத்தாளி பெண் எழுத்தாளி என்கின்ற பார்வை மாற்றப்படவேண்டும். அப்போதான் பெண் எழுத்தாளியாலும் நல்லதை படைக்க முடியும்.
பெண் எழுத்தாளி குடும்பத்தை விட்டு பிரிகிறாள் என்பது வேதனையே. அங்கு கணவனின் புரிந்துணர்வு அற்ற நிலையில் வெளியேறுதல் என்பது தவிர்க்க முடியாததாகிறது.
ஏன் இன்னும் சில பெண் எழுத்தாளர் குடும்பத்தை விட்டு வெளியேறி எழுத்தை தொடரும்போது அங்கு ஒரு ஆண் அவளை திருமணம் செய்ய முன்வருகிறபோது அதற்கு சம்மதித்து திருமணத்தை அவனுடன் ஏற்படுத்திக்கொள்கிறாள்.
இங்கு அவள் மீண்டும் ஒரு தவறைச் செய்ய முனைகிறாள் என்பது கண் கூடே. புதிய கணவனுக்கும்,பின்னைய நாளில் அந்த பெண் மீது அவள் எழுத்தின் மீதான விமர்சனங்களால் சந்தேகம் குடிகொள்ளாது என்பதில் என்ன நிச்சயம்?!! அங்கு மீண்டும் அவளால் இன்னோர் பிரிதலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.அல்லது பேனாவை தூக்கி எறிந்துவிட்டு குடும்பம் கணவன் என ரண மனதுடன் வாழவேண்டி வருகிறது
சில பெண் எழுத்தாளர் பிரிந்து தனித்திருந்து குழந்தைகளை கவனித்தக்கொண்டு எழுத்தை தொடர்பவர்களாக இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது. ஆனாலும் பல மன உளைச்சலுக்கு ஆளாகிவருவது உண்மையில் தவிர்க்க முடியாததே. காரணம் தனது எழுத்தோடு தன்னால் ஒன்றித்து வாழமுடியவில்லையே என்கின்ற தவிப்பு கட்டாயம் இருக்கும். அதனால் அவளால் தொடர்ந்து நல்லதை சமூகத்திற்கு தரமுடியாதுள்ளது.
ஒரு ஆண் எழுத்தாளன் ஒரு பெண் எழுத்தாளி விட்ட அத்தனை தவறுகளையும் செய்தாலும் இந்த விமர்சகர் சமூகம் எதையுமே கூற தலைப்படாது. மனைவி சரியில்லை என கூறி அந்த பெண்ணின்மேல் பழியைசுமத்திவிடுவதையும் காணக் கூடியதாக உள்ளது.
உண்மையில் ஒரு பெண் எழுத்தாளியால் மட்டுமே சமூக நோக்கொடு பலதை தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன். காரணம் தாய்மைக் குண இயல்பு சமூகத்தில் குடும்பத்தில் அதிக அக்கறை உடையவள் பெண். ஆதலால் ஒரு பெண்ணால்மட்டுமே நிச்சயம் பல நல்லதை இந்த உலகத்திற்கு தரமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவளாக இருக்கிறேன்.
இத்தனை துன்ப துயரங்களில் இருந்து பெண் எழுத்தாளரை காப்பது எப்படி?!!
ஆண்கள் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும், அவர்களிற்கென்று ஒரு உலகம் இருப்பதாகவும் அவர்களின் திறமையை வளர்ப்பவர்களாகவும் பெண்ணின் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவளைமேலும் பல படைப்புக்களை படைக்க செய்பவர்களாகவும். வேலைப்பகிர்தலை புரிந்துணர்வுடன் பகிர்பவர்களாகவும் அத்தனை தவறான சமூக விமர்சனங்களில் இருந்தும் அவளை பாதுகாத்து கொள்பவர்களாகவும் தைரியம் ஊட்டுபவர்களாகவும் இருத்தல் எத்தனை தேவை தெரியுமா!!!!!!!!
அத்தோடு வாசகர்கள் தமது விமர்சனத்தை அந்த பெண் எழுத்தாளிமேல் திணித்து அவளின் குடும்ப அங்கத்தவரை கணவனை அவளின் குடும்பத்தை பிள்ளைகளின் எதிர்காலத்தை மொத்தத்தில் அவளின் வாழ்வை எழுத்தை கனவுகளை சிதைத்து அவளை முடமாக்காது தமது விமர்சனத்தை அவள் எழுதும் எழுத்தின் மீதானதாக வைக்கப் பழக வேண்டும்.
அப்போ தான் ஒரு பெண் எழுத்தாளி நிலைக்க முடியும் பலதை சமூகத்திற்கு தரமுடியும்.
நாம் ஆண் எழுத்தாளரைப்போல் வாழ விரும்பவில்லை. எம்மை சமூக குடும்ப அக்கறையுள்ள உணர்வுள்ள எழுத்தாளர் என கூறுங்கள் அதுவே போதும். எம்மை முடமாக்க நினைத்தால் நான் மேலே எழுதிய சமூக சீரழிவுகள் தான் அதிகம் தொக்கும். அல்லது பெண் எழுத்தாளரே இல்லாது அழிந்து போய் விடுவார்கள்.
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்பர். ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் .......!!!!?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப்பின் தாய் தந்தை அன்பான சகோதரர் அன்பான ஆளுமை மிக்க கணவன் நல்ல பிள்ளைகள் உள சுத்தியோடு நல்ல விமர்சகன் எமது தலைவன்.
ஆனாலும் இவர்கள் எல்லோரிலும் பார்க்க திட்டித்தீர்க்கும் விமர்சகரே அதிக பங்கு வகிக்கிறார்கள். இன்னும் எழுது எழுது என கூறுவது அவர்களே. !!!.
Thanx: நளாயினி தாமரைச்செல்வன்
உங்கள் கருத்துக்களுக்காக .........

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>