![]() |
|
பெண்ணே நீயும் பெண்ணா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்ணே நீயும் பெண்ணா (/showthread.php?tid=7306) |
பெண்ணே நீயும் பெண்ணா - Mathan - 03-21-2004 ஒரு தமிழ் சினிமா பாட்டிலை இருந்து சுட்ட தலைப்பு. மத்தவங்க கவனத்தை திருப்பும் அப்பிடிங்கிறதுக்காக போட்டிருக்கேன். அதை வைச்சே விவாதத்தை ஆரம்பிச்சுராதீங்க. - Mathan - 03-21-2004 அன்னையர் தினம் எமக்குத் தேவையா? எமது இனம் அன்னையை போற்றித் துதிக்கும் இனம். பெண் தெய்வங்களை நிறையக் கொண்ட திருநாடு. பெண்மை போற்றப்படுகிறது, பேணப்படுகிறது, தாய்மை போற்றப்படுகிறது. பருவமடைதலைக்கூட பகிரங்கப்படுத்திவிழா எடுத்து பெண்மைக்கு அங்கீகாரம் கொடுத்து அவளை பெரியவர்களுக்கு சமனான அந்தஸ்த்தில் உயர்த்தி வைக்கிறோம் என கூறுவதோடு இவ்வளவு காலமும் இவள் எனது பெண் இனி இவளை பாதுகாப்பது இந்த ஊரின் கடமையாகிறது வேறு ஒரு ஆடவனுடன் மம்மல் பொழுதில் கண்டுவிட்டால் ஊரே பொல் எடுக்கும் என்றெல்லாம் கூறிப் பெருமைப்படத்தான் முடிகிறது. இது வேண்டுமானால் ஏட்டிலும் எழுத்திலும் பேச்சிலும் தொனிக்கலாம். தாய்மையின் வாழ்வு அலங்கோலமாகி சீழ் ஒழுகி நாறுகிறது. எமக்கெதற்கு அன்னையர் தினம்? தங்கமுலாம் பூசி தாய்மையை போற்றித் துதிக்கிறோம் என மினுக்க நினைக்கிறோம். வேண்டாம் எமக்கு அன்னையர் தினம். அன்னையின் அன்பு வற்றாத நதி, அட்சய பாத்திரம். பொங்கி பிரவாகிப்பது என்றால் அன்னையின் அரவணைப்புத்தான். அன்னையானவள் தன்குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலேயே கரைந்து போகக்கூடியவள். ஆனால் அந்த தாய்மைக்கு மதிப்பு கொடுக்கிறோமா? ஒரு பெண் திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்து விட்டால் அவளை தள்ளி வைக்கிறோம். அவளை தற்கொலைக்கு கூட தள்ளி விடுகிறது சமூகம். ஒரு பெண்ணால் தனித்து கருத்தரிக்க முடியுமா என்ன? ஆண் தண்டனையில் இருந்து தப்புவதோடு வேறுபெண்ணையும் திருமணம் முடித்து விடுகிறான். இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மைக்கு மதிப்பளிக்கிறீர்கள்? அன்னை தாய்மை எல்லாம் வெறும் ஏட்டளவில் தான். இல்லை என்றால் சிசுக்கொலை நடக்குமா? நெல்மணிகளை தொண்டைக்குள் செருகி சிசுக்கொலை. அச்சிசுவை கொலை செய்யத்தூண்டியது எது? இந்த ஆணாதிக்க சமூகம் தானே. குழந்தையை குப்பைத்தொட்டியிலே போடுகிறோம். ஏன்? தாய்மையை மதிக்காத சமூகம் தானே. தெருக்குத்தெரு வீதிக்கு வீதி ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் எத்தனை? ஏன்? ஆண் தப்பிலிருந்து தப்பிக்கும் மனோபாவம் தானே. ஆனால் உலகமே தாய்மையை நோக்கித்தானே புழுதி வாரி இறைக்கிறது. அதனால் கருத்தடை மாத்திரைகள் கூட தாய்மையை நோக்கித்தானே படை எடுக்கிறது.பெண்ணை மலடாக்கும் முயற்சி.சிந்திக்க ஓர் விடயம். எப்படி என்றால் ஒரு பெண் கருத்தரித்து பத்து மாதங்களின் பின்னரே மீண்டும் கருத்தரிக்க முடியும். ஆனால் ஒரு ஆணால் தொடர்ந்து பல பெண்களை கருத்தரிக்கச் செய்ய முடியும். அப்படி இருக்க எப்படி பெண்ணை மட்டும் மலடாக்கும் முயற்சி? ஆணையும் அல்லவா மலடாக்கல் நிகழ வேண்டும். இது ஆணாதிக்க உலகம் அப்படித்தான் செய்யும். எங்கே தாய்மை போற்றப்படுகிறது. மதிக்கப்படுகிறது? கணவன் இறந்து விட்டால் பூ , பொட்டு, பட்டெடுத்து வெள்ளைச்சேலையை கொடுத்து விடுகிறது. நல்ல நிகழ்ச்சிகளில் இருந்து அவளைத் தள்ளி வைத்து விடுகிறது. அதுவும் இளம் பெண்ணாக இருந்து விட்டால் காம வெறியோடு பார்க்கும் கண்கள் தான் அதிகம். எங்கே தாய்மை போற்றப்படுகிறது? விளம்பரங்களில் பெண்ணை ஆபாசமாக்கி பணம் பெறுகிறது. சினிமாவிலோ கமறா பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ரசித்து பணம் பண்ணுகிறது. அழகிகள் போட்டி வைத்து பெண்களை விற்கிறது, முதலாளித்துவ ஆணாதிக்கம். பெண்ணை விற்றால் என்ன, தாயை விற்றால் என்ன, நாட்டை விற்றால் என்ன. எங்கே தாய்மையை போற்றி துதிக்கிறோம்.? ஏன் வேலைக்குப் போகும் பெண்ணிடம் எனக்கு எத்தனை குழந்தைகள்? இனி கருத்தரிப்பியா? என்றெல்லாம் கேட்டுக் குடைகிறது முதலாளித்துவ ஆணாதிக்கம். என்னுடன் வேலை செய்யும் போத்துக்கல் நாட்டைச் சேர்ந்த பெண் , ஏழு வருடமாக பிள்ளைப்பேறு கிடைக்காமல் தற்போது கருத்தரித்துள்ளாள். அவளின் ஆனந்தம் சொல்லி மாளாது. ஆனால் எங்கள் முதலாளியோ சீறிச்சினந்ததுதான் மிச்சம். அண்மையில் கூட டென்மாக்கில் தாய்மை அடைந்துள்ள பெண்ணை முதலாளி தாய்மை அடைந்துள்ளாள் எனும் காரணம் காட்டி அவளை வேலையில் இருந்து நீக்கியதாக டென்மாக் செய்தி கூறி நின்றது. அத்தோடு ஓர் தமிழ்ப் பெண்ணை வதிவிட அனுமதி கிடைக்காத காரணத்தால் ஒன்றரை வயதுடைய குழந்தையை தகப்பனுடன் விட்டுவிட்டு அப்பெண்ணை மட்டும் நாடு கடத்தியதே. எங்கே தாய்மை போற்றப்படுகிறது.? போர் மேகங்கள் சூழ்ந்த நாடுகளில் ஆதிக்க ராணுவத்தினரால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதும் கருத்தரித்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும், ஏன் முதாட்டிகளைக்கூட தம் காம இச்சைக்கு ஆளாக்குவதும் இன்று சர்வ சாதாரணமாக நடந்தேறி முடிகிறது. அத்துடன் புலம்பெயர்ந்து வரும் பெண்களைக் கூட முகவர்கள் விட்டுவைப்பதாய் இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட பெண்களை சிறைக்காவலாளி முதல் உயர்மட்ட பொலிஸ்காரர் வரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்குவதும் விருப்பின்றி சிங்களக் குழந்தைகளை சுமப்பதுவும் சிறைக்கதவுகளுள் இருட்டடிப்பாய் நிகழும் கொடுமை. எங்கேதாய்மை பேற்றப்படுகிறது.? இந்தியாவிலோ கட்டிய மனைவியை, சொந்த சகோதரியை பாலியல் வியாபாரம் செய்யும் நோக்குடன் சகோதரன், கணவனாலேயே விற்கப்படுகிறார்கள். வேசி தாசி என்று வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்க்கிறோம். யாரை பாலியல் தொழில் செய்யும் பெண்களை. உண்மையிலேயே ஓர் பெண் தன் உடலை ஒரு போதும் விற்கத் துணிய மாட்டாள். இப்பிடியான நிலைக்கு தள்ளியது யார்? எமது சமூகம். எப்படி? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை எம் சமூகம் ஒதுக்குகிறது. திருமணத்திற்கு முன் தாய்மை அடைந்த பெண்ணை ஒதுக்குகிறோம். அவர்களை ஆண் சமூகம் காமம் கலந்த கழுகுப்பார்வையுடன் பார்த்து அலைகிறது. இச் சமூகத்தால் ஒதுக்கப்படும் நாம், சாவின் விளிம்புக்கே தள்ளப்படும் நாம் ஏன் அச்சாக்கடையில் விழக் கூடாது என நினைத்து வாழ வழி தெரியாமல் விருப்பின்றி அச்சாக்கடையில் விழுந்து தொலைக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? எமது சமூக அமைப்பும் பெண்ணை துச்சமாக நினைக்கும் பொறுக்கித்தனமும் தானே. விபச்சார தொழில் செய்யும் பெண்ணை ஒதுக்கும் எம் சமூகம் அவர்களுடன் போகும் ஆணை ஏன் ஒதுக்குவதில்லை. அதற்கு அழகாக பழமொழியும் வேறு. அவன் ஆம்பிளை. சேறு கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை களுவுவான் என. இது ஆணாதிக்க சமூகம் அப்படித்தான் சொல்லும். எங்கோ தாய்மையை போற்றுகிறோம், துதிக்கிறோம்.? சங்க கால இலக்கியத்தில் பார்த்தால் கண்ணகி தெய்வமாக்கப்பட்டாள் எதற்காக? கோவலனை ஆடல் மங்கையிடம் சரச மாட விட்டபடியால். அக் கோவலன் அவ் ஆடல் மங்கையை தன் வசப்படுத்த எவ்வளவு மிரட்டியிருப்பானோ யாருக்குத் தெரியும். அரசனாயிற்றே. வாளைக் கூட கழுத்து நேரே பிடித்திருப்பானோ என்னவோ. மாறி கண்ணகி வேறு ஒரு ஆடவனுடன் சரசமாடியிருந்தால், நாமெல்லாம் கண்ணகி தெய்வமாக்கப்பட்டாள் என படித்திருக்கமாட்டோம். கழுவில் ஏற்றப்பட்டாள் என்றே படித்திருப்போம். நளாயினி தன் கணவனை கூத்தி வீட்டிற்கு கூடையில் சுமந்து சென்றதால் போற்றப்படுகிறாள். அதே மாறி நளாயினி வேறு ஓர் ஆடவனுடன் கணவனே விட்டான் என்றால் குடும்பமே புதைக்கப்பட்டது என்றே படித்திருப்போம். கோபால கிருஸ்ணன் கோபியரின் சேலையை திருடி சேட்டை விட்டான். அப்பப்பா அதெல்லாம் கடவுளின் லீலைகள். அதை ஒரு பெண்கடவுள் ஆண்களின் உடைகளை திருடி லீலைகள் புரிந்திருந்தால் பிசாசாக, குண்டோதரியாக, மண்டோதரியாக, சூர்ப்பனகையாக கதையே புனைந்திருப்பார்கள். ஆண்கள் பேனாவை கையில் எடுத்து ஆதிக்கம் செலுத்தியதால் தான் தங்களுக்கு சாதகமாக எழுதிவைத்தார்கள். இலக்கியத்தில் தம் பெயர் பட்டியலிடப்பட வேண்டும் என்பதற்காக வேண்டுமானால் பெண்மையை போற்றுகிறோம், துதிக்கிறோம் என ஆண்கள் எழுதலாம். ஆனால் ஆணாதிக்க சமூக அமைப்பில் தாய்மை அழுகி , புழுத்து நாறுகிறது. இதற்குள் எமக்கு அன்னையர் தினம் ஒரு கேடா? இருந்தாலும் கூட சற்று தெம்பு தரக் கூடிய வகையில் இன்று பெண்கள் கல்வியறிவில் சிறந்தவர்களாக வளர்ந்து வருகிறார்கள். நிறையவே சிந்திக்கிறார்கள். பல புதிய பெண் எழுத்தாளர் வளர்ந்து வருகிறார்கள். தம் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளை அக்கு வேறு ஆணிவேறாக்கி இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு சாவுமணி அடிக்க துணிகிறார்கள். சகல நிர்வாகங்களிலும் தடம் பதிக்கிறார்கள். குசுனியும் படுக்கை அறையும் தான் உலகம் என்ற நிலை மாறி உலகே வீடென்றாகி வருகிறது. குழந்தையைப் பெறுவது என்பது பௌதீகத்தன்மை வாய்ந்த உடல் ரீதியான விசயங்களைப் பெண்களால் தான் செய்ய முடியும். குழந்தையை வளர்ப்பது போன்ற விடயங்களில் ஆண்கள் தம்மை இணைக்கலாம். தாய்மை என்பது ஓர் குண இயல்பு. இந்த குண இயல்பு ஆண்களுக்கும் உண்டு. ஆண்கள் தம்மை குழந்தை வளர்ப்பில் ஈடுபடுத்த தவறினால் நாம் கட்டிக்காத்து வரும் இந்த குடும்ப அமைப்பு நிச்சயமாக சிதறி சுக்கு நூறாகி விடும். அடுத்ததாக இந்த அன்னையர் தினத்தை நாம் கொண்டாடுவோமேயானால் குழந்தைகள் இல்லாது தவித்து தத்தளிக்கும் பெண்ணை நாம் காயப்படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே குழந்தைப்பாக்கியம் இல்லை என்றாலே அவளை எம் சமூகம் மலடி என பெயர் சூட்டி ரணப்படுத்தி மங்களகரமான நிகழ்சியின் போது தள்ளி வைக்கிறது பெற்றால் தான் ஓர் பெண்ணுக்கு தாய்மை உணர்வு உண்டா என்ன. ஒவ்வொரு பெண்ணிடத்திலுமே தாய்மை உணர்வு குடி கொண்டு தான் இருக்கிறது. எம் சமூகம் ரணப்படுத்தியது காணாது என்று அன்னையர் தின விழா வேறு எடுத்து அவர்களை காயப்படுத்த நான் விரும்பவில்லை. எம் ஆணாதிக்க சமூக அமைப்பால் ரணப்பட்டு ரணப்பட்டு காயப்பட்டு, காயப்பட்டு சீழும், சிதழும் வடிந்து நாற்றமெடுக்கும் தாய்மைக்கு அன்னையர் தினம் ஒரு கோடா? தாய்மையை போற்றுகிறோம் , துதிக்கிறோம் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலும் மட்டுமே. குற்றுயிரும், குலை உயிருமாய் இருக்கும் தாய்மையை அழகுபடுத்தி போலிக் கௌரவம் கொடுத்து அரியாசனத்தில் ஏற்றி தமக்குத்தாமே மகுடம் சூட்டப் பார்க்கிறது மகுடம் வைத்த முட்டாள் ஆணாதிக்க உலகு. நன்றி - நளாயினி தாமரைச்செல்வன் நளாயினி அக்கா எழுதி யாழில் வந்த இந்த கட்டுரையை இன்னைக்கு பொருந்தமா இருக்கிறதால இங்கே போட்டிருக்கேன். இதை படிச்சுட்டு உங்க கருத்தை எழுதுங்க - kuruvikal - 03-22-2004 இதை எழுதியவரிடம் ஒரு கேள்வி ஆண் ஆதிக்கம் செய்யாமல் பெண் தாயாக முடியுமா....????! அன்னைக்காக உருகியவன் வரலாற்றில் ஆண் எனும் அவள் மகனே அதிகம் அன்றி பெண் எனும் அவள் மகள் அல்ல....! விதிவிலக்குகள் வழிக்காட்டியானால் இதுதான் நிலையோ.....???! <b>வருடத்தில் அத்தனை நாளும் அம்மாவுக்காயினும் விசேடமாயும் ஒரு நாள் வைத்து அம்மா புகழ் சொல்லி பெண்ணுருவில் கொண்ட பிசாசுகள் கணமேனும் மறந்து தாய் அன்பில் திளைத்திருக்க வாழ் நாள் பூராவும் ஒரு நாள் வேண்டும் தமிழர் நாம் மறந்த அன்னையர் தினம் என்றும் வேண்டும்....!</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Aalavanthan - 03-22-2004 இந்தப்பெண்ணயிம் பற்றி முன்பு கருத்துக்களத்தில் நிறையக் எழுதியுள்ளோம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...er=asc&start=60 - Aalavanthan - 03-22-2004 மேலும் http://www.yarl.com/kalam/viewtopic.php?t=...er=asc&start=15 - kuruvikal - 03-22-2004 நன்றி... ஆளவந்தான் பழசுகளைப் படிக்கும் போது புல்லரிக்குது...நாங்கள் தானா இப்படி எல்லாம் எழுதினோம் என்று கூட இருக்குது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-22-2004 ஆண்களின் அடக்குமுறைகள் உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் அன்னையர் தினமே வேண்டாம் என்பதை நான் ஏற்றுக்குக் கொள்ளமாட்டேன். அது மேற்கத்தைய கலாச்சாரமாக இருந்தாலும் அன்னையர் தினம், காதலர் தினத்தை ஏற்றுக் கொள்ளவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை, - Mathan - 03-22-2004 kuruvikal Wrote:இதை எழுதியவரிடம் ஒரு கேள்வி ஆண் ஆதிக்கம் செய்யாமல் பெண் தாயாக முடியுமா....????! இதற்கு எழுதியவர் பதிலை கேட்டதால் நளாயினி அக்காதான் பதில் சொல்லவேண்டும் இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கின்றேன். ஆதிக்கம் வன்முறை செய்து பெண் விரும்பி தாயாவதில்லை. அது பெண் மேல் திணிக்கப்பட்டது. பெண்ணின் விருப்பமின்றி நடப்பது. பாலியல் பலாத்காரம் இந்த வகையில் அடங்கும். கணவனே ஆக இருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றி உறவு கொண்டால் அது பலாத்காரம் தான். இது இல்லாமல் இருவர் மனமும் உடலும் இணைந்து உறவு கொள்ளும்போது தான் பெண் உண்மையிலேயே தாயாகின்றாள். kuruvikal Wrote:அன்னைக்காக உருகியவன் வரலாற்றில் ஆண் எனும் அவள் மகனே அதிகம் அன்றி பெண் எனும் அவள் மகள் அல்ல....! எதை வைத்து ஆண் தான் அன்னைக்காக உருகியவன் என்று சொல்கின்றீர்கள்? kuruvikal Wrote:விதிவிலக்குகள் வழிக்காட்டியானால் இதுதான் நிலையோ.....???! யாரை விதிவிலக்கு என்று சொல்கின்றீர்கள்? என்ன மாதிரியான விதிவிலக்கு? ஏன்? kuruvikal Wrote:<b>வருடத்தில் அத்தனை நாளும் இந்த வார்த்தை அவ்வளவு நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து. அனைத்து பெண்களுமே அன்னையாவள் தான். - kuruvikal - 03-22-2004 உந்தக் கேள்விகள் சிலதுக்கு விளக்கமா பதில் சொல்ல வெளிக்கிட்டால் சில பெளதீகவியல் இரசாயனவியல் உயிரியல் தத்துவங்களைப் பாவிக்க வேண்டித்தான் வரும் அது இதில களத்தில அவ்வளவு நல்லதாப்படேல்ல....! :wink: சும்மா இருக்கிற நெல்லை அரிசியாக்கி....சோறாக்கி வாய்க்குள்ள தள்ளி... நெற்பயிராக இருந்த நெல் மணியை நீங்கள் ஆதிக்கம் செய்வதாகச் சொன்னால் தங்களுக்கு என்ன செய்யலாம்...????! கோப்பையில இருக்கிற சோற்றை கையாள் வாய்க்குள்ள தள்ள.... சோறு சொல்லிச்சாம் கையே கையே நீ ஆதிக்கம் செய்துதான் நான் வாய்க்குள் அழிந்து போகிறேன் என்று...அப்ப வாய் சொல்லிச்சாம் இவன் 'பொடி' வாயை ஆவெண்டச் சொன்னான் நான் ஆவெண்டன்.... இப்ப சொல்லுங்கோ பாப்பம் ஆர் ஆரில ஆதிக்கம் செய்ததெண்டு....????! விதிக்குப் புற நடைகள் எல்லாம் விதி விலக்குகள்....வீதியில விதிப்படித்தான் வாகனம் ஓட்ட முடியும்.... இல்ல இது சுதந்திர பூமி நான் எப்படியும் ஓடுவன் என்று தாறுமாறாய் ஓட முயலும் ஒருவர் முட்டி மோதி அழிவுக்குத்தான் வழிகாட்ட முடியும்.....! அதுவும் பெண்ணென்றால் அங்க பார் 'கைவேயில' ஆம்பிளை போட்ட கோட்டிலையா நான் வாகனம் ஓடுறது...இதெல்லாம் ஆணாதிக்கம் என்றால்......????????????????! கடவுளேயே பித்தன் என்கிறம் அர்ப்பம் சில பெண்களை பிசாசென்றால் என்னவாம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:உந்தக் கேள்விகள் சிலதுக்கு விளக்கமா பதில் சொல்ல வெளிக்கிட்டால் சில பெளதீகவியல் இரசாயனவியல் உயிரியல் தத்துவங்களைப் பாவிக்க வேண்டித்தான் வரும் அது இதில களத்தில அவ்வளவு நல்லதாப்படேல்ல....! :wink: கேள்விகளுக்கு விளக்கம் சொல்லுங்க பரவால்ல. ஆனா அந்த வியலுகளை (பெளதீகவியல் இரசாயனவியல் உயிரியல்) வைச்சு இதுக்கு சொல்லாதீங்க. அது உங்க சமாச்சாரம் நமக்கு தெரியாது. மற்றது நெல்லை சோறு கிடைக்கும் என்றதுக்காக தான் எல்லாம் செய்கின்றார்கள். மற்றப்படி நெல்லுக்கு ஒரு புண்ணாக்கு நன்மையும் கிடையாது அந்த உதாரணம் பொருந்தாது வேறை உதாரணம் பாருங்க. - kuruvikal - 03-23-2004 நெல்லைச் சோறுக்காக உபயோக்கிக்கச் சொன்னது யார்...ஏன் அப்படிச் செய்யுறீங்கள்...ஏன் அந்த நெல்மணிகளை அழிக்கிறீர்கள்....அவை உங்களுக்கு உணவாகவில்லை என்றால் என்னவாகும்...இந்த உதாரணத்துக்க விடை இருக்கு....நீங்க பதில் சொல்லிப்பாருங்க பொருள் கிடைக்கும்...! முந்திக் கேட்ட மற்றைய கேள்விகளுக்கும் பதில் சொல்லிப் பாருங்க...விடையைத் தொகுத்துப் பாருங்க தெளிவு வரும்...! அப்படி வரேல்லை என்றால் தத்துவம்தான் ஒரே வழி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 பறத்தல் அதன் சுதந்திரம் இருபதாம் நு£ற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண்கவிஞர்களின் தொகுப்பான சொல்லாதசேதிகள் என்னும் கவிதைப் தொகுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதேபோல் புலம்பெயர் பெண்களால் வெளியிடப்பட்ட மறையாத மறுபாதியும் இதற்குள் அடங்கும். 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவ்யா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இருபதாம் நு£ற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் "பறத்தல் அதன் சுதந்திரம்" என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நு£லை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இத் தொகுப்பில் 52 பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக் கவிதைத் தொகுப்பை மாலதி மைத்£¤யின் உதவியுடன் க்ருஷாங்கினி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா முன்னுரை எழுதியுள்ளார். அத்துடன் 11 பெண் ஓவியர்கள் தம் ஓவியங்களால் இத்தொகுப்புக்கு கனம் சேர்த்துள்ளனர். பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அவர்களின் அடையாளம் மற்றும் கலாச் சாரம், பாலியல், குடும்பம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று கட்டுரைகள், கவிதைகள் (கைக்கூ உட்பட), விமர்சனங்கள் நாடகங்கள், ஒவியங்கள் என தமிழ்ச் சூழலில் இன்று பெண்களின் எழுத்துத்துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதை நாம் காண்கின்றோம். அந்தவகையில் இத் தொகுப்பில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் சஞ்சிகைகளிலோ அல்லது பத்தி£¤கைகளிலோ, தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுப்பாக "பறத்தல் அதன் சுதந்திரம்" வெளிவந்துள்ளது. "தனிப் பெண் அடையாளம் விரும்பாத சில பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை இத்தொகுப்பில் சேர்க்க விருப்பம் தொ¤விக்கவில்லை. அவர்களின் கவிதைகள் இதில் இடம்பெறாது போனது மனதிற்குள் சற்று வருத்தம் தான். ஈழப் பெண்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளுக்காக ஈழ மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்களை பலமுறை தொடர்பு கொண்டும் சா¤யான தகவல்கள் பெற முடியவில்லை. அதனால் பல கவிஞர்களின் குறிப்புகள் விடுபட்டுள்ளன" என தொகுப்பாளர்கள் கூறியுள்ளனர். இளவயதிலேயே தற்கொலை செய்துகொண்ட சிவரமணி, இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்ட செல்வி உட்பட ஈழத்து மற்றும் புலம்பெயர் கவிஞர்களான ஆழியாள், ஊர்வசி, ரேவதி, ஒளவை, சங்கா¤ (சித்திரலேகா), சன்மார்க்கா, சுமதிரூபன், கலைவாணி, றஞ்சினி (பிராங்போர்ட்) , ªஐபா, துர்கா போன்றோரும் இந்திய பெண்கவிஞர்களில் அமரந்தா, மாலதிமைத்£¤, சல்மா, குட்டிரேவதி, க்ருஷாங்கினி, கனிமொழி, மொனிக்கா இளம்பிறை, வெண்ணிலா போன்ற இன்னும் பலரும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளனர். இந்திய கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை நான் இத்தொகுப்பிலேயே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் மாலதி மைத்£¤, சல்மா, குட்டிரேவதி, கனிமொழி, அமரந்தா ஆகியோ££¤ன் கவிதைகள் ஏற்கனவே சஞ்சிகைகளிலும் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெண் உடல் மீதான மோகத்தை அதிகமாக வளர்த்தெடுக்கும் இச்சமூகம் பெண்ணின் இருப்பை, சுயதனி இருப்பை வெறுக்கும் மனோநிலையை ஸ்து£லமான அடித்தளமாக வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது. இந்த வெறுப்பு எல்லாத் தளங்களிலும் ஆழ்மனநிலையில் சுரந்து உடல் மனம் இரண்டையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இதுவே பெண்களின் எழுத்தின் மீதும் வெறுப்பான பார்வையை உருவாக்குகிறது. வெறுப்பு வேறுதளங்களில் வேறு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அதன் மாற்று வடிவங்களாக தரம், வடிவம், அழகியல் போன்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பெண்ணின் எழுத்தியக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அதற்கான இடத்தை மறுத்தும் ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தன் இருப்பு சார்ந்த கேள்விகளுடனும் முரண்களுடனும் இயங்கும் பெண், தன்னை முற்றிலுமாக இச் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ள முடியாமல், தன்னை அமைப்பின் குரலாகவும் அதே சமயம் அதற்கு எதிரான குரலாகவும் வைத்துக் கொள்ள நேர்கிறது. இங்கு கவிதைகள் அழுகையாகவும், கதறலாகவும், ஒப்பா£¤யாகவும், கூக்குரலாகவும், காதலாகவும், புலம்பலாகவும், வலியாகவும், ஆற்றாமையாகவும், துயரமாகவும், ஏமாற்றமாகவும், கொண்டாட்டமாகவும், கனவாகவும் தொகுப்பாகியுள்ளன. சமீபகாலமாக பெண் கவிஞர்களை நோக்கி வரலாற்று மறுப்பு பார்வைகள் ஆண் கவிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. இம் மறுப்புப் பார்வைகளை வைப்பவர்களுக்கு வரலாறும் தொ¤யவில்லை கவிதையும் தொ¤யவில்லை பெண்ணையும் தொ¤யவில்லை என்கிறார் மாலதிமைத்£¤. ஓளவையார் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ஒளவை என்ற உருவகத்தின் அரசியல் சங்க காலத்தில் மட்டுமல்ல இந்த பின்நவீன காலத்திற்கும் பொருந்தும். "வரப்புயர நீர் உயரும்" என்ற அடியும் தமிழின் இப்பாடலின் மூலம் உலகின் முதல் சோசலிச பெண் கவியாகவும் பெண் அரசியல் கவியாகவும் ஒளவையாரே தொ¤கிறார். தமிழ்க் கவிதை வரலாற்றின் மூன்று மாபெரும் உருவகங்களாக பெண்களே இருக்கிறார்கள். அவர்கள் ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள் என தனது முன்னுரையில் மாலதிமைத்£¤ கூறுகிறார். ஒளவையா£¤ன் எழுத்துத் திறனை எளிதாக மதிப்பிட்டு விடமுடியாதுதான். ஆனால் ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார். பெரும்பாலான புலவர்களைப் போல அவரும் பெண்களுக்கு முத்திரை சேர்த்துள்ளார். வஞ்சகமாகப் பேசும் பெண், மென்மையான நற்பண்புகள் அமைந்த பெண், காமமூட்டும் மைதீட்டிய பெண், கணவன் சொல்லைத் தட்டாத பெண் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் பெண், கணவனுக்குத் தொண்டுசெய்யும் பெண் என்று பெண்களை ஒளவையார் கூறியுள்ளார். அதே போல் ஒளவையார் தன்னுடைய பாடல்களில் பெண்களைச் சித்தா¤த்தா¤க்கும்போது, அவா¤ன் ஆத்திசூடியில் தையல் சொற்கேளேல் ஆசூ 63 வஞ்சகமாகப் பேசும் பெண்ணின் சொற்கேட்டு நடவாதே. மெல்லின் வல்லாள் தோள் சேர் ஆசூ 93 மென்மையான நற்பண்புகள் அமைந்தவளை மனையாளகப் பெற்று இல்லறம் நடத்து மைவிழியார் மனையகல ஆசூ 96 காமகூட்டும் மை தீட்டிய விழிகளுடைய பெண்களது வீட்டை நெருங்காதே. என்கிறார். கொன்றைவேந்தனில், கற்பு எனப்படுவது சொற்திறம்பாம்மை கொ.வே.14 கணவனின் சொல்லைத்தட்டாமல் நடப்பதே கற்பு ஆகும் துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு கொ.வே 41 கணவனுக்கு செய்யவேண்டியவற்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத மனைவி மடியிலே கட்டிக் கொண்ட நெருப்புக்குச்சமமாவாள். (நன்றி சக்தி) இப்படி ஆத்திசூடி, கொன் றை வேந்தன், நல்வழி வெண்பாவிலும் ஒளவையார் பெண்களை வியாக்கியானப்படுத்துகிறார். மனது பற்றியும் துறவு, தானம், தர்மம், கல்வி என்று பல நல்ல விடயங்களை கூறும் ஒளவையார் பெண்களை அவர் எவ்வாறு தனது பாடல்களில் சித்தா¤த்துள்ளார் என்று நோக்கும் போது பல கேள்விகள் எழும்புகின்றன. எனினும் இதை விட்டுவிடுவோம் ஏனெனில் இது இன்னுமொரு தலையங்கத்தின் கீழ் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாலதிமைத்£¤யின் "ஒளவையிலிருந்து ஒளவை" வரை என்ற தலையங்கம் இதை எழுதத் து£ண்டியது. இத் தொகுப்பில் இடம் பெற்ற சில கவிதைகள் <b>என் நாக்கு எனக்காக மட்டும் பேசமுடியாதபடி கட்டுப்பட்டுள்ளதால் என் அலறல்கள் எனக்குள்ளேயே அடங்கிப்போகின்றன. </b> என்று தனது மௌனக்கூடு எனும் கவிதையில் விளிக்கறார் இளம்பிறை. கல்பனாவின் பறத்தல் அதன் சுதந்திரம் என்ற கவிதை, <b>சிறகை அசைத்துப் பார்த்து பறத்தலுக்கான கடைசி முயற்சியாய் விட்டுவிட்டேன் அதே பூவருகே</b> என அற்புதமாகச் சொல்கிறது. <b>பூட்டின தனிமையைத் தினமும் தாழ் திறக்கிறேன் இருளின் தனிமைக்கு மரணத்தின் சாயல் முன்னெப்போதுமில்லாத குளிர்மை நடுக்க துக்கம் பிதுங்கின விழிகளோடு ஏன் பொழுதுகள்- பூமியுள் புதைந்தழ வேண்டும் ஏன்னை மரணியுங்கள் </b> என்று கதறுகிறார் பிருந்தா, "மேலும் சில மரணக்குறிப்புகள்" என்ற கவிதையில். ப்£¤யத்தின் இரண்டு கடிதங்கள் என்ற கவிதை உணர்வுகளில் ஆழமாக ஊடுருவுகிறது இப்படி, <b>இறுகியிருக்கும் மௌனங்களில் துச்ச நாவுகள் துழாவி சுவைக்கின்றன அந்தரங்கத்தின் உட்சுவர்கள் மீது கசிந்து தம்மின் துயரங்களையோ ஆட்கொள்ளவியலாத ஆன்மாவின் து£ய்மையையோ அறிவதில்லை கோணலாகிப் போன உறவின் நேர்கோட்டுப் பாதை விதியென்பதை விட்டுக் கொடுக்காததை ஏவா¤டமோ பெறும் மர்ம உறவு, சந்தேகத்தின் சூல் ஒன்றை உடலுக்குள் நிச்சயமாய் ஏற்றுக் கொள்ளவியலாது. போன திசைகளின் சுவடுகளை நினைத்துப் பார்க்கிறேன். வெறிகொண்ட உடற் கசிவுகளைத் துடைத்துக் கொள்ள ஒரு கைக்குட்டை போதுமென்கிறாய் அந்தரங்க சுத்தியின் மீது ஆணையிட தயா£¤ல்லை அருவருப்பான சத்தியத்தின் மீதும் கா¤ச் சாயம் பூசி விடுகிறேன். ஏங்கோ நடுநிசியில் எல்லைகளைக் கடந்து பெயரறியாத ஒருத்தியின் உடலைச் சுவைக்கின்றாய் நான்கு டாலருக்கு </b> இப்படி பல பெண்கவிஞர்களின் கவிதைகள் இத் தொகுப்பில் ஆழ வேரோடி விருட்சமாகியிருக்கிறது. உண்மையிலேயே ஒரு நு£லை அல்லது தொகுப்பு ஒன்றை வெளியிடும் போது அதில் ஏற்படும் சிக்கல்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆக்கங்களை சேகா¤ப்பதில் உள்ள தடங்கல்கள் என பலவிதமான பிரச்சினைகள், தொழில்நுட்பக் குறைபாடுகள் இருப்பதை பு£¤ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் நாம் ஒரு தொகுப்பை வெளியிடும் போது அதில் தவறுகள் ஏற்படாமல் மிகக் கவனமாக செயற்பட வேண்டியே உள்ளது. கட்டுரைகளில் வசனங்கள் விடுபடுவது அல்லது எழுத்துப்பிழை நேருவது சிலவேளைகளில் நிகழ்த்தும் அனர்த்தத்தைவிட சொல்லிறுக்கங்கள் கொண்ட கவிதைகளில் இது அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர்களான ஆழியாள், செல்வி, சிவரமணி, சங்கா¤, ஊர்வசி, ஒளவை ஆகியோ£¤ன் கவிதைகளில் வசனங்கள் விடுபட்டும் எழுத்துப்பிழைகளும் உள்ளன. இது கவலைக்கு£¤ய விடயமாகும். இக் குறைபாட்டை சுட்டிக்காட்டுவதென்பது தொகுப்பாளர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது என்பதாகாது. அதேபோல் கவிதைகளின் பிரசவமென்பதும் இலகுவில் நடப்பதில்லை என்ற பு£¤தலோடு நாம் கவிஞர்களின் தரப்பில் நின்று சிந்திக்கவேண்டியுமுள்ளது. பலவேறு காரணங்களால் கடின உழைப்பையும்மீறி நிகழ்ந்துவிடும் இவ்வகை தவறுகள் தவிர்க்கப்ட்டே ஆக வேண்டும் என்பதில் முரண்பட ஏதுமில்லை. உதாரணமாக, சிவரமணியின் கவிதை ஒன்றில் இனியும் என்ன து£க்கியெறியப்பட முடியாத கேள்வியாய்... என்ற வா¤ இத் தொகுப்பில் து£க்கி எறியப்படாத கேள்விகளாய் என வந்துள்ளது. அதேபோல் வையகத்தை வெற்றி கொள்ள என்ற சிவரமணியின் கவிதையை பிரசு£¤த்துவிட்டு எழுதியவர் சன்மார்க்கா என்றும், இவர் ஈழப் பெண் கவிஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சிவரமணி,செல்வி கவிதைகளின் தொகுப்பு தாமரைச் செல்வி பதிப்பகத்தினால் 1996ம் ஆண்டு வெளிடப்பட்டது. அப் புத்தகத்தில் சிவரமணியின் "வையகத்தை வெற்றி கொள்ள" கவிதை பக்கம் 52 இல் இடம்பெற்றுள்ளது.) அதே போல் ஆழியாளின் கவிதையான மன்னம்போ¤கள் என்ற கவிதையின் தலைப்பில் மன்ன போ¤கள் என்று அச்சாகியுள்ளது. சங்கா¤யின் கவிதையில் வசனங்களே விடுபட்டுள்ளன. பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நெட்டுயிர்க்கும் ககனமெல்லாம் இசை நிறையும் என இத் தொகுப்பில் அச்சாகியுள்ளது ஆனால் பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நடனமிடும் காற்று நெட்டுயிர்க்கும் கானமெல்லாம் இசை நிறையும் என வரவேண்டும். இப்படி சில கவிதைகளில் எழுத்துப் பிழைகளும் வசனங்கள் விடுபட்டும் பெயர்கள் மாறியும் உள்ளன. மற்றபடி இதைத் தொகுத்த தோழிகளின் உழைப்பும் பெண்ணியத்தின் பாலான அவர்களின் அக்கறையும் செயற்பாடும் பாராட்டத்க்கத்தக்கவை. பெண்ணிய எழுத்துக்களின் ஒரு பதிவாக பறத்தல் அதன் சுதந்திரம் தொகுப்பு வெளிவந்துள்ளது எனலாம். இந்நு£லின் தொகுப்பாளர்: க்ருஷாங்கினி 98 சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை தாம்பரம் சானடோ£¤யம் கிழக்கு சென்னை 47 நன்றி - றஞ்சி (சுவிஸ்) - kaattu - 03-23-2004 kuruvikal Wrote:சும்மா இருக்கிற நெல்லை அரிசியாக்கி....சோறாக்கி வாய்க்குள்ள தள்ளி... நெற்பயிராக இருந்த நெல் மணியை நீங்கள் ஆதிக்கம் செய்வதாகச் சொன்னால் தங்களுக்கு என்ன செய்யலாம்...????! <b>ஐயோ................!!!!!!!!!!!!!!!!!!!! பெண்ணும் நெல்லுப் போலை ஐடமில்லையப்பா. உயிருள்ள உணர்வுமுள்ள ஒரு மனித ஜென்மம். </b> - nalayiny - 03-23-2004 பிபிசி அவர்களிற்கு வீதியில் போகும் சில தெருப்பொறுக்கி, பெம்பிளை பொறுக்கியளுக்கு காவாலி கடைப்புலயருக்கு தறுதலையளுக்கு எல்லாம் எனக்கு பதில் சொல்லி பழக்கமில்லை.நீங்க விரும்பினாபதில் சொல்லி சொல்லி செருப்பாலை சாத்தினாலும் சரிதான் கட்டி வைச்சு அடிச்சாலும் சரி தான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-23-2004 யாழ்களத்துக்கும் சாணி வீச்சு விழுகுது....போல....! மோகன் அண்ணா இதுகளைக் கண்டு கொண்டால் என்ன...???! எமக்கென்ன உங்கள் களத்துக்குத்தான் கெட்ட பெயர்...! சந்திரனைப்பார்த்து சில வெறி நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்னவாம்...அப்படி என்று நாங்கள் இருக்கலாம்...ஆனால் களம் இருக்க முடியுமா....???! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 03-23-2004 இதோ பார் நண்பா.... நெல்லு என்பது ஜடம் என்பதெல்லாம் இன்னும் உலகத்தில இருந்து ஆராருக்கோ எல்லாம் விடுதலை பேசுதுகள்....என்ன கேவலம் சமுதாயத்துக்கு நிகழ்ந்ததோ.....????! காத்து சும்மா வாயால காத்தாக் கொட்டினாப் போதாது சிந்திச்சு சொல்லுவைச்சுப் பேசுங்கோ அப்பதான் அர்த்தம் பிறக்கும்....குறைஞ்சது நாலு கெட்ட வார்த்தை அங்க மேல எழுதி இருக்கிறது போல இல்லாட்டி இன்னும் மேல...! யார் யார் எவ்வழியோ அவ்வழியே அவர் புத்தி போமாம் சொல்லும் சிதறுமாம்...உண்மை போலத்தான் கிடக்கு...ஜடங்களோட நமக்கென்ன பேச்சு...! பேசித்தான் ஆகப்பேவதென்ன....????! நெல்லு ஜடமில்ல சில பெண்கள் இன்னும் .........???! :roll: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- anpagam - 03-23-2004 ....... :oops: :roll: - kuruvikal - 03-23-2004 யாரின் மீது கோபம் அன்பகம்...பெ** வெறி நாய்கள் கடிக்கும் கவனம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:யாரின் மீது கோபம் அன்பகம்...பெ** வெறி நாய்கள் கடிக்கும் கவனம்....! குருவி நீங்கள் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து எழுதினால் நல்லது என்று நினைக்கின்றேன். நீங்கள் அப்படி செய்யாமல் விட்டால் மற்றவர்களும் உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கமாட்டார்கள். இது எனது தனிப்பட்ட ஆலோசனை. - kuruvikal - 03-23-2004 இங்கு குருவிகள் எழுதிய தனிப்பட்ட விமர்சனம் என்று தாங்கள் கண்டதை இங்கு தருவீர்களா.....????! :oops: அனால் களவிதியின் பிரகாரம் களத்தில் அநாகரிக வார்த்தைகள் எது குறித்தும் பயன்படுத்தக் கூடாது....ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது அது உங்கள் கண்ணிற்குத் தெரியவில்லையோ...என்ன சேலைத்தலைப்பாலா மறைக்கப்பட்டுள்ளது உங்கள் கண்கள்....! அது ஏன் ஒவ்வொரு தடவையும் குருவிகள் மீதுதான் உங்கள் பார்வைகள் செலுத்தப்படுகிறது...இங்கு வெறிபோட்டுவிட்டு மதியிழந்தவர்கள் பேசும் வார்த்தைகள்... நாம் சில கருத்துக்களை எழுத முன்னரே வந்தாயிற்று...! அவை உங்கள் கண்ணில் படவில்லையா அல்லது அதுதான் நீங்கள் ஆராதிக்கும் சொற்களோ....நீங்கள் என்ன குத்தகை எழுத்தாளரா மற்றவர்களுக்கு....தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் கருத்தால் நடுநிலை இல்லாத எவரினதும் கருத்துக்கும் நாம் செவிசாய்க்க முடியாது...! களவிதியின் கீழ் எங்கள் கருத்துக்கள் தொடரும்....! :evil: :evil: :evil:
|