07-24-2004, 10:31 AM
<b>கருணாவின் அரசியல் - நிலாந்தன்.</b>
யுத்தநிறுத்தத்தின் குழந்தையே கருணாவின் பிரச்சினை அது இப்பொழுது யுத்தநிறுத்தத்தையே முறித்துவிடும் ஒரு கட்டத்துக்கு நெருக்கமாக வந்து விட்டது.
யுத்த காலங்களில் இனமான உணர்வுகளே மேலோங்கும். பிரதேச அபிமானங்கள் பின்னால் போய்விடும், அல்லது இரண்டாம் பட்டசமாகிவிடும். ஒரு பொதுப்பகைவனுக்கு எதிராக எவ்வளவுக்கவ்வளவு ஐக்கியப்பட முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு ஐக்கியப்பட வேண்டிய ஒருதேவை எப்பொழுதும் யுத்தகாலங்களில் இருக்கும்.
யுத்த காலமொன்றில் கருணாவின் விவகாரம் போன்ற பிரச்சினைகளுக்கு இடமேயிருக்காது. எனவே கருணாவின் பிரச்சினை ஒரு யுத்த நிறுத்த குழந்தையே. ஆனால் அது அப்பொழுது யுத்தநிறுத்தத்தை முறிக்கும் நிலைக்குக் கிட்டவாக வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.
இதில் புலிகள், கருணாவை எந்தளவுக்கு ஒருபொருட்டாக எடுக்கிறார்கள் என்பதை விடவும் முக்கியமானது ? கருணாவுக்கு அரசாங்கம் புகலிடம் கொடுப்பதாக அவர்கள் நம்புவதுதான் ஏனெனில் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் ஒருதரப்பாகிய அரசாங்கம் கருணாவுக்கு புகலிடம் தருவதன் மூலம் வடக்குக்கிழக்கை பிரிக்க நினைப்பதென்பது சமாதானத்துக்கான அரசாங்கத்தின் அரசாங்கத்தின் அடிப்படை விசுவாத்தையே சந்தேகிக்க வைப்பது என்பதால் கருணாவுக்கு புகலிடம் தரும் ஒரு அரசாங்கத்தை நம்பிக் கதைக்கவோ சமாதானம் செய்யவோ முடியாது என்பது புலிகள் நம்புவது தெரிகிறது.
ஆரசாங்கமோவெனில், கருணா சனநாயக நீரோட்டத்திற்கு இணையப்போகிறார் என்று கூறி அதன் மூலம் கருணாவுக்கும் தனது அமைச்சர் தேவானந்தாவுக்கும் இடையிலான உறவை நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
கருணா தன்னுடன் இருப்பது தனக்கு பலம் என்று அரசாங்கம் நம்புகிறதா? ஆயின் அவர்கள் கருணாவை இரண்டு விதமாகப் பயன்படுத்தக்கூடும்.
முதலாவதாக, அரசியல் தளத்தில் அவரை கிழக்கின் தேவானந்தாக்குவது. அதாவது, வடக்குக்கிழக்கு இணைப்பை மேலும் பலவீனப்படுத்த முயற்சிப்பது.
இரண்டாவதாக, யுத்தத்தில் கருணாவை வைத்து எதையாவது செய்யலாமா என்பது அதாவது, கருணா குழுவை ராசிக்குழு மாதிரி ஒரு துணைப்படைக்குழுவாக வைத்திருப்பது.
இந்த இரண்டு சாத்தியக்கூறுகளுமே கருணாவை தமிழ் தேசிய அரசியல் அரங்கில் பெருமளவுக்கு தனிமைப்படுத்தி அவரது அரசியலை வரையறைக்குட்பட்டதாக ஆக்கக்கூடியவை. இமைச்சற்று விரிவாகப் பார்ப்போம்.
முதலாவதாக, <b>கருணாவை கிழக்கின் தேவானந்தாவாக்குவது.</b> தேவானந்தாவை விடவும் கருணாவிடம் மேலதிகமாக இருப்பவை இரண்டு ஒன்று பிரதேசவாதம், மற்றது, அவர் புலிகளின் முன்னாள் பிரதான தளபதிகளில் ஒருவராக இருந்த அனுபவம்.
கிழக்கின் அரசியல் கருணா ஒரு தேவானந்தாவாக எழுச்சி பெறலாமா இல்லையா என்பதை தீர்மானிக்கப்போவது யுத்தநிறுத்தமே. ஏனெனில் கருணாவின் பிரச்சினை யுத்தநிறுத்தத்தின் குழந்தை. அந்தக்குழந்தை தாயைத் தின்னியாக வளரும் போது அதாவது, யுத்தநிறுத்தம் முறியும் போது கருணாவின் அரசியல் மிகவும் வரையறைக்குட்பட்டதாக மாறிவிடும். ஏப்படியெனில் - யுத்தம் என்று வந்து விட்டால் அரசதுருப்புக்களின் பிரதேசம் பார்த்து யுத்தம் செய்வதில்லை. யுத்தம் அதற்கேயான குரூர விதிகளுடன் முன்னேறும் போது அழிவுகளும் கொலையும், வல்லுறவுகளும் நிகழும் போது தம்மை ஆக்கினைப்படுத்தும் எதிரியுடன் நிற்கும் ஒரு நபர் தமது அரசியலுக்கு தலைமை தாங்குவதை கிழக்கின் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதாவது யுத்தகாலங்களில் கருணாவின் அரசியலுக்கு கிழக்கின் மதிப்பு இருக்கப்போவதில்லை.
யுத்தகாலங்களில் தமிழர் ? சிங்களவர்கள், தமிழர் ? முஸ்லிம்கள் என்ற அடையாளங்கள் தான் மேலெழும், பிரதேச அடையாளங்கள் ஒரு யுத்தச்சு10ழலில் மங்கிப் பின் சென்று விடும்.
கருணா நம்புகிறார் பிரதேச வாதமும் அரசாங்கத்துடன் நிற்பதும் தனது பலங்கள் என்று. இவை இரண்டும் ஒன்று மற்றதின் விளைவாயிருப்பவை. கிழக்கில் பிரதேச வாதம் கதைத்த எவருமே இறுதியாகச் சென்றடைந் இடம் கொழும்புதான். அதாவது அரசாங்கத்திடம் தான். கருணாவும் இப்பொழுது அங்கே போய்ச் சேர்ந்துவிட்டார். ஆனால் யுத்தகாலத்தில் கிழக்கில் அரசபடைகள் குறிப்பாக எஸ்.ரி.எவ் தமிழர்களை வேட்டையாட வரும் போது கருணாவால் மக்களை காப்பற்றவோ, பாதுகாக்கவோ முடியாதிருக்கும்.
அதாவது, கருணாதனது பலம் என்று கருதுதுவது எதுவோ அதுதான் - அரசாங்கத்துடன் நிற்பது ? தமிழர்களின் தேசிய அரசியல் அவருடைய பிரதான பலவீனமாயிருக்கிறது.
இது யுத்த காலங்களில் மிக்குரூரமாக வெளித்தெரிய வரும் போது அதுவும் கிழக்கின் மிகச்சிக்கலான பல்லினச்சூழலில் கருணாவின் அரசியல் வரையறைக் குட்பட்டதாக மாறிவிடும்.
எனவே ஒரு யுத்தம் மூழ்வது ஒப்பீட்டளவில் கருணாவுக்கு பாதகமானது. ஆனால் இப் பொழுது கருணாவுக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான உறவே யுத்தமொன்றுக்கு போதுமான காரணமாகமாறி விடும்போலிருக்கிறது. இது கருணாவின் அரசியலில் காணப்படும் ஒரு வேர்நிலைமுரண்.
இரண்டாவது, கருணா குழுவை ஒரு துணைப்படைக் குழுவாக அதாவது ராசிக்குழு போலப் பயன்படுத்துவது. கருணா புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவர் என்பதை வைத்துக் கொண்டு அவரைவைத்து யுத்தகளத்தில் நிறையச்சாதிக்கலாம் என்று அரசபடைத்துறை நம்பக்கூடும் ஆனால் கருணாவின் பிரச்சினை தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடப்பவற்றை தொகுத்துப்பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும். அதாவது <b>கருணா ஒரு சண்டை செய்யவல்ல தளபதியாக இருக்கலாம். ஆனால் அவரொரு போரியல் நிபுணர் அல்ல.</b>
அவர் தனது பிரச்சினையை தொடங்கி சுமார் 40 நாட்களின் பின்பே புலிகள் அவருக்கு எதிராப் படை நடவடிக்கை ஒள்றை தொடங்கினார்கள். இந்த 40 நாட்களும் கிழக்கில் யுத்தத்தை நடாத்தியது பெருமளவுக்கு பிஸ்ரல் குழுவே. இந்த 40 நாட்களிலும் கருணா தனக்கு எதிராக எடுக்கப்படக்கூடிய படை நடவடிக்கைகளைக் குறித்து எத்தகைய முன் அமானமும் இன்றி அல்லது குறைந்த பட்சம் ஊகங்களுமின்றிக் காணப்பட்டார். என்பதைத்தான் அவரது பிந்திய நடவடிக்கைகள் நிரூபித்தன.
அவர் 20 ஆண்டுகளாக உறுப்பினராகவும் தளபதியாகவும் இருந்த இயக்கமும் அதன் தலைமையும் எப்படியெப்படி அவரைச்சுற்றி வளைக்க முடியும் என்பது குறித்து சிந்தித்திருக்க வேண்டிய காலங்களையெல்லாம் அவர் தனது வல்லமைக்கு மீறிய பிரகடனங்களை வெளியிடுவதில் அல்லது தனது முதுகைத்தானே தட்டிக்கொள்வதில் தான் விரயம் செய்தார்.
அவர் சண்டையை எதிர் கொண்டவிதமும் பின்னர் தப்பியோடியவிதமும் அவருடைய படைத்துறை நிபுணத்துவத்தையோ மேதாவிலாசத்தையோ வெளிக்காட்ட தவறிவிட்டன. உண்மையில் கருணாவின் பிரச்சினை முதலில் புலிகள் பலத்திற்கு சோதனையாக தொடங்கினாலும் 40 நாற்பது நாட்களின் பின் அதுவே புலிகளின் பலத்தை மீள ஒரு தடவை திட்ட வட்டமாக நிரூபிப்பதாகவும் மாறியது. இதன்படி கூறின் கருணா சமாதான காலத்தில் புலிகளின் பலத்தை நிரூபித்தார் என்றே சொல்லவேண்டும்.
துவிர அண்மைக்காலங்களில் கிழக்கில் கருணா குழுவினரால் கொல்லப்பட்டவர்களில் பொரும்பாலானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆயுத பாணிகள் அல்ல என்பதை இங்கே சுட்டிக் காட்டவேண்டும். நிராயுதபாணிகள் அல்லது உடல்வலுக் குறைந்தவர்கள் மீதான கரந்துறைத்ததாக்குதல்களே பெரும்பாலானவை.
எனவே, தனது கிளர்ச்சியைத் தொடங்கியதிலிருந்து கருணா இதுவரை தனது குழுவின் போர்த்திறணையோ அல்லது தனது தனிப்பட்ட இராணுவ மேதாவிலாசத்தையோ வியக்கத்தக்க வகையில் நிரூபித்திருக்கவில்லை. இதுவரையிலும் அவர்களால் முடிந்ததெல்லாம் நாட்டை யுத்தத்திற்கு கிட்டவாகக் கொண்டு வந்ததுதான்.
இந்நிலையில் இத்தகைய ஒரு நபரை நம்பி அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முறிக்கப்போகிறதா என்பதே இப்போதுள்ள கேள்வி.
கருணாவின் அரசியல் எனப்படுவது எல்லாவிதங்களிலும் நாட்டை யுத்தத்தைநோக்கியே இட்டுச் செல்வதாகியுள்ளது. கருணாவை அவர்கள் ரீதியாகப் பாவித்தாலும் அது வடக்கு கிழக்கு இணைப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகவே புலிகளால் பார்க்கப்படும். இது சமாதானம் செய்வதைக் கடினமாக்கும் இரண்டாவதாக, கருணாவை படைத்துறை ரீதியில் பாவிப்பது என்றாலும் அதற்கு யுத்தத்தை தொடங்கியாக வேண்டும்.
எனவே எப்படிப்பார்த்தாலும் கருணாவின் அரசியல் யுத்தத்திற்குக் கிட்டவாக வருகிறது.
ஒரு இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்காகவே தான் அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் தப்பிச்சென்றதாகக் கருணா கூறியிருந்தார். ஆனால், அவர் தப்பிச் சென்ற போது கிழக்கில் பிரகடனம் செய்யப்படாத ஒரு நிழல்யுத்தத்துக்கான களத்தையும் திறந்து விட்டே சென்றிருக்கிறார். கிழக்கில் இப்பொழுது புத்திஜீவிகளும் பத்திரிகையாளர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே நகர் புறங்களில் யாரும் யாரையும் நம்பிக்கதைப்பதில்லையாம். சொந்தச் சகோதரர்களே ஒருவர் மற்றவரை சந்தேகத்துடன் பார்கும் ஒரு நிலை, ஒரு பத்திரிகையாளர் சொன்னார்? மோட்டார் சைக்கிள் ஓடும் போது யாராவது பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று கண்ணாடியில் தெரிந்தால் காது கூசுகிறது. உயிரும் கூசுகிறது என்று இதைவிட யுத்தம் பறவாயில்லை ஏனெனில் அது அதிகம் வெளிப்படையானது என்று ஒரு கூர்மையான அவதானி சொன்னார்.
<b>சமாதானத்தை விடவும் யுத்தம் வெளிப்படையானது, அல்லது பறவாயில்லை என்று கூறும் ஒரு நிலையை கிழக்கில் தோற்றுவித்ததன் மூலம் அந்தமக்களுக்கு கருணா விட்டுச்செல்லப்போவது எதை?.</b>
நிலாந்தன் - Eelanatham/ Sooriyan

<b> . .</b>