07-23-2004, 04:10 PM
ஐரோப்பிய விழா: விருமாண்டிக்கு விருது
வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய படவிழாவில் கமல்ஹாசனின் 'விருமாண்டி' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கம்யூனிஸ ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில் நடைபெறும் ஐரோப்பிய படவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கமல் அங்கு சென்றார். பெரும்பாலும் வெளிநாட்டு பட விழாக்களில் விருதுகள் எல்லாம் விழா தினத்தன்றுதான் அறிவிக்கப்படும்.
விழாவில் 'விருமாண்டி' படம் திரையிடப்பட்டது. விழா தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது அந்த இனிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. விழாவில் திரையிடப்பட்ட படங்களில் சிறந்த படமாக 'விருமாண்டி' தேர்வு செய்யப்பட்டது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல துறைகளில் கமல் ஒருவரே கலக்கியிருப்பதை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்கள்.
விருது வாங்கிய குஷியோடு கமல் சுவிட்ஸர்லாந்து செல்கிறார். அங்கு 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்துக்காக கமலுடன் டூயட் பாட ஸ்னேகா உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே போய் சேர்ந்துவிட்டனர்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>