07-23-2004, 02:19 PM
<span style='font-size:21pt;line-height:100%'> <b>வெல்கம் டாக்டர் கமல்! </b>
எம்.பி. உதயசூரியன்
\"டாக்டர் கமல்ஹாசன் வாழ்க!' இதுவரை ரசிகர்கள் போட்ட இந்த வாழ்த்து கோஷம் இப்போது உண்மையாகிவிட்டது.
அரிதாரம் பூசும் நடிகர்களுக்கிடையே நிஜமாகவே கமல் ஒரு அவதாரம். கனவுத் தொழிற்சாலையின் நிகரற்ற கலைஞன். இன்னும் இளமை ஊஞ்சலாடும் இவர் ஒரு ஆச்சரிய மனிதர். நடிகர் என்ற வசீகர வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டு படைப்பாளி, டெக்னீஷியன், மனிதநேயர், சமூக விமர்சகர் என்கிற பல ஒளிவட்டங்கள் கமலுக்கு உண்டு.
\"நடிப்புப் பல்கலைக்கழகமான' கமல்ஹாசனின் 44 ஆண்டுகள் கலைச்சேவையை பாராட்டி டாக்டர் பட்டத்தை வழங்குகிறது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.
\"வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' கேஸட் வெளியீட்டு விழா மேடையில் கமலுக்கு இந்த கெளரவத்தை வழங்குவதாக அறிவித்தார் சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஜேப்பியார்.
\"வசூல்ராஜா' படத்திற்கு டாக்டர்களால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிற இந்த சமயத்தில் கமலுக்கு டாக்டர் பட்டம் சூட்டப்படுவது சுவாரஸ்யமான விஷயம்தான்.
இதுவரை கமலுக்கு டாக்டர் பட்டம் அளிப்பதற்காக பல பல்கலைக்கழகங்கள் விரும்பியபோதெல்லாம் கமல் அதை விரும்பவில்லை. \"வசூல்ராஜா' விழா மேடையில்... அதற்கான அத்தாட்சி கடிதங்களை பார்த்ததாக இயக்குநர் சரண் சாட்சி சொன்னார்.
\"அப்போது மறுத்தீர்கள். இப்போது தந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கவிப்பேரரசு அன்புக் கட்டளையிட்டார்.
\"சொல்லி வைத்தால் போல' அடுத்த சில நொடிகளில் அந்த மேஜிக் நடந்தது.
\"இதோ ஒரு இனிய அதிர்ச்சி' என்று அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது சினர்க்க... உற்சாகமாக மேடையேறிய ஜேப்பியார் அதிகாரபூர்வமாக கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தார்.
உடனே எழுந்த கைதட்டல்களும், வாழ்த்தொலிகளும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கையே அதிரவைத்தது.
இந்த திடீர் சந்தோஷத்தின் தாக்கம் கமலின் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது....
\"\"இந்த டாக்டர் பட்டத்தை வழங்கிய ஜேப்பியாருக்கு நன்றி சொல்வது என் கடமை. அதே சமயம் இப்படிச் செய்ததற்காக அவரை கோபித்துக் கொள்வது என் தனிப்பட்ட உரிமை. இந்த கெளரவத்தை என் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். ஏனெனில் அவர்கள் என் வழித்தோழர்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்... ஒரு தலைவனாக அவர்களுக்கு முன்னால் செல்ல எனக்கு துணிவு இல்லை. அதேசமயம் அவர்களை முன்நடத்தி அவர்களின் பின்னால் செல்கிற அளவுக்கு எனக்கு பணிவும் இல்லை. அவர்களும் நானும் சமமாக நடப்பதால்தான் என்னை வழித்தோழன் என்று சொல்கிறேன்.
இந்த டாக்டர் பட்டம் கிடைத்து விட்டதால் தலையையும் நெஞ்சையும் நிமிர்த்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் இந்த பட்டம் நமக்கு ஒரு சுமை. பெரிய பொறுப்பு. இதை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம்.''
இப்படிப் பேசி நெகிழ்ந்தார் கமல்.
மாதா, பிதா, குரு, சினிமா இதுதான் கமல்ஹாசனின் வேதம். அல்லும் பகலும் உள்ளும் புறமும் சினிமாவையே நேசிக்கிற, சுவாசிக்கிற இந்த கலைஞானிக்கு வழங்கப்படுகிற டாக்டர் பட்டம்... தமிழ் சினிமாவையே கெüரவிப்பதற்கு சமம்.
கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த கலைஞானியின் தலையை அலங்கரிக்க இன்னும் எத்தனை எத்தனை மகுடங்களும், விருதுகளும் காத்திருக்கிறதோ?</span>
http://tamil.sify.com/movies/fullstory.php?id=13522473