07-22-2004, 08:15 PM
குருவியள்.. பாதியைபோட்டிருக்கிறியள்.. ஏனிந்த ஒளிவு மறைவு.. முழுவதையும் போடுறன் தீர்மானிக்க வேண்டியவை தீர்மானிக்கட்டும்..
<span style='color:brown'>சேரன், தங்கர்பச்சான் மீது பெண் கற்பழிப்பு புகார்
[size=14]தன்னை இயக்குநர்கள் சேரன் மற்றும் தங்கர்பச்சான் ஆகியோர் மானபங்கப்படுத்தியதாக, ஒரு இளம்பெண் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார்.
உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்த நவாப்ஜான், ஜெகராபேகம் தம்பதியின் மகளான நிஷா என்ற ரஹமத்துனிஷா(20), உறையூர் போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார்.
தந்தையால் கைவிடப்பட்ட தனது தாயும், சகோதரர் சையது அமீரும் சேர்ந்து தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், மறுத்தால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை போலீசார் முதலில் வாங்க மறுக்கவே, ஜனநாயக மாதர் சங்கத்தின் உதவியை நிஷா நாடினார். இதையடுத்து அந்த அமைப்பின் பத்திரிக்கைகளுக்கு செய்தி தந்ததோடு, வழக்கைப் பதிவு செய்ய போலீசாருக்கும் நெருக்குதல் கொடுத்தனர்.
இதையடுத்து மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அடுத்து அவர் சொன்ன குற்றச்சாட்டுதான் போலீஸாரை அதிரவைத்தது. இயக்குனர் சேரன் திருச்சி வந்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் என்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார். மறுநாள் காலை மயக்கம் கலைந்து அழுதபோது, ரூ.25,000 கொடுத்து என்னை வெளியே துரத்தி விட்டார்.
அதேபோல் இயக்குநர் தங்கர்பச்சானும் என்னுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார் என்று கூறி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார்.
சினிமாவில் நடிக்க சான்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, கட்டாயப்படுத்தி இவர்களிடம் தனது தாயாரே தன்னைக் கொண்டு போய் விட்டார் என்றும் கூறியுள்ளார் நிஷா. மேலும் அதைத் தொடர்ந்து தான் தன்னை முழு நேர விபச்சாரத்தில் தனது தாயார் தள்ளியதாகவும் கூறியுள்ளார்.
இந்தக் கற்பழிப்புப் புகார் கோடம்பாக்கத்தில் வேகமாகப் பரவ, சேரன் மற்றும் தங்கர்பச்சான் வீடுகளில் தொலைபேசி விசாரிப்புகள் ஓயாமல் ஒலிக்கிறது. புகார் குறித்து சேரனிடம் கேட்டபோது,
சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறியவன் நான். என் மீது இப்படி ஒரு அசிங்கமான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதை நினைத்து மனம் கூசுகிறது. பணம் பறிக்கும் நோக்கத்தோடு ஒரு கும்பல் மிகப பெரிய சதி செய்து இப்படி ஒரு புகார் தெரிவித்துள்ளது.
ஆட்டோகிராஃப் பட விழாவுக்காக நான் திருச்சி போனது உண்மைதான். ஆனால் அந்தப் பெண் சொன்னபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அந்தப் பெண் கறுப்பா சிவப்பா என்பதுகூட எனக்குத் தெரியாது. அந்தப் பெண் கூறியதை அப்படியே நம்பி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
வழக்கு விசாரணைக்குப் பின் நான் நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் இதனால் எனக்கு ஏற்பட்ட இழப்புகளை எப்படி ஈடுசெய்வார்கள்? இந்த விஷயத்தில் மாதர் சங்கமும் உண்மை தெரியாமல் நியாயம் கேட்கப் புறப்பட்டிருப்பதாகக் கூறுவது வேதனையாக இருக்கிறது.
என் மீதான புகாரைக் கேள்விப்பட்ட பலர் எனக்காக ஒன்று திரண்டு போராடத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இதை சட்டரீதியாக சந்திக்கப் போகிறேன் என்றார் சேரன் குமுறலுடன்.
இது தொடர்பாக தங்கர்பச்சான் கூறுகையில், என்னை யாரும் குற்றம் செல்ல முடியாதபடி ஒரு செருக்குள்ள மனிதனாக நான் வாழ்ந்து வருகிறேன். என் வெற்றியின் மீது பொறாமை கொண்ட சிலர் என் மீது சேற்றை வாரி இறைக்க வேறு விஷயம் கிடைக்காமல், இப்படி ஒரு பெண்ணை வைத்து குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
நான் ஒரு தமிழினப் போராளி. என்னை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழின துரோகிகள். அவர்கள் விரைவில் அடையாளம் காட்ட தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் எனக்கு உதவியாக இருந்து இந்தப் புகாரைத் துடைத்து எறிவார்கள் என்றார்.
நிஷா கூறிய புகாரின் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கையாக அவரது தாயார் ஜெகராபேகம், சகோதரர் சையது அமீர் மற்றும் அவரைக் கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குமரகுரு, அவரது மனைவி அமுதா, துரை, முஜூபூர் ரஹ்மான், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும் போலீஸாருக்குப் நிஷா மீதே சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாவது:
கடந்த ஒரு வருடமாக நிஷா விபசாரத்தில் ஈடுபட்டது வந்தததாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் முதல் தடவையா சேரன் என்னைக் கற்பழித்தார் என்று அவர் கூறுகிறார். இதை நம்பமுடியவில்லை.
விசாரணையில் நிஷா கூறியது உண்மை என்று தெரிய வந்தால் சேரனும் தங்கர்பச்சானும் கைது செய்யப்படுவார்கள். இல்லையென்றால் நிஷா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தங்களது படங்களின் மூலம் சமூகப் பொறுப்புள்ள இயக்குநர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் சேரனும், தங்கர்பச்சானும் இத்தகைய கற்பழிப்புக் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது கோடம்பக்கத்தில் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. </span>
http://www.thatstamil.com/specials/cinema/...ews/cheran.html

Truth 'll prevail