07-22-2004, 02:37 PM
Mathivathanan Wrote:kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/rose.jpg' border='0' alt='user posted image'>
மலரே...
வசந்ததின் வரவே
காலம் மாற நீயும் மாறினையோ
நொடியோடு வந்த வாசம் போல்
உன் வசந்தமும் மறைய
பூங்குருவி தன் வசந்தமும்
வாடி வீழுமோ.....???!
வீழட்டும் உன் வதனம்
வேசங்கள் மீது நேசங்கள் எதற்கு
நிலையில்லா உலகில்
நிலையானது என்ன
தேடினேன்
கண்டேன் உண்மை
வீழ்வது நின் உருவாகினும்
வாழ்வது நம் நேசமாகும்...!
மனதோடு மட்டும் நேசம் வாழுமா
அங்கும் ஆசைகள் கூடவே
நேசங்கள் ஓரங்கட்டுது
இருந்தும்....
மாற்றாரிடம் கடன் கொடுக்க
என் நேசம் ஒன்றும் பண்டம் அல்ல
பரிமாறிப் பாழ்படுத்த
நான் ஒன்றும் பரோபகாரியும் அல்ல
என் நேசம் என்னோடு
உன் நேசம் உன்னோடு
அங்கு நான் சுயநலவாதிதான்
நேசமிரண்டும் நிலையாய் நேசித்தால்
மீண்டும் சந்திப்போம்
அடுத்த வசந்தத்தில்....!
அதுவரை நீ
என் நினைவறையில்
நீக்கமற இருப்பாய்....!
நானோ மாந்தோப்பில்
அதே தனிமையில்
உனக்காய் காத்திருப்பேன்
விழி மூடாது....!
நன்றி...http://kuruvikal.yarl.net/kuruvikal Wrote:இதொன்றும் புளுகில்லையே..... இல்ல இப்படித்தான் சொல்லி நயமாக் காதலிப்பினமாம்...பிறகு எனக்கு வாழவே நேரமில்ல கொஞ்சலும் குலாவலும் தான் அவசியமாக்கும்... எண்டு எல்லாம்....கண்ணாபின்னா எண்டு திட்டுவினமாம்...எரிஞ்சு விழுவினமாம்.... கூப்பிட்டாலும் கேக்காத மாதிரிப் போவினமாம்... இப்ப வேரும் விழுதும் எண்டுறதுகள்... நாளைக்கு நாயே எருமையே....இப்படி என்றும் மாறுங்களாம்...இப்ப கண்ணே மணியே செல்லம் எண்டுறதுகள்... நாளைக்கு தரித்திரமே...கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா இருக்கவிடுறியா என்னைப் பிடித்த சனியனே எண்டெல்லாம் மாறுங்களாம்... எண்டு உலகம் சொல்லுது.... எதுக்கும் பாத்து கண்ணுபடப் போகுது....! எங்களில கோபிக்காதேங்கோ... உலகம் சொல்லுறதைச் சொன்னம்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

