07-22-2004, 02:09 PM
<span style='font-size:22pt;line-height:100%'>இத்தகைய துயரங்களைத் தடுக்கவே முடியாதா?
ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் டி.என்.குப்புசாமி: கும்பகோணத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் தொடர்பான படங்களை தினமலர் வெப்சைட்டில் பார்த்து கண்ணீர் சிந்தினோம். இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவியுங்கள். இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவே முடியாதா? எப்போது பத்திரிகையைப் புரட்டினாலும் விபத்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகளே கண்ணில் படுகின்றன. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதேன்? இவற்றைத் தடுக்கவே முடியாதா? அரசியில்வாதிகளின் உதவி, லஞ்சம், அரசு அதிகாரின் துணை ஆகியவற்றால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக இதுவரை நாம் கேள்விப்பட்டதே இல்லை. போலீசாரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். உண்மையான குற்றவாளியை அப்பாவியாகவும் சட்டத்தை மதித்து நடக்கு அப்பாவிகளை குற்றவாளிகளாக மாற்றவும் போலீசாரால் முடிகிறது. எனவே இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையாக ஒளிரும்.
அமெரிக்க நகரில் கண்ணீர் அஞ்சலி
அமெரிக்காவில் உள்ள கேரி நகரில் தமிழர்கள் ஒன்று கூடி கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுமார் 70 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பலியானவர்கள் நினைவாக 90 மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகள் அமைதி என்ற சொல் வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. ஓம் என்ற ஒலியுடன் துவங்கிய இந்த பிரார்த்தனை கூட்டத்தில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் சிவபுராண பாராயணமும் நடந்தது. ஜெயராஜ் கிறிஸ்தவ பிரார்த்தனை நடத்தினார். சாந்தி நிலவ வேண்டும் என்ற பாடலை உஷா ரவிச்சந்திரன் பாட வீணா கண்ணன் இணைந்து பாடினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சுவாமி அனுபவானந்தா, வெறுமனே கண்ணீர் அஞ்சலி கூட்டம் நடத்தி கலைவதற்குப் பதில் பயனுள்ளதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் சங்கர் குமார், இது பற்றி கூறுகையில் கும்பகோணம் சம்பவத்திற்காக நிதி திரட்டி தமிழகத்தில் ஒரு பள்ளிக்கூடமாவது கூரை இல்லாமல் தீயால் பாதிக்கப்படாததாக கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்றார். பின்னர் கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பள்ளிகளிலும் தீத்தடுப்பு கருவிகள் அமைக்கப்படுமா
சிங்கப்பூரிலிருந்து பாலா: கும்பகோணம் தீவிபத்து குறித்து அரசியல்வாதிகள் பலவாறாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவித்தைத் தொடர்ந்து அரசும் பள்ளி நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன... இதெல்லாம் சரி... இத்தகைய கட்டிடங்களில் தீ அலாரம், தீயணைப்பு கருவிகள் போன்றவை அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்பலாம் அல்லவா? இது குறித்து எவரும் பேசாததேன்? இவ்வாறு தீத்தடுப்பு முறைகள் இருப்பதே அவர்களுக்கு தெரியாதா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து சிந்திப்பார்களா...?
போதிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
அமெரிக்காவில் உள்ள ஒலிம்பியா நகரிலிருந்து வைரம்: ஓலைக்கொட்டகைளையும் டூரிங் தியேட்டர்களை மூடுவதிலும் தமிழக அரசு இவ்வளவு அவசரப்பட்டு முடிவெடுப்பதேன்? இதற்கு மாறாக தீவிபத்து தடுப்பு முறைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதில் உரிய கவனம் செலுத்தலாமே..! அமெரிக்காவில் கலிபோர்னியா, ஒரிகன், வாஷிங்டன் போன்ற பகுதிகளில் காட்டுத் தீ, பூகம்பம் போன் இயற்கை பேரழிவுகள் நடப்பதால் அந்த பகுதி மக்களை வேற இடங்களில் குடியமர்த்தவில்லை. மாறாக அப்பகுதி மக்களுக்கு தீவிபத்து, பூகம்பம் போன்றவை ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. கும்பகோணத்தில் தீவிபத்து ஏற்பட்டபோது குழந்தைகளைக் காப்பாற்ற ஆசிரியர்கள் எவரும் முயற்சி எடுத்ததாக தெரியவில்லையே? ஏன்? அவர்களுக்கு இந்தமாதிரி சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்றுதானே பொருள். எனவே ஒலைக்கொட்டகைகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் தராமல் தீத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றம் பயிற்சிகளை மக்களுக்கு அளிப்பதில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும்.
கொடுத்த விலை போதும்.. இனியாவது திருந்துங்கள்...!
சவூதி அரேபியா, அல்கோபாரிலிருந்து சிவகுமார்: கும்பகோணம் தீவிபத்து தொடர்பான செய்திகளை தினமலர் வெப்சைட்டில் பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட சோகத்தை எப்படி வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை. செங்கல்பட்டில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் என் 4 வயது மகளை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினேன். தீயில் வெந்த தங்கங்களே உங்களை நாங்கள் என்றும் நினைவு கூர்வோம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். பணத்தை வாங்கிக் கொண்டு முறையற்ற அங்கீகாரம் வழங்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நாம் இப்போது தந்துள்ள பெரும் விலைக்குப் (90 இளம் தளிர்களின் உயிர்) பிறகாவது இதே தவறை மீண்டும் செய்யாதிருக்கட்டும்.
யோசனைகளுக்கு செயல் வடிவம் தருவோம்
கான்பூர் கித்வாய் நகரிலிருந்து கே.ஆர்.தியாகராஜன் : அதிகஅளவில் உயிர்ப்பலி நடந்த பிறகு அது குறித்து பல்வேறாக பேசுகிறோம்; ஆளாளுக்கு யோசனைகள் கூறுகிறோம். ஆனால் அவை எந்த அளவுக்கு செயல் வடிவம் பெறுகிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. இனியாவது 5ம் வகுப்பு வரையான வகுப்புகள் கீழ் தளத்திலேயே அமைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். கும்பகோணம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கடையடைப்பு, விடுமுறை அறிவிப்பதற்குப் பதிலாக அனைவருமே தங்களுடைய ஒருநாள் சம்பளத்தை நிவாரண தொகையாக வழங்க முன்வர வேண்டும். மேலும் நமது தமிழக அரசு பஸ்களில் ஆபத்து காலங்களில் அவசரமாக வெளியேற உரிய பாதைகள் அமைக்கப்பட வேண்டும். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக அரசு பஸ்களில் இடது புறம் மத்தியிலும் கடைசியிலும் இத்தகைய அவசர வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அக்னி பகவானே உன் கோபம் சரிதானா?
அகனிபகவானே உனக்கு கோபம் வந்தால் கவனிக்கப்பட வேண்டியவர்கள் பலர் இருக்க, இள் தளிர்கள் மீது ஏன் இந்த கோபம்?
சமுதாயத்தில் ஆட்சிக்கு வந்தததும் லஞ்சப் பேயைத் தடுக்க தம் செய்யாமல் தாங்களும் உடந்தையாக இருந்து லஞ்சத்தை உலவ விட்டிருக்கும் அரசியல்வாதிகள் பலர் இருக்க சமுதாயம் என்றால் இன்தென்றே தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?
நாட்டில் தீவிரவாதத்தை உலவ விட்டிருக்கும் அரக்கர்கள் பலர் இருக்க தீவிரவாதம் என்றாலே என்னனெ தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?
லஞ்சம் வாங்கி நாட்டையே சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் பலர் இருக்க லஞ்சம என்றால் என்னவென்றே தெரியாத மலர் மொட்டுகள் மீது ஏன் இந்த கோபம்?
அக்னி பகவானே அடுத்த முறை உனக்கு கோபம் வந்தால் தீக்கு இரையாக்கப்பட வேண்டியவர்கள் இவர்களதானே ஒழிய அப்பாவி பொது மக்களும் இது போன்ற இளம் தளிர்களும் அல்ல வி. பாலா சந்திரசேகரன்
பூத்த மலர்கள் உதிர்ந்தன
குடும்ப விளக்காய் நினைத்த உன்னை
குடிசை தீ எடுத்துக்கொண்டதே அன்று
குலமகள் கண்றீர் சிந்த உருக்குலைந்த நாள் இது
குற்றமற்ற சிறு உள்ளங்களே சிறிய நெஞ்சங்களே
மழலையர் புன்சிரிப்பில் பூத்த பள்ளி
பூங்குரலில் காலைவழிபாடு பாடிய உள்ளங்களே
பூமழை மண்ணில் துõவ விண்ணில் உங்களின் பயணம்
மான் குட்டியாய் வீட்டில் ஓடிய நாட்கள் எங்கே
பெற்றோரின் காலைவிடியலில் கண்ணீர் மழை தினமும்
குண்பகோணமே கதற சிதறிய சிறு இதயங்களே
எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்.
பேட்டை சரவணன், விக்டர், சுரேஷ், கார்த்திக் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
</span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::