07-22-2004, 01:41 PM
<span style='font-size:24pt;line-height:100%'>கல்வித்துறை உயர் அதிகாரி சஸ்பெண்ட் * அரசின் அதிரடியால் இதுவரை கைது 17
அதிகாரிகள் பீதி!* கல்வித்துறை உயர் அதிகாரி சஸ்பெண்ட் * அரசின் அதிரடியால் இதுவரை கைது 17
<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01.jpg' border='0' alt='user posted image'>
[size=13]சென்னை: கும்பகோணம் தீ விபத்திற்கு காரணமானவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தீ விபத்து நடந்த பள்ளி மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காததை காரணம் காட்டி, தொடக்கக் கல்வி இயக்குனர் ஆர்.கண்ணனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கீழ் மட்ட அளவில் ஏற்கனவே பல அதிகாரிகள் கைதானதைத் தொடர்ந்து தற்போது உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடியால் கல்வித் துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர். அடுத்து எந்த அதிகாரிக்கு என்ன "ஓலை' வருமோ என்ற "திக் திக்' காணப்படுகிறது. கும்பகோணம் சம்பவம் தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டையே உலுக்கியெடுக்கும் கோர சம்பவம் கடந்த 16ம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா குழும பள்ளி வளாகத்தில் நடந்தேறியது. ஒரே வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் உயர்நிலைப் பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி என மூன்று பள்ளிகள் சிறிய கட்டடத்தில் இயங்கி வந்தன. இதில், தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 90 குழந்தைகள் துடி துடிக்க தீயில் கருகி இறந்தன. வகுப்பறைக்கு அருகில் இருந்த சமையல் அறையில் இருந்து ஏற்பட்ட சிறு தீப்பொறி, வகுப்பறைகளின் மேல் வேயப்பட்டிருந்த ஓலைக் கூரைகளில் பிடித்ததால் இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01a.jpg' border='0' alt='user posted image'>தீ விபத்தில் 90 குழந்தைகள் கரிக்கட்டைகளான சம்பவம், தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியை சரிவர ஆய்வு செய்யாமல் கல்வித் துறை அதிகாரிகள் அசட்டையாக இருந்ததே குழந்தைகள் உயிர் இழப்புக்கு காரணம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் ஆவேசப்பட்டனர். தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, அப்போதே உதவி தொடக்க கல்வி அதிகாரி உட்பட நான்கு அதிகாரிகளை "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்
இதைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் பழனிச்சாமி, இவரது மனைவி, மகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். எனினும், கல்வித் துறை உயர் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளுக்கான இயக்குனர் ஆர். கண்ணனை நேற்று முன்தினம் இரவு திடீரென "சஸ்பெண்ட்' செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளி இயக்குனர் பொறுப்பை, ஆசிரியர் பயிற்சி இயக்குனர் கே.மாரியப்பன் கூடுதலாக கவனித்துக் கொள்ளவும் அரசு உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளி இயக்குனர் கண்ணன் "சஸ்பெண்ட்' ஆன தகவல் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பார்த்து மற்ற அதிகாரிகள் அனைவரும் "கலக்கத்தில்' உள்ளனர். எப்போது என்ன "ஓலை' வருமோ என்று அனைவரும் "திக் திக்' நிலையில் உள்ளனர்.
<img src='http://www.dinamalar.com/2004july22/photos/fpn-01b.jpg' border='0' alt='user posted image'>
தொடக்கப் பள்ளி இயக்குனராக கடந்த 2002ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார் கண்ணன். அதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனராக பணியாற்றி வந்தார். தொடக்கப் பள்ளி இயக்குனர் சவுந்தரராஜன் மாற்றப்பட்டு, பின்னர் கண்ணன் பொறுப்பேற்றார். தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி பள்ளிகள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் இவரது தலைமையின் கீழ் இயங்குகின்றன. கும்பகோணத்தில் தீ விபத்து நடந்தது தொடக்கப் பள்ளி என்பதால் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறையில் இயக்குனர் கீழ் பணியாற்றும், மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உட்பட மற்ற அதிகாரிகள் அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து இயக்குனருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். அதற்கேற்ப இயக்குனர் நடவடிக்கை எடுப்பார். புது பள்ளிகள் துவங்க அனுமதி கோரினாலும் முதலில் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை, பரிந்துரைப்படி அங்கீகாரம் கொடுப்பது குறித்து இயக்குனர் முடிவு எடுப்பார். தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::