07-22-2004, 01:09 PM
<span style='color:green'>முக்கிய செய்திகள்
நிதியுதவியை விட கவுன்சிலிங் பலனளிக்கும்!: கும்பகோணத்தில் சரத்குமார் பேட்டி </span>
<img src='http://www.dinamalar.com/2004july22/photos/impn-23.jpg' border='0' alt='user posted image'><span style='color:green'>கும்பகோணம்: \"\"தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை விட கவுன்சிலிங் பலனளிக்கும்,'' என்று நடிகர் சரத்குமார் கும்பகோணத்தில் கூறினார்.
கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்கள் பலர் வந்தனர். ஆனால், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க செயலாளர் சரத்குமார், பாரதிராஜா உள்ளிட்ட சிலர் மட்டுமே தீக்காய தீவிர சிகிச்சை பிரிவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் சரத்குமார் கூறுகையில், \"\"தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நடிகர்கள் தனித்தனி குழுக்களாக அமைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளனர். நாங்கள் வழங்கியுள்ள நிதியுதவியைவிட, கவுன்சிலிங் பயனுடையதாக இருக்கும். ஆறு, ஏழு மாதங்களுக்கு கவுன்சிலிங் தரப்படும். இதுவரை நடிகர் சங்கம் சார்பில் ரூ.60 வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மேலும் அதிகரிக்கும்,'' என்றார்.
இயக்குனர் பாரதிராஜா கூறுகையில், \"\"சம்பவம் நடந்த இடத்தை பார்த்தபோது பெரும் துயரமாக இருந்தது. காயம் அடைந்த குழந்தைகளை பார்த்தபோது அவர்களுக்கு டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மனோதத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், காயம் பட்ட குழந்தைகள் தைரியமாக உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், திருமண மண்டங்களில் ஓலைக்கூரைகள் அகற்றப்பட வேண்டும். கூரைகள் இல்லாத நாடாக மாறவே இச்சம்பவம் நடந்துள்ளதோ என்று தோன்றுகின்றது,'' என்றார்.
இயக்குனர் சேரன் கூறுகையில், \"\"இது மிகக்கொடூரமான சம்பவம். குழந்தைகளை பரிகொடுத்தவர்களின் உணர்வுகளை உணர முடிந்தது. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் குறைவாக உள்ளனர். இதை மக்கள் உணர்ந்து பொறுப்புடன் நடக்க வேண்டும். இளைஞர்கள், ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்ற பணிகள், அரசியல் போன்றவற்றை விட்டுவிட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து பாதுகாப்புள்ள பள்ளியாக மாற்ற வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க முயல்வேன்,'' என்றார்.
இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில், \"\"இறந்தது குழந்தைகள் என்பதால், மீளமுடியாத சோகமாகிறது. கற்பூரம் ஏற்றும் போது கை சுட்டுக் கொண்டாலே வலிதாங்க முடியாமல் இழுக்கின்றோம். ஆனால், இங்கு குழந்தைகள் கற்பூரம்போல எரிந்து கிடப்பதை பார்க்கும்போது மனது வலிக்கிறது,'' என்றார்.
நடிகர் வடிவேல் பேசுகையில், \"\"இந்த கொடூரமான சம்பவத்தை கேட்டதில் இருந்து துõக்கமே வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. சாப்பிடக்கூட முடியவில்லை,'' என்றார்.
\"கனவுலக'த்தினரை கண்டதும் மறைந்தது கரிக்கோல சோகம்: நடிகர் வருகைக்காக காலை 9 மணி முதல் மாலை 4.30 மணிவரை மருத்துவமனை வளாகத்திலும், சாலையிலும் வெயிலில் பொதுமக்கள் காத்திருந்தனர். 4.30 மணிக்கு நடிகர்கள் வந்தனர். அதுவரை காத்திருந்து நடிகர்களை பார்த்து உற்சாகத்தில் கையசைத்து ஆரவாரம் செய்தனர். துக்கம் மற்றும் ஆறுதல் கூற வந்த நடிகர்களால் இதனை சகிக்க முடியவில்லை.
நடிகர்களை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்புக்களை உடைத்து ஆர்வமாக பார்க்க வந்தனர். இதனால் போலீஸார் \"லேசான கவனிப்புடன்' விரட்டினர். நடிகர்கள் வந்ததால், சோகத்தை மறந்து கனவுலகினரை உற்சாகமாக வரவேற்றவர்களின் செய்கை பலரை சங்கடப்படுத்தியது. </span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::