07-22-2004, 10:12 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>பட்டாம்பூச்சி</b></span>
<img src='http://gallery.lovetamil.net/data/media/133/LT-animals4.jpg' border='0' alt='user posted image'>
<b>பட்டாம்பூச்சி
பிளாட்பாரத்தில் நடப்பதில்லை
டிராபிக்ஜாம் பற்றி
அது கவலையா படுகிறது?
தேர்தல் வெற்றிகளோ தோல்விககோ
அதைப் பாதிப்பதில்லை
சொல்லப்போனால் அது
பத்திரிகையே படிப்பதில்லை
மலர்களின் வாசலில்
நின்று "கொஞ்சம் பழைய
தேனாச்சும் போடு தாயே"
என்று கெஞ்சவா போகிறது
மாயக் கண்ணன் பயந்து பயந்து
வெண்ணெய் திருடினான்
பட்டாம்பூச்சி பயப்படாத
பகல் திருடன்
தன்னை இழந்த பின் மலர்கள்
பொலீஸ் கம்ப்ளெயிண்ட்
கொடுப்பதில்லை - யசோதையிடமும்
முறையிடுவதில்லை
மன்மதன் தன் அம்பை
நுழைத்த கிளுகிளுப்பிலே
மலர் சுகமான போதத்தில்
உள்ளதா......?
தேன் சேகரிப்பது
கமிஷன் அடிப்படையிலா?
காண்ட்ராக்டா? மாதசம்பளமா?
அன்றாடக் கூலியா? போனஸா
இவ் வசதிகளில் எதில்?
முக்கியமாக ஸ்டிரைக்
செய்ய வசதி உண்டா?
பட்டாம்பூச்சி என்
மானிடக் கேள்விகளுக்கு
பதிலளிக்காமல் சுதந்திரமாக
பறந்து கொண்டிருந்தது.</b>
<img src='http://gallery.lovetamil.net/data/media/133/LT-animals4.jpg' border='0' alt='user posted image'>
<b>பட்டாம்பூச்சி
பிளாட்பாரத்தில் நடப்பதில்லை
டிராபிக்ஜாம் பற்றி
அது கவலையா படுகிறது?
தேர்தல் வெற்றிகளோ தோல்விககோ
அதைப் பாதிப்பதில்லை
சொல்லப்போனால் அது
பத்திரிகையே படிப்பதில்லை
மலர்களின் வாசலில்
நின்று "கொஞ்சம் பழைய
தேனாச்சும் போடு தாயே"
என்று கெஞ்சவா போகிறது
மாயக் கண்ணன் பயந்து பயந்து
வெண்ணெய் திருடினான்
பட்டாம்பூச்சி பயப்படாத
பகல் திருடன்
தன்னை இழந்த பின் மலர்கள்
பொலீஸ் கம்ப்ளெயிண்ட்
கொடுப்பதில்லை - யசோதையிடமும்
முறையிடுவதில்லை
மன்மதன் தன் அம்பை
நுழைத்த கிளுகிளுப்பிலே
மலர் சுகமான போதத்தில்
உள்ளதா......?
தேன் சேகரிப்பது
கமிஷன் அடிப்படையிலா?
காண்ட்ராக்டா? மாதசம்பளமா?
அன்றாடக் கூலியா? போனஸா
இவ் வசதிகளில் எதில்?
முக்கியமாக ஸ்டிரைக்
செய்ய வசதி உண்டா?
பட்டாம்பூச்சி என்
மானிடக் கேள்விகளுக்கு
பதிலளிக்காமல் சுதந்திரமாக
பறந்து கொண்டிருந்தது.</b>
----------

