Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மென்மை வேண்டுமெனக்கு
#15
[quote=Paranee][size=18]<b>செல்லம் செல்லம்</b>

உன்னை நேசிக்க
உன்னை சுவாசிக்க
உன்னோடு ஒன்றாக
உனக்காய் வாழ்ந்திட
உன் சுவாசத்தில் என் வாசம் தேடிட
அருகினில் நான் இல்லை

தொலைவான தேசத்தில்
தொலைந்த காலங்களில்
அன்பான உன் வார்த்தைகள்
அன்பான உன் அழைப்புகள்
செவியெங்கும் சிருங்காரமிடுகின்றன

உனக்காக வாழ
உனக்காக வீழ
என்றும் நான் உனக்காக
எப்போதும் உன் அன்பாக
காத்துக்கிடப்பேன்

இருபது வருடமாய் தாய்மடியுடன்
இன்றுமுதல் உன்மடியில்
என்றும் ஓர் மடி
அன்று ஈன்ற பாசம்
இரத்த நேசம்
இன்று
அன்பின் ஆழம்
புரிதலின் பரிவு
வித்தியாசம் உணர்கின்றேன்

எங்கேயோ பிறந்து
எங்கேயோ வளர்ந்து
என்னைத் தேடி
எனக்குள் கலந்து களிப்பவள் நீ
உனக்காக நான் வாழ்வேன்
என்றும் என்றென்றும்

மோகத்திற்காக காதல் இல்லை
மோகமில்லாமலும் காதல் இல்லை
இணைவதிலும் பிரிவதிலும் காதல்
என்றும் சோபை போனதில்லை
பிரிய பிரிய பிரியம் வளரும்
இணைய இணைய இதயம் உருகும்
அன்பிற்கு என்றும் தாழ் இல்லை
அடைத்து வைத்தாலும்
அது பொட்டித்தெறிக்கும்

உன்னோடு நான் வாழ
என்னோடு நீ வாழ
என்றும் அந்த சுகம்
எதிலும் கிடைக்ப்போவதில்லை
விலக்கப்பட்டவர்கள் நாம்
விதியால் இணைக்கப்பட்டுள்ளோம்

உனக்கு நான்
எனக்கு நான்
வேறு உறவு இல்லை
விழுதின்றிய வாழ்வு எமது
வேர்களும் இல்லை
புதிதாய் நடப்பட்ட நாற்றுக்கள்
அடிக்கப்படும் புயலாலும்
வெள்ளத்தினாலும் சிதைவடையலாம்
நம் அன்பு என்னும் இறுகிய உறவால்
என்றும் அது நடக்கப்போவதில்லை
என்றென்றும் உன்னை விட்டகலேன்

விரைவில் எமக்கென்று
வேர்களும் விழுதுகளும் தோன்றும்
எமைவிட்டு விலகிய கூட்டுக்குருவிகள்
எம் நிழல் நாடி வரும்
என்றோ ஓர்; நாள் அது
நிட்சயம் நிகழும்
தொலைவில் இல்லை
அவ்வினிய நாள்

கலங்காதே என் செல்லதுணையே
உனக்காய் வாழ்வேன் நான்
கலங்கிடும்போதெல்லாம்
ஓர் கையாய் நான் இருப்பேன்
நீ துவண்டிடும்போதெல்லாம்
என் தோள்மீது து}ங்கவைப்பேன்
ஆனந்த வெள்ளத்தில் நீ நனைய
விழியிரண்டிலும் நான்
சில துளி சிந்திக்கொள்வேன்
உனக்காய் நான் பட்ட கஸ்டங்க்ள்
கரைந்தோடி என் விழிவழியே வெளியேறும்;
உன் சந்தோச சிதறல்களால்
நான் பேரின்பம் பெறுவேன்

மாதத்தில் சில தினங்கள்
நீ வாடிநிற்கும்போது
மார்போடுனையணைத்து
மலர்வருடல் செய்து வைப்பேன்
புூவான உன்தேகம்
புதுமலர்ச்சி காணசெய்வேன்

தாயாக நீ மாறும்
ஈரைந்து மாதங்கள்
என் சேயாக உனையெண்ணி
பணிவிடைகள் செய்துவைப்பேன்
அன்னை முகம் காண
ஆவலாய் நீ ஏங்க
அன்பாக அரவணைத்து
ஆசைமுத்தம் தந்துவைப்பேன்

என்றும் நீ என் செல்லதுணை
உனக்காக வானம் நான்
என்றும் உனக்காய் வாழ்வேன்
எனக்கே எனக்காய் நீ வாழ்ந்தால்
என்றும் என்றென்றும்
அன்பென்னும் மழையினால்
அனுதினம் நனையவைப்பேன

பரணி இதொன்றும் புளுகில்லையே..... இல்ல இப்படித்தான் சொல்லி நயமாக் காதலிப்பினமாம்...பிறகு எனக்கு வாழவே நேரமில்ல கொஞ்சலும் குலாவலும் தான் அவசியமாக்கும்... எண்டு எல்லாம்....கண்ணாபின்னா எண்டு திட்டுவினமாம்...எரிஞ்சு விழுவினமாம்.... கூப்பிட்டாலும் கேக்காத மாதிரிப் போவினமாம்... இப்ப வேரும் விழுதும் எண்டுறதுகள்... நாளைக்கு நாயே எருமையே....இப்படி என்றும் மாறுங்களாம்...இப்ப கண்ணே மணியே செல்லம் எண்டுறதுகள்... நாளைக்கு தரித்திரமே...கொஞ்சம் எண்டாலும் நிம்மதியா இருக்கவிடுறியா என்னைப் பிடித்த சனியனே எண்டெல்லாம் மாறுங்களாம்... எண்டு உலகம் சொல்லுது.... எதுக்கும் பாத்து கண்ணுபடப் போகுது....! எங்களில கோபிக்காதேங்கோ... உலகம் சொல்லுறதைச் சொன்னம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by sWEEtmICHe - 07-13-2004, 10:50 AM
[No subject] - by tamilini - 07-13-2004, 10:52 AM
[No subject] - by sWEEtmICHe - 07-13-2004, 10:57 AM
[No subject] - by AJeevan - 07-13-2004, 12:40 PM
[No subject] - by kuruvikal - 07-13-2004, 03:18 PM
[No subject] - by kavithan - 07-14-2004, 01:38 AM
[No subject] - by shanmuhi - 07-14-2004, 09:31 PM
[No subject] - by phozhil - 07-15-2004, 12:07 PM
[No subject] - by Paranee - 07-21-2004, 06:42 PM
[No subject] - by Paranee - 07-21-2004, 06:44 PM
[No subject] - by வெண்ணிலா - 07-21-2004, 07:21 PM
[No subject] - by tamilini - 07-21-2004, 07:33 PM
[No subject] - by kavithan - 07-22-2004, 01:13 AM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 01:48 AM
[No subject] - by Paranee - 07-22-2004, 10:57 AM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 03:38 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)