07-15-2003, 11:55 AM
யார் வருந்தி வருந்தி வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் ஓடித்திரிவது. புலிகள் என்ன யப்பானுக்கும், அமெரிக்காவுக்குமா ஓடித்திரிகின்றார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று கொடுக்க நினைக்கின்றார்கள். அவர்களின் உள்ளக் கிடங்கையும் சீக்கிரம் அறிந்து கொள்ளும் காலம் வரும். சோழியனின் குடுமி சும்மா ஆடாது. யப்பானுக்கு ஐ.நா வில் ஒரு கண் என்று வதந்தி. புலிகள் வேண்டித் தின்று ஏப்பம் விட நினைத்திருந்தால் அன்று ராஜீவ் என்ற நரியின் தந்திரத்தில் சிக்கி இன்று எம்மை கோவணம் கூட அற்ற நிலையில் அலையவிட்டிருப்பார்கள். அவர்களும் இப்படி பஙகர் மழை வெய்யில் என்று திரிந்திருக்கமாட்டார்கள். அது சரி அன்று அப்படி வாங்கித் தின்றிருந்தால் தாத்தா எங்கே லண்டனிலா இருந்து கதை விட்டிருப்பீர்கள்?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

