07-20-2004, 07:18 PM
<b>தனது காதலிக்கு கொடுத்த தின்பண்டங்களை காதல் முறிவடைந்ததனால் திருப்பித் தரக்கோரி காதலன் வழக்குத் தொடுத்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த நிகலோய் கொஸ்லோவ் என்பவருக்கும் யுவதியொருவருக்கும் இடையிலான காதல் சில வாரங்களில் முறிவடைந்தது. அதையடுத்து தாம் வழங்கிய சொக்லேற்றுக்கள் அப்பிள் பழம் கடலை கிலோ வாழைப்பழம் ஆகியவற்றை திருப்பித்தருமாறுகோரி கோஸ்லோவ் யெகடெரிங்பர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
அவற்றை தமது குடும்பத்தினர் ஏற்கனவே உட்கொண்டுவிட்டதால் அவற்றைத் திருப்பித் தரவழியில்லை என நீதிமன்றத்தில் காதலி தெரிவித்துள்ளார். ஆனால் காதலன் விடுவதாக இல்லை. "யேகடெரிங்பர்க் நீதிமன்றத்தில் எனக்கு வெற்றி கிடைக்காவிட்டால் உயர்நீதிமன்றத்துக்குச் செல்வேன் தேவைப்பட்டால் மனிதஉரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்துக்கும் செல்வேன்" என உறுதிமொழியாக கூறியிருக்கிறார் மேற்படி விசித்திரமான காதலன்.</b>

----------