07-19-2004, 07:37 PM
Mathivathanan Wrote:மீன்சின்னம் பற்றிய சர்ச்சை போறதைப் பார்த்தால் கட்சி வரப்போகுதுபோலைதான் தெரியிது.. முன்னம் யார் இந்த மீன் சின்னத்தை பதிவு செய்திருந்தது..? யாருக்காவது தெரியுமா..?
.<b>கருணாவுக்கு "மீன்" சின்னம் கிடையாது. தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது</b>
<b>விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா தாம் ஆரம்பிக்கவுள்ள "விடுதலைப் புலிகள் கருணா முன்னணி" எனும் அரசியல் கட்சிக்கு மீன் சின்னத்தை கோரியிரந்தார் எனவும் அதை தேர்தல் திணைக்களம் நிதாகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன் சின்னம் தற்போது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சின்னமாக உள்ளமையே இதற்கு காரணம். தற்போது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் அது அரசியல் கட்சிகளின் பதிவுப்பட்டியலில் நீடிப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</b>
----------

