07-19-2004, 07:36 PM
Quote:ஒளித்தடம் என்கிற குறும்படங்களுக்கான நிகழ்ச்சியையும் அவரே நிகழ்த்துகிறார் என எண்ணுகிறேன்.மன்னிக்கவும்! இந்த நிகழ்ச்சியினை நிகழ்த்துவது ஜெய்கீசன் என்பவர். வதனனின் விலாசம் குறும்படத்தில் வருகின்ற பின்னணிப் பாடல் ஒன்றை இவரது குரலில் பாடியிருக்கிறார். ஜெய்கீசனின் குறும்படங்களிற்கான ஒளித்தடம் என்கின்ற நிகழ்ச்சி நமது வளர்ந்துவரும் கலைஞர்களிற்கான களமாகவும், அவர்களை ஊக்குவிப்பதற்கான பலமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
தனியே குறும்படங்களை ஒளிபரப்புவதோடும், கலைஞர்களை நேர்காணுவதோடும் மட்டும் நில்லாமல், இக்குறும்படங்கள் பற்றிய தொழில்நுட்ப ரீதியானதும், கதைத்தளம் மீதிலானதுமான விவாதங்களைக் கருத்துப் பரிமாறல்களையும் இந்நிகழ்ச்சியில் சேர்த்துக்கொண்டால் அதுவே குறைகளைக் களைந்து படைப்பாளிகளை மேலும் வளரச்செய்யும் என்று நம்புகிறேன். அதுவே படைப்புக்களைத் தரமுள்ளதாக ஆக்கித்தரும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

