Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரான்ஸ், குறும்பட மாலை
#6
வதனனின் விலாசம் குறும்படத்தைப் பார்த்தேன். அதன்பின்னான அவருடைய நேர்காணலையும் பார்த்தேன். இது அவருக்கு முதல் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்குமட்டுமல்ல, அவருடன் பணியாற்றிய அநேகமான கலைஞர்களுக்கு இது முதல் முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுகந்தன் ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். ஒளித்தடம் என்கிற குறும்படங்களுக்கான நிகழ்ச்சியையும் அவரே நிகழ்த்துகிறார் என எண்ணுகிறேன். அதேபோல் நம்மவர் பாடல்களைக் காட்சிப்படுத்துகின்ற முயற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

கதை, வசனம், இயக்கம் வதனன். வதனன் என்பவர் வில்லிசையைக் கலைஞர் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை சாரங்கன். ரிரிஎன் னில் இடம்பெறும் படலைக்குப் படலை தொடர்நாடகத்தின் கதாநாயகன். ரிரிஎன் தொலைக்காட்சியின் இசைப்பிரிவிற்குப் பொறுப்பானவர்.

மற்றவர்கள் அனைவரும் பெரிதாக அறிமுகமாகாதவர்கள் தான் என்றாலும், விரைவில் மக்கள் மத்தியில் பெரும் கலைஞர்களாக திகழ்வார்கள் என்பது நிகழும்.

கதையின் கரு: தெருச்சண்டியர்கள் பற்றியது. போர்ச்சூழல் காரணமாகவோ, அல்லது குடும்பச் சூழல் காரணமாகவோ, புலம்பெயர்ந்து வந்து தேவையில்லாமல், சம்பந்தமில்லாமல் குழுச்சண்டைகளில் ஈடுபடும், அல்லது ஈடுபடத் தூண்டப்படும் இளைஞர்கள் பற்றியது. அதனால் ஏற்படும் குற்றச் செயல்கள், உயிரிழப்புகள் பற்றியது.

மேலதிகமாக முழுக்கதையையும் நான் சொல்ல விரும்பவில்லை. நீங்களே நேரடியாகப் பாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இக்குறும்படத்தில் சில சில குறைகள் உள்ளன தான். காட்சியமைப்பு அவ்வளவாகத் தெளிவில்லை. உதாரணத்திற்கு இந்தக் கதைக்கான சூழலைத் தெரியாதவர்களுக்கு இக்குறும்படத்தை விளங்கிக்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பது என் கருத்து. அடிக்கடி காட்சியின் நிறங்கள் மாறுகின்றன. அது ஒவ்வொருவிதமான காலத்தை அல்லது சூழலை வெளிப்படுத்துவதற்காக இருப்பினும், அடிக்கடி இப்படி நிகழ்வது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் சிறப்பான தரம் இருக்கிறது. மொத்தத்தில் இந்தக் குறும்படம் இன்றைய இளைஞர் சமூகத்திற்குத் தேவையான ஒரு செய்தியைச் சொல்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதன் அழுத்தம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இது அவர்களின் முதல் முயற்சி. இனித்தான் குறை நிறைகளை அறிந்து தம்மை வளப்படுத்துவார்கள்.

மேலும் மேலும் வதனனின் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள். அதேபோல் அந்தக் குறும்படக் குழுவின் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply


Messages In This Thread
வணக்கம் - by இளைஞன் - 07-17-2004, 12:10 PM
[No subject] - by AJeevan - 07-17-2004, 02:31 PM
[No subject] - by இளைஞன் - 07-18-2004, 02:03 PM
[No subject] - by AJeevan - 07-18-2004, 05:35 PM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 02:26 PM
[No subject] - by இளைஞன் - 07-19-2004, 07:36 PM
[No subject] - by AJeevan - 07-19-2004, 08:56 PM
[No subject] - by Manithaasan - 07-22-2004, 12:22 PM
[No subject] - by vasisutha - 07-22-2004, 03:33 PM
[No subject] - by AJeevan - 07-22-2004, 03:59 PM
[No subject] - by shanmuhi - 07-22-2004, 04:18 PM
[No subject] - by Aalavanthan - 07-23-2004, 06:18 PM
[No subject] - by AJeevan - 07-24-2004, 02:09 AM
[No subject] - by இளைஞன் - 07-24-2004, 10:57 AM
[No subject] - by AJeevan - 07-24-2004, 12:33 PM
[No subject] - by AJeevan - 07-26-2004, 01:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)