07-19-2004, 12:14 PM
<b><span style='font-size:30pt;line-height:100%'>கும்பகோணம் தீ விபத்து - படப்பிடிப்புகள் ரத்து. </b>
[size=14]By Y.B
<img src='http://cinesouth.com/images/new/17072004-THN12image1.jpg' border='0' alt='user posted image'>
கும்பகோணம் தீ விபத்தில் 87 குழந்தைகள் பலியானது உலகையே உலுக்கிவிட்டது. போப் ஆண்டவர் ஜான்பால் உள்பட உலக தலைவர்கள் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ் திரையுலகம் இன்று மதியம் இரண்டு மணி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்துள்ளது. ரஜினி, விஜயகாந்த, அஜித் உள்பட பலரும் தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாணாதுறை காசிராமன் தெருவில் கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரசுவதி நர்சரிப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் உள்ளன. நேற்று இப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. வெளியே தப்பிக்க முடியாமல் 87 பிஞ்சு குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மேலும் 27 குழந்தைகள்
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கொடூர சம்பவம் அனைவர் உள்ளங்களையும் உருக்கிவிட்டது. இந்த துயர நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக இன்று தமிழ் திரையுலகின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சித்ரா லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கும்பகோணத்தில் 80க்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பள்ளிக்கூரை எரிந்து விழுந்ததால் கருகி இறந்த பரிதாப சம்பவம் தமிழ்த்திரை உலகில் மாபெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. பரபரப்போடும், பரிதவிப்போடும் திரைஉலகின் எல்லா பிரிவுகளிலும் இந்த சோகம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
தாங்க முடியாத இந்தக் கொடுமையினால் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு தமிழ்த்திரை உலகின் அனுதாபத்தைத் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 11 மணிக்கு இரங்கல் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரை அரங்கில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தமிழ்த்திரை உலகின் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்வதற்காக இன்று (17-07-04) மதியம் இரண்டு மணிவரை படப்பிடிப்பு, பாடல் பதிவு, பின்னணி இசை சேர்ப்பு உள்பட எல்லா திரைஉலகப் பணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இழந்து விட்ட உயிர்களுக்கு எந்த ஈடும் செய்ய முடியாது. எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் இழந்து விட்ட உயிர்களுக்கு உயிரூட்ட முடியாது. என்றாலும் தங்களின் இன்னுயிர் குழந்தைகளை இழந்து நெஞ்சம் பதறி நிற்கும் குடும்பங்களின் அத்தனை பேர்களுக்கும் எனது கண்ணீர் நிறைந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குடும்பங்களில் நிவாரண நிதியாக தமிழக முதலமைச்சரிடம் ரூபாய் 10 லட்சம் அளிக்கிறேன். மறைந்த பச்சிளங் குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய நெஞ்சார பிரார்த்திக்கிறேன், என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "கும்பகோணத்தில் மனித தெய்வங்களுக்கு நடந்த கோர சம்பவத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு இந்த சோகத்தை ஜீரணிக்கும் சக்தியை கொடுக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் 'ஜி' படப்பிடிப்பில் இருந்த அஜித் சம்பவத்தை கேள்விப்பட்டதும் உடனடியாக படப்படிப்பை ரத்து செய்துவிட்டு, இயக்குனர் லிங்குசாமியுடன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அஜித், "கும்பகோணம் ஊர் மக்களின் ஒத்துழைப்பினால்தான், கடந்த 20 நாட்களாக இங்கு படப்பிடிப்பு நடத்த முடிந்தது. அவர்களுக்கு ஒரு துயரம் வரும்போது, அதில் பங்கேற்பது தான் நாகரீகம். மனித நேயம்." என்று தெரிவித்தார். அவர் தன் ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், அனைத்து ரசிகர்களும் ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ரூபாயாவது நிதி திரட்டி முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கும்படி கேட்டுள்ளார். இவர்களை தவிர சரத்குமார், கே. ராஜன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்திற்கு சினி சௌத்-ம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.</span>

<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::