07-17-2004, 06:31 AM
வீதி தோறும் கல்விச்சாலைகள் அமைப்போம் என்று பாரதி கூறியதாலோ என்னவோ தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி பாடசாலைகள்.
போதிய காற்றுவசதியோ விளையாட்டு மைதானமோ எதுவுமே இல்லாது இது போல நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இயங்குகின்றன. அரசு பள்ளியில் இலவசக்கல்வி தரம்மற்றதால் நடுத்தர மக்கள் இத்தகையபாடசாலைகளில் தான் தங்கள் குழந்தைகளை அனுப்பவேண்டி உள்ளது. தமிழ்நாடு அரசு இனியாவது கண்விழித்துக்கொள்ளகிறதா பொறுத்துத்தான் பார்க்கவேண்டும். எமது இலங்கை அகதிகள் கூட இத்தகைய கல்விக்கூடங்களுக்கு தான் குழந்தைகளை அனுப்பவேண்டிய நிலை.
இந்த விபத்து நடந்த பள்ளியில் மூன்றாம் மாடியில் 1 முதல் 5 ம் வகுப்பும் அதற்கு அடுத்த தளங்களில் பெரிய மாணவர்களுக்கும் வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 950 மாணவர்கள் இங்கு கல்விகற்று வந்தனர்.இந்த பள்ளிக்கூடம் மற்றைய கட்டடங்கறுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்தக்கட்டடத்தின் அகலம் மிகக்குறுகியது சுமார் இருபது அடிகள் தான் இருக்கும். பெரிய இரும்புக்கதவுதான் ஒரே வழி மாணவர்களுக்கு. அது எப்போதும் மூடியே இருக்கும். எந்த பாதுகாப்பு வசதியும் அறவே அற்ற பள்ளிகள். யார்வேண்டுமானாலும் இங்கு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம். என்று மோசமான ஒரு நிலை உள்ளது. இதனால் பணம் பார்க்க விரும்பும் படிப்பறிவில்லாத முதலாளிகள் கூட தங்கள் பெயரில் ஒரு பள்ளி என ஆரம்பித்துவிடுகின்றாhகள். ஆசிரியர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே இங்கு வழங்கப்படுகிறது. வேலைகிடைத்தால்போதும் என்ற நிலையில் சரியான பயிற்சிபெறாத ஆசிரியர்கள் தான் இங்கே கல்வி கற்பிக்கின்றனர்.
விபத்து நடந்த போது பள்ளியில் குறுகிய படிக்கட்டுகளால் மாணவர்கள் வேகமாக வெளியேற முடியவில்லை. சரியாக அவர்களை வேகமாக வழிநடத்த ஆசிரியர்களாலும் ஏனோ முடியவில்லை. அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
குழந்தைகளை புூச்சூடி மதிய உணவுடன் தண்ணீர் பாட்டிலும் கொடுத்து அவர்கள் படித்துவிட்டு வருவார்கள் என காத்திருந்த பெற்றோர் தான் பாவம். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்கியது. வகுப்பறையில் அங்கங்கே அவர்கள் எடுத்துவந்து உணவுப்பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் சிதற்க்கிடந்தன.
கும்பகோணம் வைத்த்pயசாலையில் குளிருட்டாப்பட்ட அறைகள் இல்லதமையால் பாவம் அவர்களை மீண்டும் தஞ்சாவுூருக்கு எடுத்துச்செல்லவேண்டிய நிலை.
இது போன்ற விபத்துகள் இதற்கு முன்பும் நடந்துள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலை எரிந்து இதைப்போன்ற ஒரு கோரவிபத்து நடந்தது. அதற்குப்பின் ஒரு திருமணவீட்டில் நடந்த தீவித்தில் மணமகனே எரிந்து சாம்பலானது மிகக்கோரமானது.