Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பயங்கரத் தீ விபத்து - 80 குழந்தைகள் பலி
#5
<img src='http://www.yarl.com/forum/files/1089986287929_980.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/1089987307.85134.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/1089987436.43362.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/fire_p1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/fire_p2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/fire_p3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/fire_p4.jpg' border='0' alt='user posted image'>

கும்பகோணத்தில் சோகம்: பள்ளியில் பயங்கர தீ - 100 குழந்தைகள் பலி
கும்பகோணம் நகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாராசுரம் ஏரியாவில் காசிராமன் பகுதியில் லார்ட் கிருஷ்ணா நடுநிலைபள்ளி, உயர் நிலைபள்ளி, சரஸ்வதி நர்சரி என மூன்று வகையான பள்ளிகள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. மூன்று மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்தில் நர்சரி பள்ளி மூன்றாவது மாடியில் இயங்கி வருகிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அங்கு பயின்று வந்தனர். இந்த பகுதியில் கூரையால் வேயப்பட்டிருந்தது.

கீழ்தளத்தில் உயர்நிலை பள்ளியும், முதல் தளத்தில் நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வந்தன. அரசு உதவியுடன் நடத்தப்படும் இந்த பள்ளியில் இன்று காலை 11.30 மணியளவில் சமையல் கூடத்தில் சமையல் வேலை நடந்த போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ வேகமாக பரவியது. ஓலையால் வேயப்பட்ட பகுதியில் முதலில் தீ பிடித்தது. சில நிமிடங்களிலேயே தீ மளமள வென்று பரவர தொடங்கியது. ஒட்டு மொத்த கட்டிடம் தீ பற்றுவதற்கு முன்பே கீழ் பகுதியில் இருந்த உயர்நிலை மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்கள் வெளியே ஓடி உயிர் தப்பினர். மூன்றாவது மாடியில் இருந்த நர்சரி பள்ளி மாணவர்கள் தீயின் கோர நாக்கிற்கு பரிதாபமாக பலியானார்கள்.

நர்சரி வகுப்பில் படித்து வந்த 8 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் வெளியேற முடியாமல் வகுப்பு அறைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். உயிர் பிழைக்க அந்த பிஞ்சுகள் போராடிய முயற்சி தோல்வி அடைந்தது. 3,4 மற்றும் 5 ஆம் வகுப்புகளில் படித்த பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி கரிக்கட்டையாகின. ஓலையால் வேயப்பட்டிருந்த மேற்கூரை தீ பந்தங்களுடன் விழுந்ததால் குழந்தைகள் ஓ வென்று அலறி துடித்தன. தப்பிக்க கூட வழிதெரியாமல் நெருப்பில் சிக்கி குழந்தைகள் பலியானார்கள். தீ விபத்தை பார்த்த பலர் குழந்தைகளை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்க வில்லை.

நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தால் கும்பகோணம் நகரம் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. தீ விபத்து நடந்த பகுதியில் ஏராளமான சடலங்கள் கரி கட்டைகளாய் கிடந்தன. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பலர் பலியானார்கள். இறந்த உடல்கள், காயம் பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்களின் அலறல் சத்தமாக காட்சி அளித்தது. தங்கள் குழந்தைகளின் நிலை என்ன, உயிரோடு இருக்கிறார்களா என்பதை கூட பெற்றோர்களால் தெரிந்து கொள்ள முடியாமல் பதட்டத்தில் அங்கும் இங்கும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

இறந்த உடல்களில் தங்கள் பிள்ளை இருக்கிறதா? என்பதை கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர். அடையாளம் காட்ட முடியாத நிலைக்கு குழந்தைகளின் உடல்கள் கருகி போயிருந்தன. குழந்தைகள் ஒவ்வொன்றும் கடைசி நேரத்தில் தப்பி செல்ல முயற்சி செய்த நிலையில் அவர்களுடைய உடல்கள் கிடந்தன. உடல்கள் ஒவ்வொன்றும் கட்டி பிடித்துக்கொண்டு ஆங்காங்கே கிடைந்த காட்சியை பார்க்க கனத்த இதயம் வேண்டும்.

தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 100ஐ தாண்டியது. இதுவரை 80 உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-தமிழ்ச்செழியன்
மூலம் விகடன்
படங்கள் விகடன் மற்றும் AP / AFP
<b>
?

?</b>-
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 07-16-2004, 04:29 PM
[No subject] - by tamilini - 07-16-2004, 04:50 PM
[No subject] - by shanmuhi - 07-16-2004, 11:35 PM
[No subject] - by Aalavanthan - 07-17-2004, 12:43 AM
[No subject] - by AJeevan - 07-17-2004, 12:54 AM
[No subject] - by Mathivathanan - 07-17-2004, 01:16 AM
[No subject] - by kavithan - 07-17-2004, 04:26 AM
[No subject] - by aathipan - 07-17-2004, 06:31 AM
[No subject] - by Eelavan - 07-17-2004, 09:05 AM
[No subject] - by AJeevan - 07-17-2004, 12:48 PM
[No subject] - by Eelavan - 07-17-2004, 01:56 PM
[No subject] - by aathipan - 07-17-2004, 03:06 PM
[No subject] - by AJeevan - 07-17-2004, 03:19 PM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 02:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 12:12 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 12:14 PM
[No subject] - by Paranee - 07-19-2004, 12:18 PM
[No subject] - by tamilini - 07-19-2004, 12:32 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:04 PM
[No subject] - by AJeevan - 07-19-2004, 01:10 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:13 PM
[No subject] - by sWEEtmICHe - 07-19-2004, 01:14 PM
[No subject] - by kavithan - 07-19-2004, 02:17 PM
[No subject] - by kuruvikal - 07-19-2004, 02:24 PM
[No subject] - by kavithan - 07-19-2004, 02:34 PM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 06:51 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:26 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:55 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 07:56 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:08 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:09 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:09 AM
[No subject] - by sWEEtmICHe - 07-20-2004, 08:33 AM
[No subject] - by kuruvikal - 07-20-2004, 01:24 PM
[No subject] - by vasisutha - 07-22-2004, 01:12 AM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 12:05 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:04 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:09 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:18 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:21 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 01:41 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:00 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:09 PM
[No subject] - by sWEEtmICHe - 07-22-2004, 02:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:12 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:14 PM
[No subject] - by shanmuhi - 07-22-2004, 03:18 PM
[No subject] - by வெண்ணிலா - 07-22-2004, 03:24 PM
[No subject] - by kuruvikal - 07-22-2004, 03:41 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 07:42 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 07:43 AM
[No subject] - by tamilini - 07-25-2004, 03:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 07-25-2004, 07:04 PM
[No subject] - by sWEEtmICHe - 07-26-2004, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)