Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குநர் பாலா கரம்பிடித்தார்.
#15
Quote:என்னை தலை குனிய வைத்த ஒரு சம்பவம்.
பாரதி பற்றிய கருத்துகள் வந்ததால் எழுதத் தோன்றியது.
இடம் பெறும் பகுதி தவறானதுதான்.
இருந்தாலும் நண்பர்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இணைக்கிறேன்.

<span style='font-size:30pt;line-height:100%'><b>கிறிஸ்டல் தமிழன்</b></span>
-அஜீவன்

நான் கடந்த 2004 ஜுன் மாதம் 3ம் திகதி செக் (குடியரசு)நாட்டுக்கு போனபோது கிறிஸ்டல் வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தேன்.

சுற்றி கிறிஸ்டல்களை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தேன்.

"நீங்கள் தமிழ் பேசுவீர்களா?"
எனக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

எந்த தமிழரும் என் கண்ணில் படவேயில்லை.

எல்லோருமே வெள்ளை நிற மனிதர்கள்.
அது எனது மன பிரமையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கிறிஸ்டல்களைப் பார்ப்பதற்காக மீண்டும் திரும்பினேன்.

நீங்கள் தமிழ் பேசுவீர்களா?
எனக்கு பின்னாலிருந்து மிக நெருக்கமாக மீண்டும் அதே குரல் கேட்டது.

சட்டென்று திரும்பினேன்.

ஒரு வெள்ளைக்கார இளைஞன்
"நீங்கள் தமிழ் பேசுவீர்களா?" என்று கேட்டவாறு சிரித்துக் கொண்டு நின்றார்.

"பேசுவேன்......" எனது பதில்.

"சங்கத் தமிழ் பேசுவீர்களா? சுத்த தமிழ் பேசுவீர்களா? பேச்சுத் தமிழ் பேசுவீர்களா?"

அவரது கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.
ஒரு புறத்தில் அதிர்ச்சி; ஆனந்தம் ; இனம் புரியாத புூரிப்பு........... மெதுவாகவே புன்னகைக்க முடிந்த என்னால் , பேச வேண்டிய வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

என் நிலை அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

"அதிர்ச்சியாக இருக்கிறீர்களா?
எனக்கு பேச்சு தமிழ் வராது. நல்ல தமிழும், சங்கத் தமிழும் பேசுவேன்." என்றார்.

"நீங்கள்....................?"
விடுபடா அதிர்ச்சியில் வார்த்தைகளை இழுத்தேன்.

"செக் பல்கலைக் கழகத்தில்தான்.........இங்கு தமிழ் பற்றி படித்த போது ஆர்வம் வந்தது.
ஒன்றரை வருடங்கள் தமிழ் நாட்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தேன்.
இப்போது திரும்பி வந்து தொடர்ந்து தமிழ் பற்றிய ஆராச்சியொன்றில் செக் பல்கலைக் கழகத்தில் ஈடுபட்டு வருகிறேன்."

"ஏனைய நேரங்களில் இங்கு வேலை செய்கிறீர்களா?"

"ஆம், இது எங்கள் கடை.
இருந்தாலும் நான் இங்கு வேலை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமிழ் புத்தகங்கள் வாங்குகிறேன்."

"தமிழ் புத்தகங்கள்?"

"என்னிடம் (2000) இரண்டாயிரத்துக்கு மேல் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன."
என்றவர் "யாருடைய புத்தகங்களைப் படிப்பீர்கள்?"

"எல்லாப் புத்தகங்களையும்........" என்றேன்.

சிரித்தார்.
சிரிப்புக்கு அர்த்தம் புரியவில்லை.
ஏன் சிரிக்கிறீர்கள் என்பது போல் அவரைப் பார்த்தேன்.

"இல்லை.
எல்லாப் புத்தகங்களையும் என்கிறீர்கள்.
மு.வரதராசன், கல்கி, திருக்குறள், பாரதியார் கவிதைகள்.........................."
என்று அடுக்கிக் கொண்டே போனார்.

எனக்கு தலை கிறு கிறுத்தது.
சோவென பனிமழை கொட்டி உடலெல்லாம் நனைந்து நடுங்குவது போன்ற உணர்வு.

திருகுறள்கள் சிலவற்றை சொல்லி, விளக்கம் வேறு தந்தார்.
பாரதியார் கவிதைகளை பாடிக் காட்டினார்.

"பாரதியார் தமிழில் பாடியிருக்கலாம்.
அவன் ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்காக பாடினான்.
ஏதாவது தவறாக இருந்தால் சொல்லுங்கள்.
எனக்குத் தெரிந்த விளக்கம் தருகிறேன்." என்றார்.

வெட்கம்....................
தெரிந்தால்தானே தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கு.

"உங்களுக்குத் தெரிந்த தமிழ் எனக்குத் தெரியாது" என்றேன்.

"பார்த்திபன் கனவு போன்ற இலகுவான புத்தகங்களில் தொடங்குங்கள்" என்று அறிவுரை சொன்னார்.

பாரதியாரின் சமத்துவ, சமுதாய நோக்கு பற்றிய கவிதைகளை கூறி,
இது ஒட்டு மொத்த மனித சமுதாயத்துக்கு ஒரு மனிதன் விட்டுப் போனது" என்றார்.

நான் வாய் பேசாது விறைத்து நின்றதைப் பார்த்துவிட்டு,
கடைக்கு வந்த மனுசரிடம் வேறு விடயம் பேசுவதாக எண்ணியிருக்கலாம்.

"மன்னிக்கவும் நான் தமிழ் ஆர்வத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். என்ன வாங்க வந்தீர்கள்?"
திகைத்துப் போய் நின்ற என்னை உலகுக்கு மீட்டு வந்தார்.

என் தேவைகளைச் சொன்னேன்.
எனக்கு வேண்டிய சில கிறிஸ்டல்கள் அவரது கடையில் இல்லை.
அடுத்த கடைக்கு அழைத்துச் சென்று எனக்கு வேண்டியதை வாங்க உதவினார்.

செக்கில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி விபரித்தார்.

இறுதியாக என்னோடு சென்றிருந்த,
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி கரிசனை காட்டும் அமெரிக்க விரிவுரையாளர் கலாநிதி.ஜெனட்டை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு,
எனது விசிட்டிங்காட்டை அவரிடம் கொடுத்தேன்.

"என் பெயர் அஜீவன். உங்கள் பெயர்?"

"பாவெல் ஹோன்ஸ்."

அவரது விசிட்டிங்காட்டுக்கு பின்புறம் தமிழில் அவர் பெயரை எழுதித் தந்தார்.
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_pavel.3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/p.3.jpg' border='0' alt='user posted image'>
பாவெல்........... வயது 21-22 இருக்கும்.
சில தனிப்பட்ட விடயங்களை,அவர்களாகவே சொன்னாலன்றி, நான் கேட்பதில்லை.
எனவே மேலதிக விபரங்களில் எனக்கு ஆர்வமில்லை.

அவரிடமிருந்து விடை பெற்றேன்.

ஐரோப்பிய கிண்ணத்துக்கான போட்டியில் செக் கலந்து கொண்ட போது அதன் கப்டன் பாவெல் என்ற பெயர் , <span style='color:green'>தமிழ்பாவெலை நினைவலைக்கு கொண்டு வந்து கொண்டேயிருந்தது.

தொலைபேசி வழி தொடர்புகள் தொடர்கின்றன.................
அவரது இனிமையான செந்தமிழ்(செம்மொழி) என் காதுகளில் இன்றும் தேன் ரசம் பாச்சுகின்ற உணர்வாகவே இருக்கிறது..........
தமிழ் என்றும் கன்னியல்லவா?
என்றும் அவள் கன்னியாகவே உலா வருகிறாள்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்......................சொன்னவரை மறக்க முடியாது.</span>
-அஜீவன்
15.07.2004
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 07-13-2004, 11:33 PM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 03:40 AM
[No subject] - by tamilini - 07-14-2004, 10:54 AM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 02:16 PM
[No subject] - by tamilini - 07-14-2004, 02:48 PM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 03:33 PM
[No subject] - by Aalavanthan - 07-14-2004, 03:56 PM
[No subject] - by AJeevan - 07-14-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 07-14-2004, 04:33 PM
[No subject] - by வெண்ணிலா - 07-14-2004, 06:33 PM
[No subject] - by AJeevan - 07-14-2004, 06:46 PM
[No subject] - by Aalavanthan - 07-14-2004, 11:58 PM
[No subject] - by AJeevan - 07-15-2004, 01:29 PM
[No subject] - by AJeevan - 07-15-2004, 04:47 PM
[No subject] - by Kanani - 07-15-2004, 05:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)