Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இயக்குநர் பாலா கரம்பிடித்தார்.
#14
ஆளவந்தான்,

யாரோடும் பிரச்சனைப்பட வேண்டும் என்பது எனது எண்ணமுமல்ல.

இப்பகுதி சினிமா பகுதி.
இதில் சினிமா மற்றும் சினிமாக்காரர்கள் தொடர்பான விடயங்களைத்தான் எழுத வேண்டும்?

நானும் அவர் போன்ற கலைஞன்,மனிதன்.
இவரும் ஒரு தமிழன்தான்.

நாங்கள் முகம் தெரியாத மக்களோடு வேற்று நாடுகளில் வாழ்கிறோம்.

இவர்களிடம் எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கின்றன.
நாம் வாழும் நாட்டில் என்னவோ பண்பான மனிதர்களோடு பழகுகிறேம்.
எனவே அவர்கள் போலவே நாமும் நடந்து கொள்கிறேம்.???????????????

நீங்கள் புலத்தில் இல்லையானால் புலம் பெயர்ந்து வந்தோரைக் கேளுங்கள்.

வந்த பாதைகளில்-விழுந்த காடுகளில்-தஞ்சம் கொடுத்த நாடுகளில் ஒரு சொட்டு தண்ணி தந்தவன் உன் உறவினனா என்று?
அவனுக்கும் நமக்கும் என்ன உறவு?
அவன் எவனாக இருந்தாலும் என்ன ?
அவன் உள்ளத்தில் உள்ள மனித நேயத்தால்தான்
இன்றும் நாம் ஒரு கூரைக்கு கீழாவது நிற்கிறோம்.
அதனால் இங்கே பேசுகிறோம்?

தற்போதைய இயக்குனர்களில் ஒரு நல்ல இயக்குனர்பாலா.
தனிப்பட்ட ரீதியில் எனக்கும் இவரைத் தெரியாது.

விருந்தோம்பல், பாராட்டுவது, வாழ்த்துவது போன்றவை ஆரம்ப தமிழனது ஓர் உயரிய குணம்.
இது ஒரு மனிதனை பரந்த குணாதிசயங்களை நோக்கி கொண்டு செல்கிறது.

பாரதியும், பாலா போன்ற சராசரி மனிதர்தான்.
பாரதி வாழும் போது அவரையும் ஒதுக்கித்தான் வைத்தார்கள்.அவர் வாழும் போது இன்று கொண்டாடுவோரில் 10 சதவிகிதத்தினர் உதவியிருந்தால் தமிழுக்கு இன்னும் அவர் எவ்வளவோ செய்திருப்பார்?
இறந்த பிறகு பாரதி எழுதியதை வைத்து பிழைக்கிறார்கள்.

பாரதி ஒரு பிடிவாதக்காரர்.செருக்கு கொண்டவர்.
இவர் பறவைகளை; மிருகங்களை; வேற்று மனிதர்களை வாழ்த்தி பாடினான்.
அதுவும் ஒரு பிராமணண், அல்லாவைப் பற்றி கவி வடித்துக் கொடுத்தான்............இப்படி எத்தனையோ???????????
அவனை பின்பற்றும்
நமக்கு அவனது எண்ணத்தில் ஒரு சில துளியாவது இருக்க வேண்டாமா?

பாலா
ஒரு மனிதன்,
அது யாராக இருந்தாலும்
வாழும் போது ஒரு மனிதன்,
நல்லா வாழ்ந்து விட்டுப் போக வாழ்த்த முடிந்தால் வாழ்த்துவோம்.

"தன் வினை தன்னைச் சுடும்"

"தர்மம் தலை காக்கும்"

"விதை விதைத்தவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்."

என்பதெல்லாம் பெரியோர் சும்மா சொன்னவையல்ல.

பெரிய மனதோடு வாழும் ஒருவன் கீழ் நிலையானவனாக இருப்பினும் அவன் மேலோன்தான்.

இது கருத்துக்களம். ஒவ்வொருவரது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறோம். பரிமாறிக் கொள்கிறோம்.

உங்களிடமிருந்து நல்லது ஏதாவது கிடைத்தால் எடுத்தக் கொள்கிறேன்.
அதில் ஏதாவது தவறு இருந்தால் வாதாடுகிறேன்.
ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

அனுபவம்,கருத்தாடல்கள்; ஒரு மனிதனை மாற்றும்.........அது வரை

<span style='font-size:17pt;line-height:100%'>(இவருக்கும் ஈழத்தவருக்குமான தொடர்புகள் எனக்குத் தெரியும். அதை இங்கே எழுத விரும்பவில்லை.
அது, நமக்கு உதவும் ஒருவர் என்ற விதத்தில் கருத்தை திசை மாற்றிவிடும்.)</span>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 07-13-2004, 11:33 PM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 03:40 AM
[No subject] - by tamilini - 07-14-2004, 10:54 AM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 02:16 PM
[No subject] - by tamilini - 07-14-2004, 02:48 PM
[No subject] - by kuruvikal - 07-14-2004, 03:33 PM
[No subject] - by Aalavanthan - 07-14-2004, 03:56 PM
[No subject] - by AJeevan - 07-14-2004, 04:06 PM
[No subject] - by tamilini - 07-14-2004, 04:33 PM
[No subject] - by வெண்ணிலா - 07-14-2004, 06:33 PM
[No subject] - by AJeevan - 07-14-2004, 06:46 PM
[No subject] - by Aalavanthan - 07-14-2004, 11:58 PM
[No subject] - by AJeevan - 07-15-2004, 01:29 PM
[No subject] - by AJeevan - 07-15-2004, 04:47 PM
[No subject] - by Kanani - 07-15-2004, 05:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)