07-14-2004, 07:08 AM
Kanani Wrote:ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...
நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள்
ஊரிலதான் ஒற்றுமையில்லாமல் பிரிவுகளாக இருந்தியள் என்றா..இங்கு வந்துமா?...உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?
குறையில்லாத நூறுவீதமும் சரியான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
அப்படியிருந்தால் அவர்களை தெய்வம் என்று சொல்லலாம்.
அதை விடுங்கள்.
கூடி வாழ்வது நல்ல விடயம்தான்.
அதற்காக ஒரு மண்டபம் கட்டி விட்டு அதற்குள் எல்லோருமாகக் கூடி வாழ முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வளை வேண்டும்.
அதற்குள் மற்றவன் தனது மூக்கை நீட்டாதிருக்க வேண்டும்.
nadpudan
alai
alai

