07-13-2003, 08:35 PM
கொஞ்சநாள் வேலைப்பளு காரணமாக இத்தொடரை தொடர முடியாமலிருந்தமைக்கு வருந்துகிறேன்.....
முதன்மை நினைவகங்கள் எவ்வளவு தேவை?
இது உங்களின் தேவையைப் பொறுத்தது....
நுண்செயலிகளுக்கு அடுத்ததாக கணணியின் திறனை தீர்மானிக்கும் முக்கிய பாகம் இந்த முதன்மை
நினைவகங்களே! ஆதலால் இதை உங்களின் தேவைக்கேற்ப தீர்மானிக்க வேண்டும்..
கணணியை தொடக்கியவுடன் அதன் நினைவகத்தில் ஏற்றப்படும் செயலி இயங்குதளம் ஆகும்.
இவ்வியங்குதளமே மற்றய செயலிகளைச் செயற்படுத்தும். ஆகவே இயங்குதளத்தையும் மற்றய செயலிகளையும் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு நினைவகம் தேவை....பொதுவாக
வின்டோஸ் 95-98 க்கு குறைந்தது 32 MB ம்
வின்டோஸ் NT-2000 க்கு குறைந்தது 64 MB ம்
வின்டோஸ் ME - XP க்கு குறைந்தது 128 MB ம் தேவைப்படும்
ஆனால் லினக்ஸ் அல்லது அப்பிள் மக் இயங்குதளம் போனறன இயங்க 16 MB யே போதுமானது
ஆனால் இதை விட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் வகையையும் அது சிறப்பாக இயங்க எடுக்கும் நினைவகத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சாதாரண பாவனைக்கு (இணையம் மற்றும் மைக்ரோசொப்ற்றின் அலுவலக செயலிகள் போன்றன) மேற்குறிப்பிட்ட அளவு போதுமானது
ஆனால் ஒரே நேரத்தில் பல செயலிகளையும், ஒலிஒளி (வீடியோ ஓடியோ) செப்பனிடல் மற்றும் கணணி விளையாட்டுக்கள் போன்றவற்றை செவ்வனே செய்ய கூடிய நினைவகம் தேவைப்படும்.