07-06-2004, 06:30 PM
நேற்று கவிதை போடாமல் தலைப்பு மட்டும் தான் எழுதியிருந்தேன் மன்னிக்கவும்
வேண்டுவன
தெளிந்த நோக்கமும், விவேகமும்
இயற்கையாக வேண்டும்
எங்கும், எதையும் நிதானமாக
ஏற்க நிறைந்த துணிவு வேண்டும்
எதையும் ஏற்று உள்வாங்கும்
இதயம் என்றும் வேண்டும்
எங்கும் எப்போதும் நிறைந்த
நிதானம் வேண்டும்
அழமான சிந்தனை, அதை அகலமாக
ஆராயும் திறன் வேண்டும்
நல்லிதயங்களின்
வழிநடத்தல் வேண்டும்
நிலையற்றதை பிரித்தறியும்
ஆற்றல் வேண்டும்
நிலையற்ற வாழ்விலும்
நிலையான நிறைவு வேண்டும்
எல்லையில்லா அன்பு என்னில்
பிறந்த சகோதரர் வேண்டும்
ஆழ்ந்த அமைதி என்னிதயத்தில்
நிலைக்க வேண்டும்
என் தவறை சுட்டிக்காட்ட
என் தாய் வேண்டும்
அதை ஏற்கும் மனத்திறன்
என்றும் வேண்டும்
தொலைந்து போகாத
அன்பு வேண்டும்
நினைத்ததை சொல்லும்
சொற்திறன் வேண்டும்
நான் சொல்வதை ஏற்க
ஒரு தங்கை வேண்டும்
சொன்னதை சுட்டிக்காட்ட
ஒரு தம்பி வேண்டும்
எல்லாம் நிறைந்த
ஒரு நற்தருணம் வேண்டும்
அத்தருணம் எள்றும்
நிலைக்க வேண்டும்
அது தொலைந்து போகும்
தருணத்தில் ஆழ்ந்த உறக்கம் வேண்டும்
அதை அறிந்த பிறர்
ஆனந்தமடைய வேண்டும்
நன்றி
வேண்டுவன
தெளிந்த நோக்கமும், விவேகமும்
இயற்கையாக வேண்டும்
எங்கும், எதையும் நிதானமாக
ஏற்க நிறைந்த துணிவு வேண்டும்
எதையும் ஏற்று உள்வாங்கும்
இதயம் என்றும் வேண்டும்
எங்கும் எப்போதும் நிறைந்த
நிதானம் வேண்டும்
அழமான சிந்தனை, அதை அகலமாக
ஆராயும் திறன் வேண்டும்
நல்லிதயங்களின்
வழிநடத்தல் வேண்டும்
நிலையற்றதை பிரித்தறியும்
ஆற்றல் வேண்டும்
நிலையற்ற வாழ்விலும்
நிலையான நிறைவு வேண்டும்
எல்லையில்லா அன்பு என்னில்
பிறந்த சகோதரர் வேண்டும்
ஆழ்ந்த அமைதி என்னிதயத்தில்
நிலைக்க வேண்டும்
என் தவறை சுட்டிக்காட்ட
என் தாய் வேண்டும்
அதை ஏற்கும் மனத்திறன்
என்றும் வேண்டும்
தொலைந்து போகாத
அன்பு வேண்டும்
நினைத்ததை சொல்லும்
சொற்திறன் வேண்டும்
நான் சொல்வதை ஏற்க
ஒரு தங்கை வேண்டும்
சொன்னதை சுட்டிக்காட்ட
ஒரு தம்பி வேண்டும்
எல்லாம் நிறைந்த
ஒரு நற்தருணம் வேண்டும்
அத்தருணம் எள்றும்
நிலைக்க வேண்டும்
அது தொலைந்து போகும்
தருணத்தில் ஆழ்ந்த உறக்கம் வேண்டும்
அதை அறிந்த பிறர்
ஆனந்தமடைய வேண்டும்
நன்றி

