![]() |
|
நான் நாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நான் நாம் (/showthread.php?tid=6980) Pages:
1
2
|
நான் நாம் - shobana - 07-05-2004 என்னைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகம் - kuruvikal - 07-05-2004 என்ன சோபனா கவிதையும் காணல்ல...தலைப்பும் புரியாத மொழியில இருக்கு... கொஞ்சம் கவனித்தால் என்னவாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- shobana - 07-05-2004 குருவி அண்ணா , நான் தமிழில் தான் தலைப்பு எழுதினேன். இப்ப எப்படி மாற்றுவது என்றும் எனக்கு தெரியவில்லை - kuruvikal - 07-05-2004 நன்றி தங்கையே... நாங்கள் என்ன செய்யமுடியும்... நீங்கள் எப்படி எழுதுகிறீர்களோ.... :wink: எதற்கும் கள நிர்வாகத்தின் உதவியை நாடவும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shobana - 07-06-2004 நேற்று கவிதை போடாமல் தலைப்பு மட்டும் தான் எழுதியிருந்தேன் மன்னிக்கவும் வேண்டுவன தெளிந்த நோக்கமும், விவேகமும் இயற்கையாக வேண்டும் எங்கும், எதையும் நிதானமாக ஏற்க நிறைந்த துணிவு வேண்டும் எதையும் ஏற்று உள்வாங்கும் இதயம் என்றும் வேண்டும் எங்கும் எப்போதும் நிறைந்த நிதானம் வேண்டும் அழமான சிந்தனை, அதை அகலமாக ஆராயும் திறன் வேண்டும் நல்லிதயங்களின் வழிநடத்தல் வேண்டும் நிலையற்றதை பிரித்தறியும் ஆற்றல் வேண்டும் நிலையற்ற வாழ்விலும் நிலையான நிறைவு வேண்டும் எல்லையில்லா அன்பு என்னில் பிறந்த சகோதரர் வேண்டும் ஆழ்ந்த அமைதி என்னிதயத்தில் நிலைக்க வேண்டும் என் தவறை சுட்டிக்காட்ட என் தாய் வேண்டும் அதை ஏற்கும் மனத்திறன் என்றும் வேண்டும் தொலைந்து போகாத அன்பு வேண்டும் நினைத்ததை சொல்லும் சொற்திறன் வேண்டும் நான் சொல்வதை ஏற்க ஒரு தங்கை வேண்டும் சொன்னதை சுட்டிக்காட்ட ஒரு தம்பி வேண்டும் எல்லாம் நிறைந்த ஒரு நற்தருணம் வேண்டும் அத்தருணம் எள்றும் நிலைக்க வேண்டும் அது தொலைந்து போகும் தருணத்தில் ஆழ்ந்த உறக்கம் வேண்டும் அதை அறிந்த பிறர் ஆனந்தமடைய வேண்டும் நன்றி - tamilini - 07-06-2004 Quote:நான் சொல்வதை ஏற்க அக்காமார் வேண்டாமா?....... ஏன் அவா சொன்னதை நீங்கள் கேட்க வேண்டும் என்டு வருத்தமோ?.........! ம் யாவும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.........! - tamilini - 07-06-2004 Quote:நான் சொல்வதை ஏற்க அக்காமார் வேண்டாமா?....... ஏன் அவா சொன்னதை நீங்கள் கேட்க வேண்டும் என்டு வருத்தமோ?.........! ம் யாவும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.........! - sOliyAn - 07-06-2004 அவர் மூத்த பிள்ளையாக்கும்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் சோபனா!! இன்னும் வேண்டும் என்ற சிந்தனை வரும்.. அதுக்கு இன்னும் வயது இருக்கோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 07-07-2004 எல்லாம் கிடைச்சுதா சோபனாக்கா....? shobana Wrote:சொன்னதை சுட்டிக்காட்ட ம்...ம்...தயார் - kavithan - 07-07-2004 tamilini Wrote:Quote:நான் சொல்வதை ஏற்க ஏன் உங்களை அக்கா எண்டா சொன்னவ :?: - shobana - 07-07-2004 வணக்கம் எனக்கு அக்கா, அண்ணா எல்லாம் இருக்கினாம்........... தம்பி தங்கை தான் இல்லை......... - kuruvikal - 07-07-2004 மொத்தத்தில் நல்லதோர் குடும்பம் உலகமாய் வேண்டும் அப்படித்தானே சோபனாத் தங்கையே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shobana - 07-07-2004 உலகம் நல்லதோர் குடும்பமாயிருந்தால் சந்தோ~ம் தான் - shobana - 07-07-2004 வணக்கம் வேண்டாம் புன்னகையில் என்றும் கபடம் வேண்டாம் வார்த்தையிலே என்றும் வஞ்சனை வேண்டாம் பார்வையிலே என்றும் பரிதாபம் வேண்டாம் உள்ளத்திலே என்றும் ஊனம் வேண்டாம் பேச்சிலே என்றும் போலித்தனம் வேண்டாம் செயலிலே என்றும் சுயநலம் வேண்டாம் எழுத்திலே என்றும் எண்ணியதெல்லாம் வேண்டாம் பாசத்திலே என்றும் பாசாங்கு வேண்டாம் கருணையிலே என்றும் கலப்படம் வேண்டாம் எனக்கு இவை என்றும் எதுவும் வேண்டாம் இவை என்றும் வேண்டும் போது நானே வேண்டாம் நன்றி - kuruvikal - 07-07-2004 வேண்டாம் என்று விட்டு வேண்டாததை வேண்டுவோர் தான் அதிகம்..! மனித மனமே... உரைப்பில் உண்மை உரைப்பாயாக...! நடப்பில் நல்லதைச் செய்வாயாக...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shobana - 07-07-2004 குருவி அண்ணா நல்ல பதில் நன்றி - shanmuhi - 07-08-2004 வேண்டுவன எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள்.... - sOliyAn - 07-08-2004 சண்முகி! இருக்கிறீங்களா?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shobana - 07-08-2004 நன்றி சண்முகி - shobana - 03-03-2005 கண்டுபிடித்துவிட்டேன் |