07-06-2004, 03:26 PM
tamilini Wrote:வாழ்க்கையில் பல சம்பவங்களே ஓரே மாதிரி இருக்கும் போது...... கற்பனைகள் ஓன்றாக ஏன் இருக்க கூடாது...... ம் எமக்கு தோன்றியது..... எழுதினோம்...... நம்புவதும் விடுவதும் அவரவர் விருப்பம்..... கண்டிப்பாக எல்லோரும் நம்பியாக வேண்டும் என்டு ஓன்றும் நிபந்தனை இல்லை தானே....
எண்ணங்கள் ஒன்றாக இருக்கலாம்.. சிலவேளை சில வார்த்தைகள்கூட ஒன்றாக அமையலாம். இப்படி ஒரு அனுபவம் எனக்கும் நேர்ந்தது.
'மாறவில்லை' என்றொரு சிறுகதை.. பூவரசு சஞ்சிகையின் சிறுகதைப்போட்டிக்கென எழுதினேன். 2வது பரிசும் தந்தார்கள். 'இங்கு உள்ள இனவேற்றுமைகளால் வெறுப்புற்ற ஒருவன்.. உரிமைக்காக இணைந்திருக்கும் தாயக மக்களுடன் இணைந்து வாழவென அங்கே செல்ல.. அங்கு இன்னமும் சாதிப் பாகுபாடுகள் உள்ளதைக் கண்டு ஏக்கமுறுவதுதான்' அதன் கருத்து.
சில காலங்களின் பின்.. 'இன்னும் மாறவில்லை' என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் ஒரு கதை... ஓரு பிரபல பாடசாலையின் அருகே ஆடுகளை வெட்டுவார்கள.. ஒருவர் பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு சென்னைக்கு வரும்போது எல்லாம் மாறியிருக்கிறது.. ஆனால் அந்த ஆடுவெட்டும் இடமும் வெட்டுதலும் மாறவில்லை.. ஆக.. தலைப்பிலுள்ள ஒற்றுமைபோலவே.. கருத்திலும் ஒற்றுமை!
இவ்வாறு எண்ணங்கள் ஒன்றுபடலாம்...!
.

