![]() |
|
எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை (/showthread.php?tid=6974) |
எனக்குள் ஒருவன் - பிடி - kuruvikal - 07-06-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/41119_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> இமை மூடினால் போதும் என் கண்களில் தோன்றும் அவன் உருவம். என்னை அவன் பார்த்ததில்லை நானும் அவனை பார்த்ததில்லை கனவுகளின் துணையுடன் காதல் நடக்குது. ஊர் பெயர் இதுவென்று அவன் சொன்னான் இதுவரை உண்மை எதுவென்று நான் அறிந்ததில்லை அறியவும் முயலவில்லை அவன் சொல்வதெல்லாம் உண்மை என்கிறது மனது நம்பிக்கையில் கனவினில் நம் காதல் சங்கமம்...! இரவுகள் கூட முடிவதில்லை இப்போ கனவினில் அவன் வருவதனால். கனவுகள் தவிர எதுவும் தேவையில்லை கனவினில் மட்டும் அவன் வருவதனால் கனவினில் நடக்கும் காதல் இது காரணம் ஏதும் நானறியேன் தொடக்கம் கனவதனில் முடிவு எதுவென்று நான் அறியேன்... காலம் சொல்லும் பதிலுக்காய் கனவுகளுடன் காத்திருக்கிறேன். <i>கவியாக்கம்... தமிழினி... யாவும் கற்பனை...!</i> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->கவி மூலம்... http://www.tamilini.blogspot.com/ - shobana - 07-06-2004 தமிழினி அக்கா, இது உங்களுடைய கவிதையில்லை... இதை நான் ஏற்கனவே படிச்சு இருக்கிறேன் நன்றி - tamilini - 07-06-2004 shobana Wrote:தமிழினி அக்கா, இது உங்களுடைய கவிதையில்லை... என்ன சோபனா? எங்கையோ படித்தனிங்களோ?....... ஐயோ இது எனது சொந்த ஆக்கம் தான்...... எங்கு படித்தீர்கள்.... ஞாபக படுத்தி பாருங்கள்..... எனக்கும் அறிய தாருங்கள் தயவு செய்து...... - kuruvikal - 07-06-2004 கவிதை தெரியாமல் சுட்டது பாதி சுடாதது பாதி.... முழுக்கச் சுட்டது என்று சொல்ல முடியாது.......வைரமுத்துவும்தான் சுட்டது பாதி சுடாதது பாதியா எழுதுறார்...அதோட ஒப்பிடேக்க தமிழினி எங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-06-2004 என்ன குருவி கிண்டலா?....... சத்தியாமாய்..... எனக்கு தோன்றியதை எழுதினேன்...... ஆனால் இப்படி யாரும் எழுதி இருப்பார்கள் என்டு நான் எதிர்பார்க்கவில்லை....... ம் ஓரு விதத்தில் சந்தோசம் தான்...... நான் எழுதுவது கூட கவிதை மாதிரி இருக்கு என்டு..... அதைவிட இன்னும் ஓருவருக்கு அப்படி எழுத தோன்றி இருக்கிறது...... ம் பார்ப்போம்........சோபனா தகவலுடன் வாருங்கள்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2004 இல்லைத் தமிழினி... மனதால்... மனவோட்டங்களில்...ஒரே விடயம் தொடர்பாக ஒற்றுமை இருக்கலாம்...அவையே பின் கவிதைகளில் வார்தைகளாய் விழும்போது கூட ஒற்றுமை காட்டலாம்... இல்லையா.... வார்த்தைகளுக்கு வரையறை இருக்குத்தானே... உங்கள் கவிதைதான் என்பதை நாம் நம்புவோம்....மற்றவர்கள் நம்ப வேண்டுமே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-06-2004 வாழ்க்கையில் பல சம்பவங்களே ஓரே மாதிரி இருக்கும் போது...... கற்பனைகள் ஓன்றாக ஏன் இருக்க கூடாது...... ம் எமக்கு தோன்றியது..... எழுதினோம்...... நம்புவதும் விடுவதும் அவரவர் விருப்பம்..... கண்டிப்பாக எல்லோரும் நம்பியாக வேண்டும் என்டு ஓன்றும் நிபந்தனை இல்லை தானே.... - kuruvikal - 07-06-2004 சரி விடுங்க.... சோபனாத் தங்கை தன் மனதில் பட்டதை சொன்னாங்க.... நீங்கள் உங்கள் மனதில் பட்டதைச் சொல்லிட்டிங்க... அவரவர் விருப்பம் போல் அவரவர் சொல்லுறதைச் சொல்லுறாங்க.... ம் கேக்க வேண்டியவங்கள் கேக்கிறாங்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 07-06-2004 tamilini Wrote:வாழ்க்கையில் பல சம்பவங்களே ஓரே மாதிரி இருக்கும் போது...... கற்பனைகள் ஓன்றாக ஏன் இருக்க கூடாது...... ம் எமக்கு தோன்றியது..... எழுதினோம்...... நம்புவதும் விடுவதும் அவரவர் விருப்பம்..... கண்டிப்பாக எல்லோரும் நம்பியாக வேண்டும் என்டு ஓன்றும் நிபந்தனை இல்லை தானே.... எண்ணங்கள் ஒன்றாக இருக்கலாம்.. சிலவேளை சில வார்த்தைகள்கூட ஒன்றாக அமையலாம். இப்படி ஒரு அனுபவம் எனக்கும் நேர்ந்தது. 'மாறவில்லை' என்றொரு சிறுகதை.. பூவரசு சஞ்சிகையின் சிறுகதைப்போட்டிக்கென எழுதினேன். 2வது பரிசும் தந்தார்கள். 'இங்கு உள்ள இனவேற்றுமைகளால் வெறுப்புற்ற ஒருவன்.. உரிமைக்காக இணைந்திருக்கும் தாயக மக்களுடன் இணைந்து வாழவென அங்கே செல்ல.. அங்கு இன்னமும் சாதிப் பாகுபாடுகள் உள்ளதைக் கண்டு ஏக்கமுறுவதுதான்' அதன் கருத்து. சில காலங்களின் பின்.. 'இன்னும் மாறவில்லை' என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் ஒரு கதை... ஓரு பிரபல பாடசாலையின் அருகே ஆடுகளை வெட்டுவார்கள.. ஒருவர் பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு சென்னைக்கு வரும்போது எல்லாம் மாறியிருக்கிறது.. ஆனால் அந்த ஆடுவெட்டும் இடமும் வெட்டுதலும் மாறவில்லை.. ஆக.. தலைப்பிலுள்ள ஒற்றுமைபோலவே.. கருத்திலும் ஒற்றுமை! இவ்வாறு எண்ணங்கள் ஒன்றுபடலாம்...! - kuruvikal - 07-06-2004 குருவே அருமையான விளக்கம் அளித்தீர்கள்... இப்போதான் கவிதைகள் வடிக்க விளைந்திருக்கும் ஒரு புதுக்கவிக்கு....உற்சாகம் அளிக்கும் வகையில்... குரு குருத்தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-06-2004 நான் எழுதிய பல கவிதைகள்..... இன்னும் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது..... இந்த கவிதை இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் என்டு நான் நினைக்கவில்லை..... சரி பார்ப்போம்........ - vasisutha - 07-06-2004 சோபனா நீங்கள் தமிழினியின் கவிதையை இன்னொருவரின் கவிதையாக சொல்கிறீர்கள். அதற்குரிய ஆதாரங்களை தராமல் சும்மா இப்படி ஒருவரை குற்றஞ்சாட்டுவது அழகல்ல. - sOliyAn - 07-06-2004 tamilini Wrote:நான் எழுதிய பல கவிதைகள்..... இன்னும் யாருக்கும் தெரியாமலே இருக்கிறது..... இந்த கவிதை இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் என்டு நான் நினைக்கவில்லை..... சரி பார்ப்போம்........துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே! எழுதுங்கள்.. எழுதுங்கள்!! அவற்றை காலம் தாழ்த்தாது ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! உடனுக்குடன் வரும் விமர்சனங்கள் அடுத்த ஆக்கத்திற்கு அடிகோலும்! - kuruvikal - 07-06-2004 ஏன் வசி அவர்களிடம் உடனடியா ஆதாரம் இல்லாமல் இருந்திருக்கலாம் இல்லையா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அதுசரி தமிழினி...ஏன் இந்தக் கவிதைதான் குழப்பம் பண்ணுது என்று நினைக்கின்றீர்கள்... அதை நாம் தான் இங்கு போட்டோம் எமக்குப் பிடித்த கவிதையென்று....அப்போ எங்களையா பேசுறிங்க....தமிழுக்காய் உயிரயே விடும் எத்தனையோ தியாகிகள் மத்தியில் ஒரு தமிழ் கவிக்காய் உங்களிடம் ஏச்சு வாங்குவதில் எமக்கு எள்ளளவும் கவலையில்லை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 07-06-2004 உங்களை நாம் ஏச வில்லை குருவிகளே..... சொல்லப்போனால்..... உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.... இதெல்லாம் சாதாரணம்.... சோபனாவின் ஆதாரத்திக்காக நானும் காத்திருக்கிறேன்...... ம்ம்... என்னை போல எண்ணிய இன்னும் ஓருவர் யார் என்று அறிய...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 07-06-2004 அப்படியானால் பலரும் எல்லாருடைய ஆக்கங்களை இங்கு பார்த்துவிட்டு எங்கேயோ படித்தது இது என்று சொல்லிவிடலாமா? - kuruvikal - 07-06-2004 சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் எம் மனதுக்குத் தெரியும் தானே எது நிஜம் என்பது... ஆதாரம் காட்டினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது கவிதை புனைவோரின் கடமை....! கவிதைகள் என்பது ஒரு மனிதனின் மனவோட்டதில் எழும் எண்ண அலைகளை ஓசையோடு கூடிய எழுத்துருவில் வெளிப்படுத்துவது என்பதே எமது நிலைப்பாடு..... அது கற்பனையோடு நிஜம் கலந்தும் இருக்கலாம் இல்லை வெறும் நிஜங்களாகவோ அல்லது கற்பனைகளாகவோ இருக்கலாம்...! எமக்குத் தேவை மனவோட்டத்தில் எழும் எண்ண அலைகளை கவிதையுருவில் பரப்புவதே அன்றி...சான்றிதழ்கள் அல்லவே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shobana - 07-06-2004 தமிழினி அக்கா, நான் உங்களை குற்றம் சொல்லவில்லை. எங்கேயே வாசித்த மாதிரி இருக்கு என்று தான் சொன்னனான். ஏன் வசிசுதா நான் ஆதாரம் இல்லாமல் குற்றம் சொல்லுகதாக கூறி இருக்கிறா??? தமிழினி அக்கா நான் உங்களை குற்றம் சொல்லுகதாக அப்படி சொல்ல வில்லை.. என்னிடம் நான் எங்கே படித்தனான் என்று கேட்டு இருந்தீர்கள்.. எங்கே படிச்சனான் என்று மறந்துவிட்டன்.. ஆனால் விலாசம் தேடி எடுத்து சொல்லுகிறேன்... - Paranee - 07-06-2004 வணக்கம் சோபனா படித்த இடத்தை மறந்துவிட்டார் கட்டாயம் தருவார் சரி அதைவிடுங்கள் எல்லோருடைய கவிதைகளிலுமே யாரோ ஒருவரின் தாக்கம் இருந்திருக்கும் நான் கிறுக்கியவற்றில்கூட நிறைய தாக்கம் இருந்திருக்கின்றது எனக்கே அவை தெரியும் ஒரு புள்ளி இல்லாமல் எம்மால் கோலம்போட முடியாது அந்த புள்ளியாக யாரோ ஒருவர் இருப்பார் எனக்குள் இருப்பவர் கவிப்பேரரசு. அதேNபுhல் தமிழினியின் கவிதையின் சாயலில் வேறு கவிதைகள் இருந்திருக்கலாம் மனச்சங்கடம் இல்லாது இதனை இத்துடன் முடித்துக்கொள்வோம் நன்றி - tamilini - 07-06-2004 shobana Wrote:தமிழினி அக்கா, நான் உங்களை குற்றம் சொல்லவில்லை. எங்கேயே வாசித்த மாதிரி இருக்கு என்று தான் சொன்னனான். ஏன் வசிசுதா நான் ஆதாரம் இல்லாமல் குற்றம் சொல்லுகதாக கூறி இருக்கிறா??? இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை சோபனா.......! உங்கள் முகவரிக்காக காத்திருக்கிறேன்.........! |