07-06-2004, 03:39 AM
<b><span style='font-size:30pt;line-height:100%'>சினிமா கனாக்கள்..............</b></span>-அஜீவன்
சில வருடங்களுக்கு முன் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை ஈழமுரசில் யமுனா ராஜேந்திரன் எழுதி வந்த காலமது. எனது குறும்படங்கள் பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழக குறும்படப் போட்டிகளுக்காக போய்த் தேர்வான காலத்தில் எனக்கும் யமுனாவுக்குமான தொடர்புகள் ஏற்பட்டன.
நாங்கள் பேசும் போது புலம் பெயர் சினிமாவொன்றின் தேவை பற்றியே அதிகமாக பேசுவோம். இருவருக்குமிடையே அன்று மட்டுமல்ல இன்றும் வாக்கு வாதங்கள் உரத்து நிற்கும். இருப்பினும் அது சினிமா பற்றிய முரண்பாடுகளே அன்றி நட்புக்கிடையேயான தூரத்தை ஏற்படுத்துவது போல் தோன்றினாலும் அப்படி ஏற்பட்டதில்லை.
யமுனாவின் முக்கிய பொழுது போக்கு சினிமா பற்றிய தேடல்கள் கொண்ட புத்தகங்களைப் படிப்பதும் உலக சினிமாக்களை பார்ப்பதும் அதற்கான விமர்சனங்களை எழுதுவதுமேயாகும்.
எனது குறும்படங்கள் பற்றிய விமர்சனங்களில் கவிக்குயில் என்ற குறும்படத்துக்கு யமுனா எழுதிய விமர்சனத்தில் என்னை சனாதனக் கருத்தியல் கொண்டவனாக எனக்கெதிராக வசைபாடியிருந்தார்.
நான் அவரது விமர்சனம் பற்றி நேரிடையாக பேசிக் கொள்ளவில்லை. பேச்சு வந்த போது "என் பதில் ஈழமுரசில் வரும்" என்று சொன்னதுடன் பதிலும் எழுதினேன்.
"அதைச் செய்" என்று யமுனா சொன்னது அவரது விமர்சனங்கள் மேல் அவருக்கு இருந்த நேர்மையான பிடிவாதத்தையே காட்டியது.அது எனக்கு பிடித்த ஒன்று.
தனிப்பட்ட வாழ்வில் விட்டுக் கொடுத்துப் போகலாம். தனது பணி அல்லது துறையில் நேர்மையுடன் இருக்க எந்த விட்டுக் கொடுத்தலும் இருத்தலாகாது.
சனாததனக் கருத்தியல் என்று அவர் எழுதிய கருத்துக்கு எழுதிய பதில் , யாரும் எதிர்பாராதவிதமான தாக்குதல்களாவே இருந்தது கண்டு "உன்னைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வாசகர்களுக்கு உன்னை அறிமுகம் செய்த ஒருவருக்கு நீ செய்யும் நன்றிக் கடனா?" என்று என்னைத் திட்டியவர்கள் என் நெருங்கிய நண்பர்கள்தான்.
இவற்றில் யமுனாவும் நானும் வன்மம் கொள்ளவில்லை.
என்னை வேற்றுக் கோணத்தில் பார்க்கவும் யமுனாவின் விமர்சனங்கள் துணை புரிந்துள்ளன என்பதை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
ஒருவரது வளர்ச்சிக்கு நண்பர்கள் விமர்சனங்கள் எவ்வளவு உறுதுணையோ, அது போலவே எதிர்நண்பர்களது விமர்சனங்களும் உறுதுணையேயாகும்.
எனது நேரடி விமர்சனங்களால் மனம் புண்பட்ட கலைஞர்கள் அதிகமே என்றுதான் நினைக்கிறேன். அதற்குக் காரணம் மனதில் பட்டதை நேரடியாக சொல்லி மனக் கசப்பை சம்பாதித்துக் கொள்வது சிலருக்கு பழக்கப் பட்ட ஒன்று. சமாளித்துப் போவதென்பது ஒரு சிலரால் முடியும். ஏனோ நான் முதலாவது பகுதிக்குள் அகப்பட்டுக் கொண்டதால் என்னால் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறதே என்று வருத்தப்பட்டதுண்டு. இருப்பினும் நான் யாரையும் வீழ்த்துவதற்காக அதைச் செய்பவனல்ல என்பதில் மன நிறைவு கொள்கிறேன்.
சில வேளைகளில் என் ஆசான்கள் என் தவறுகளை எப்படிச் சுட்டிக் காட்டினார்களோ அதுவே என் அடிமனதில் பதிந்து விட்டது போன்ற ஒரு உணர்வு.
ஒரு நல்ல படைப்பை யார் செய்தாலும் அதை பார்க்கவும் பாராட்டவும் ஆசைப்படுவேன். நல்லதைச் செய்ய ஒரு கணம் கூட யோசிக்கக் கூடாது. தீயதைச் செய்ய ஆயிரம் முறையல்ல.............. அதற்கு மேலும் யோசிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
இப்படிப்பட்ட என்னை ஒருவரோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க யமுனா சொன்ன போது அவரோடு தொலை பேசி வழி பேசத் தலைப்பட்டேன். ஏற்கனவே அவர் ஒரு புலம் பெயர் திரைப்படத்தை உருவாக்கி நல்ல பெயரை சம்பாதித்திருப்பவர். ஆனால் இவரது படைப்பை நான் பார்த்ததில்லை. சொல்லக் கேட்டதுண்டு.
இவரது படமும் ஏனோ பெட்டிப் பாம்பாய் இருப்பதற்கு காரணம்தான் புரியவில்லை. பெட்டிக்குள் இருப்பவற்றை வெளியில் விட்டால் நல்லது. நம்மவர் படைப்பு என்றாவது பார்க்கலாம். இலங்கையில் பெட்டிக்குள் வைத்த படங்கள் 1983 கலவரத்தோடு எரிந்து போனது. இலங்கை தமிழ் சினிமாக்களில் நடித்தவர்களும் தயாரித்தவர்களும் கலைஞர்களும் பாவம், தேடி அலைகிறார்கள். அவர்களுக்கும் ஒரு பிடி சாம்பல் கூட கிடைக்குதில்லை. புலம் பெயர் நாடுகளில் இந்த அவலம் தொடர வேண்டாம்.
இனி கதைக்கு வருவோமே?...........இவருடன் பேச்சுக்கள் சில வாரங்களாக தொடர்ந்தன. கதைக் கரு கூட நல்லதாகவே எனக்குப் பட்டது.
"சரி ஒரு முறை நான் இருக்கும் நாட்டுக்கு வாருங்கள் பேசலாம்.
எனது நிலையில் நீங்கள் வாழும் நாட்டுக்கு நான் வர முடியாமலிருக்கிறேன்.
தவறான விதமாக வரலாம்தான்.
அதற்கு நான் உடன்படமாட்டேன். அது எனது உறுதியான முடிவு. இதில் மாற்றமில்லை" என்றேன்.
"சரி நான் ஒருவரை வைத்து ஒளிப்பதிவு செய்கிறேன். நீங்கள் படத்தை (எடிட்) தொகுத்துத் தந்தால் போதும்" என்றார்.
மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டேன். ஆனால் . . . . . . . .
"நீங்கள் ஒளிப்பதிவு செய்து இயக்குவதற்கு முன் என்னுடன் உங்கள் கதையை விவாதிக்க ஒரு முறை சுவிசுக்கு வந்து விட்டுப் போங்கள். மனதில் எனக்கு ஏதாவது பட்டால் சொல்கிறேன்" என்றேன்.
அது உங்களுக்குத் தேவையற்ற பிரச்சனை, நான் கொண்டு வருவதை நீங்கள் ஒட்டி எடிட் செய்து தந்தால் போதுமென்றார் நண்பர்.
"நானொன்றும் சைக்கில் டியுப் ஒட்டும் பஞ்சர் கடைக்காரனில்லை" என்று உடனே சொன்னேன்.
மறுமுனையில் திகைப்பு மேலோங்கி பேச்சு தடைப்பட்டது.
இவை கடந்து பல வருடங்களாகி விட்டது.
எனக்கு பறக்கவும், கடக்கவும் அனுமதி கிடைத்த பிறகு பல முறை அவர் வாழும் நாட்டுக்கு சென்று வந்தேன். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவேயில்லை . . . .
கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற கிரீக்க நாட்டினர் போர்த்துகீசியரது கொடியையையும் எந்த வஞ்சனையுமின்றி போட்டியென்பது வன்மம் இல்லை என்பதாக ஏந்திச் சென்ற போது . . . . . . .
யார் யார் சிவம்?
நீதான் சிவம்
அன்பே சிவம் . . . . .என்பது போல் இதயத்துக்குள் ஓர் அசைவு............