07-05-2004, 05:35 PM
sOliyAn Wrote:நானும் ஒரு கணக்கு விடுறன்.. இது அட்சரகணிதத்துக்கை அடங்குதோ பாப்பம்! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மூன்று தர மூன்றாக ஒன்பது சற்சதுரங்களை உள்ளடக்கியதான ஒரு சற்சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள்!
10இலிருந்து 25ற்குள் ஒவ்வொரு இலக்கத்தை ஒருமுறைமாத்திரம் ஒவ்வொரு சற்சதுரத்தினுள் இட்டு, இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து எதிர்மூலையாகவோ அடுத்துவரும் சதுரங்களில் உள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 57 வரவேண்டும்.
எனக்கு அட்சரகணித வரைவிலக்கணம் தெரியாது ஆனால் இது கணக்கு என்பதனை விட விடுகதை கணக்கு என்பது தான் சரி ஏனெனில்
<img src='http://www.yarl.com/forum/files/soli.jpg' border='0' alt='user posted image'>
A, B, C, D, E, F, G, H, I
என 9 தெரியாக்கணியங்கள் உள்ளன ஆனால் எம்மால்
A+B+C=57
D+E+F=57
G+H+I=57
A+D+G=57
B+E+H=57
C+F+I=57
A+E+I=57
C+E+G=57
என்று 8 சமன் பாடுகளையே ஆக்கமுடியும்
இன்னுமொரு சமன்பாடு இல்லாதவரையில் சமன்பாடுகள் மூலம் இதற்கு தீர்வு காணமுடியாது என்று தான் நினைக்கிறேன். அத்துடன் விடையும் சொல்லிவிட்டார்கள் நான் முயற்சிக்கவுமில்லை.
மாறாக கீழேயுள்ளது போல் ஒருகணியத்திக்கான பெறுமதி இடப்பட்டிருப்பின்
<img src='http://www.yarl.com/forum/files/soli2.jpg' border='0' alt='user posted image'>
சமன்பாடுகள் மூலம் தீர்வுகாணலாம்.
அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்
அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->