07-12-2003, 03:06 PM
யாழ். குடாநாட்டில்; சமூக விரோதச் செயல்கள் அதிகரிப்பு
யாழ். குடாநாட்டின் நல்லு}ர் கோவில் வீதியில் சங்கிலியன் வீதிக்கு எதிர் வீதியில் உள்ள சிறிய விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு இராப்பொழுதில் போதையில் வரும் இளைஞர் குழுக்களே இச்சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உந்துருளி மற்றும் சிற்று}ர்திகளில் வரும் இளைஞர் குழுக்கள் அவ் மைதானத்திற்கு அண்மையில் உள்ள வீடுகளுக்கு கற்களால் எறிவதாகவும் வீடுகளை அசிங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இராப் பொழுதுகளில் சமூகச் சீர்கேடுகளில் இளம் பெண்களும் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மாலை 6.30 மணி தொடக்கம் அங்குவரும் அக்குழுக்கள் அதிகாலை 3.00 மணி வரையும் தமது கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆண்களின் துணையின்றி வாழும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்தே தமது இரவுகளைக் கழிக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இச்செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.