07-04-2004, 06:27 PM
<b>ஒரு தடாகத்தில் சில அல்லி மலர்கள் பூத்திருந்தன. அங்கு சில குருவிகள் வந்தன. ஒவ்வொரு பூவுக்கும் ஒரு குருவியாக அவை அமர்ந்தன. அப்பொழுது ஒரு குருவிக்கு இருக்க பூ இல்லாதிருக்கவே ஒவ்வொரு பூவுக்கும் இரண்டு குருவிகளாக அமர்ந்தன. அப்பொழுது ஒரு பூ மிகுதியாக இருந்தது. எனவே தடாகத்தில் இருந்த பூக்கள் எத்தனை? வந்த குருவிகள் எத்தனை?</b> :?: :?:
<b>எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ரோஜாச் செடிகளில் அநேக மலர்கள் மலர்ந்திருந்தன. நான் அவற்றில் சில பூக்களை முதல்நாள் பறித்துக்கொண்டு வந்தேன். செடிகளில் சில பூக்கள் மீதி இருந்தன. மறுநாள் சென்று பார்த்த போது நேற்று மீதம் இருந்ததைப் போல ஒரு மடங்கு அதிகமாக மலர்ந்திருந்தன. அன்றும் முன்பு பறித்த அளவே பறித்துக்கொண்டு வந்தேன். மூன்றாம் நாள் பறிக்கச் சென்ற போதும் நேற்று மீதம் இருந்ததைப் போல ஒரு மடங்கு அதிகமாக மலர்ந்திருந்தன. அன்றும் அதே அளவு பூக்களை பறித்துக்கொண்டு வந்தேன். இப்பொழுது செடிகளில் இலைகள் தான் மீதம் என்றால் முதலில் இருந்த பூக்கள் எத்தனை? நான் ஒவ்வொரு தடவையும் பறித்த பூக்கள் எத்தனை?</b> :?: :?: :?:

----------