07-03-2004, 12:55 PM
தமிழீழ நீதிமன்றத்தில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது: தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ நீதிமன்றங்களினால் இதுவரையில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் இளையதம்பி பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி நீதித்துறைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்ட நீதித்துறைப் பொறுப்பாளர், தமிழீழ நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற சட்டங்கள் விடுதலைப் புலிகளினால் இயற்றப்பட்டுள்ள அதேவேளை, இச்சட்டங்கள் பீனல் கோர்ட் சட்டங்களை ஒத்தவை என்றும் தெரிவித்தார்.
சிங்கள மக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, மொழிபெயர்ப்புச் சேவை இந்த நீதிமன்றங்களில் இருந்து வருவதாகவும், இந்த நீதிமன்றங்களில் வாதிடும் நீதியாளர்கள் நாளொன்றுக்கு ஆகக்கூடிய தொகையாக 200 ரூபாவை மட்டுமே அறவிடலாம் எனவும் நீதித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>