![]() |
|
தமிழீழ நீதித்துறையின் வளர்ச்சி.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழீழ நீதித்துறையின் வளர்ச்சி.... (/showthread.php?tid=6983) |
தமிழீழ நீதித்துறையின - kuruvikal - 07-03-2004 தமிழீழ நீதிமன்றத்தில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது: தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் தமிழீழ நீதிமன்றங்களினால் இதுவரையில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளதாக தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் இளையதம்பி பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி நீதித்துறைத் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்ட நீதித்துறைப் பொறுப்பாளர், தமிழீழ நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படுகின்ற சட்டங்கள் விடுதலைப் புலிகளினால் இயற்றப்பட்டுள்ள அதேவேளை, இச்சட்டங்கள் பீனல் கோர்ட் சட்டங்களை ஒத்தவை என்றும் தெரிவித்தார். சிங்கள மக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, மொழிபெயர்ப்புச் சேவை இந்த நீதிமன்றங்களில் இருந்து வருவதாகவும், இந்த நீதிமன்றங்களில் வாதிடும் நீதியாளர்கள் நாளொன்றுக்கு ஆகக்கூடிய தொகையாக 200 ரூபாவை மட்டுமே அறவிடலாம் எனவும் நீதித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். puthinam.com - tamilini - 07-03-2004 Quote:இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா?..... - kirubans - 07-03-2004 tamilini Wrote:Quote:இதுவரையில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதா?..... தண்டனை உடனே கிடத்திருக்கும். மரண தண்டனைக் கைதிகளை வைத்துப் பராமரித்து என்ன பிரயோசனம்? - tamilini - 07-03-2004 அப்படியா?... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-03-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - kirubans - 07-03-2004 எல்லோரும் பத்திரமாகத்தானிருப்பார்கள். நீங்கள் கேட்டவுடன் மக்கள் முன்னிலையில் வருவதற்கு புலிகள் ஒரு அரசியல் கட்சியல்ல. அவர்கள் போர்க்கைதிகளுமல்ல ICRC யைக் கொண்டு விசாரிக்க. Re: தமிழீழ நீதித்துறையி - Kanthar - 07-04-2004 kuruvikal Wrote:தமிழீழ நீதிமன்றத்தில் 24,000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது: தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளர் ஐயோ குருவி உதை நீதித்துறை எண்டு சொல்லுறதில்லை. தலிபானும் உப்பிடி எல்லாம் வைச்சிருந்தவைதான். மாபியாவும் உதை விட நல்லா நீதி சொன்னவைதான். "மக்கள் ஆணைபெற்ற ஒரு வெளிப்படையான அமைப்புதான் நீதிதுறையை பரிபாலனம் செய்யமுடியும் என்றது மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள தேசங்களின் நம்பிக்கை." நீங்கள் சொல்லுற சன நாய் அகத்தில ஒரு வேளை உதுவும் நீதித்துறையாய் இருக்கும் - Eelavan - 07-04-2004 ஓம் அம்மான் அப்ப இப்படியான ஒரு அமைப்புத்தான் ஈராக் கைதிகளிற்கும் நீதி வழங்கியது என்கிறீர்கள் - Kanthar - 07-04-2004 Eelavan Wrote:ஓம் அம்மான் அப்ப இப்படியான ஒரு அமைப்புத்தான் ஈராக் கைதிகளிற்கும் நீதி வழங்கியது என்கிறீர்கள் "ஈராக்கில் மக்கள் ஆணை பெற்ற அமைப்பு ஜனவரி தேர்தலில் பின் தான் உருவாக வாய்ப்பு இருக்கிறது" எண்டு சொல்லுது பத்திரிகை செய்திகள். - Eelavan - 07-04-2004 அதாவது இதுவரை மக்கள் ஆணையைப் பெறாமலெ நீதியையும் நிர்வாகத்தையும் கையிலெடுத்து கொலைகளையும் சித்திரவதைகளையும் அரங்கேற்றியவர்கள் இப்போது தமக்கென பொம்மை அரசொன்றை நிறுவ முயற்சிக்கின்றனர் என்கிறீர்கள் எங்கள் நாட்டிலும் இதுதான் வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களாக்கும். ஒரு வித்தியாசத்துக்காவது சிங்களப்படைகளை எமது மன்ணைவிட்டுப் போகச் சொல்லுங்களேன் அதன் பின்னர் காவலுக்கன்றி ஆயுதங்களெதற்கு? - Mathivathanan - 07-04-2004 பாத்தியளே கந்தர்.. வக்காலத்து வாங்கிறது தலிபானுக்கும்.. சதாமுக்கும்.. இவங்கடை ஆட்சி என்னமாதிரியிருக்குமெண்டு இனி சொல்லியோ தெரியவேணும்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-04-2004 ஏன் கந்தர் மக்கள் ஆணை வழங்காமலோ 5 பேரோட ஆரம்பிச்சு....இப்ப மக்கள் சக்தியாக வளர்ந்திருக்கு.... உங்களப் போல மனிதப் புறநடைகளை மக்கள் என்று கருதுவதில்லை....இப்படிச் சொல்ல வருத்தந்தான்.... என்ன... சொல்ல வேண்டியெல்லே வைக்கிறியள்....! உந்த நீதிமன்றச் செயற்பாடுகளை அண்டை நாட்டுப் பத்திரிகை ஒன்று புகழ்ந்தெழுதியதை நாமே கண்டிருக்கின்றோம்.... கள்வனுக்கு..கொலைஞனுக்கு ...பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றமே கூடாது என்பதில்தான் என்ன நியாயம் இருக்கிறது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-04-2004 உண்மையான கள்ளன் கொலைஞன் யாரெண்டதுதான் இப்பத்தைய பிரச்சனை.. ஐநாவும் அதுக்குத்தான் ஆதாரம் தேடுது.. சங்கிலியன்படை.. எல்லாளன்படை.. பண்டாரவன்னியன்படை.. இப்படியே போகுது.. உதுகளுக்கு முடிவையும் கானேல்லை..
- Kanthar - 07-04-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Kanthar - 07-04-2004 மோகன் என்ன ஒன்லைன்னில நிண்டு தூக்கிறியள். உது சரியான fast அப்பா!!! - Mathivathanan - 07-06-2004 நீதித்துறை வளருதோ தேயுதோ தெரியேல்லை.. நேற்றைய சம்பவத்தை அரைகுறையா விழுங்கிறதிலையிருந்து நீதியான றிப்போடிங்கூட இல்லையெண்டு நல்ல வடிவாத் தெரியிது.. அதை ஒருபக்கத்திலை விட்டிட்டு .. இப்ப யார் யார் மட்டக்களப்பு.. அம்பாறை.. திருகோணமலை.. வவுனியா.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பு எண்டு சொல்லுங்கோ.. அந்த அரசியல்துறை இந்த அரசியல்த்துறை அந்தத் தளபதி இந்தத் தளபதி எண்டு அறிக்கை விடுற காலம்போய்.. இப்ப புதுசு புதுசா யார்யாரோவெல்லாம் வாறாங்கள் பிறகு காணாமல்ப்போறாங்கள்.. என்னப்பா நடக்கிது..? - tamilini - 07-06-2004 ஆகா தாத்தாவுக்கு தான் நாட்டின் மேல் என்ன பற்று... என்ன பற்று... எவ்வளவு ஆவலாய்.. நாட்டை பற்றி விசாரிக்கிறார்... பொறுங்கோ... உங்கள் கேள்விக்கு.. விரைவில்.. பதில் தருவார்கள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Paranee - 07-06-2004 தாத்தாவிற்கு உள்ள பற்று தலைவர்களிற்குகூட இல்லை - Mathivathanan - 07-06-2004 ஒரு ஒண்டரை மாதத்துக்குமுன்னம் ஏதோ அவன் இவனெண்டு அறிக்கை விட்டாங்கள்.. இப்ப ஒருத்தரையும் கானேல்லை.. யார் யாரோ பேர் தெரியாதவன் வாறான்.. பிறகு அவனும் காணாமல்ப்போறான்.. குழப்பத்தை நீக்க ஒரே வழி கேட்டு அறியிறதுதான்.. இல்லையோ.. Mathivathanan Wrote:நீதித்துறை வளருதோ தேயுதோ தெரியேல்லை.. நேற்றைய சம்பவத்தை அரைகுறையா விழுங்கிறதிலையிருந்து நீதியான றிப்போடிங்கூட இல்லையெண்டு நல்ல வடிவாத் தெரியிது.. அதை ஒருபக்கத்திலை விட்டிட்டு .. - sOliyAn - 07-06-2004 Mathivathanan Wrote:ஒரு ஒண்டரை மாதத்துக்குமுன்னம் ஏதோ அவன் இவனெண்டு அறிக்கை விட்டாங்கள்.. இப்ப ஒருத்தரையும் கானேல்லை.. யார் யாரோ பேர் தெரியாதவன் வாறான்.. பிறகு அவனும் காணாமல்ப்போறான்.. குழப்பத்தை நீக்க ஒரே வழி கேட்டு அறியிறதுதான்.. இல்லையோ.. யாழ் இணையத்தை பார்த்திட்டாங்களோ?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|