07-03-2004, 09:08 AM
vennila Wrote:<b>1)இரகசியக் குறியீட்டு மொழியில் எழதப்பட்டுள்ள நான்கு வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஆனால் இரகசியக் குறியீட்டு மொழியில் ஆங்கில எழுத்துக்கள் அதே ஒழுங்கில் எழுதப்படவில்லை.
குறிப்பிட்ட இடத்துக்கு நேரத்துக்கு வருக . SNYM
குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தித்துக் கதைப்போம். TQSM
வருக நாளை குறிப்பிட்ட இடத்துக்கு வருக YYNKM
நாளை அன்பாகக் கதைப்போம் QKZ
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்குக.
(I)நாளை சந்தித்துக் கதைப்போம்
(II)நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு வருக
(III)நாளை குறிப்பிட்ட நேரத்துக்கு சந்தித்துக் கதைப்போம்.
வாக்கியத்தை எழுதுக.
(IV) KZQ
(V) YYSY</b>
<b>2) குருவிகள் ஒரு தோப்புக்குச் சொந்தக்காரன்.
அங்கு மா வாழை பலா ஆகிய மரங்கள்
இருந்தன. தோப்பில் 1/3 பகுதி மா மரங்கள்
1/4 பகுதி வாழை மரங்கள் பலா மரங்களோ
30 இருந்தன. அப்படியானால் குருவிகளின் தோப்பில்
இருந்த மொத்த மரங்கள் எத்தனை</b>?
<b> 3) விழிப்புலனற்றோருக்கு உதவி செய்யும் நோக்கில்
நிதி வசூலிக்கப்பட்டது. ஒருவர் ஒரு தொகையை
உண்டியலில் போட்டார். இரண்டாவது நபர்
முதல் நபரை விட 2 மடங்கு தொகையை
போட்டார். மூன்றாவது நபர் இரண்டாவது நபரை விட
3 மடங்கு தொகையையும் நான்காவது நபர் மூன்றாவது நபரை
விட 4 மடங்கு தொகையையும் உண்டியலில் போட்டனர்.
நான்கு (1 2 3 4 ) பேரும் போட்ட மொத்தத் தொகை 8250/=. ஆகும்
ஒவ்வொரு நபரும் உண்டியலில் போட்ட தொகை எவ்வளவு?</b>
<b>கண்டுபிடியுங்கள்</b>
என்னால் முடிந்தவை
<b>1) </b>
1-KTQ
2-SMNY
3-KMSTQ
4-நாளை அன்பாகக் கதைப்போம்
5-வருக வருக நேரத்துக்கு வருக
2) 72
நன்றி நித்திரை வருகின்றது நாளை பார்ப்போம் மற்றையதை.
[b][size=18]

