07-01-2004, 12:29 PM
<b>கொழும்பில் கருணாவின் பெயரால் உயிர்பெறும் பொய்ப்பிரச்சாரங்கள் </b>
[ கொழும்பிலிருந்து தேசிகன் ] [ வியாழக்கிழமை, 01 யுூலை 2004, 0:03 ஈழம் ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவுடன் சேர்ந்து இயங்கிய ஏழு தேச விரோதிகள் கைதுசெய்யப்பட்ட செய்தியின் முக்கியத்துவத்தைத் திருப்புமுகமாக கொழும்பு ஊடகங்கள் திட்டமிட்ட பொய்ச் செய்திகளைப் பரப்பும் வேலைகளை ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக, நிலாவினியுட்பட நால்வர் இரு வாரங்களிற்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் தஞ்சமடைந்த போது அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், மக்களின் அவதானத்தை திசை திருப்புமுகமாகவும், தொப்பிகல காட்டுப்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றதாகவும் அதில் கேணல் ரமேஸ் உள்ளிட்ட பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன.
எனினும் அந்த முயற்சியில் மேற்படி ஊடகங்கள் தோல்வியடைந்தன. இருந்தும் கருணா தீவிரமாகச் செயற்படுவது போன்ற தோற்றத்தையேற்படுத்தும் மலினத்தனமான பிரச்சாரங்களையும் கருணாவிற்கு பின்னால் பலர் இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த அவை தீவிரமாக முயன்று வந்தன. குறிப்பாக இத்தகைய செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஒரு குழப்பநிலையை உருவாக்கும் என்று எதிர்பார்த்தே அவை இவ்வாறான பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்கின்றன.
எனினும் கருணாவுடன் தப்பியோடியவர்களில் வரதனைத் தவிர ஏனையோர் விடுதலைப்புலிகளிடம் மீண்டும் வந்துள்ளனர். இவர்களில் இறுதியாக வந்திணைந்த நிலாவினி போன்றோரின் தகவலின்படி, கருணா சுமார் 10ல் இருந்து 20 வரையான தேசவிரோதிகளை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் வைத்திருப்பதாகவும் அவர்களே இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாகவும் உறுதியாகத் தெரிய வந்தது.
இந்நிலையில் மேற்படி தேசவிரோதிகளில் 7 பேரை விடுதலைப்புலிகள் கைது செய்துள்ளதானது மேலும் பல தகவல்களைக் வெளிக்கொணரும் என்பதோடு கருணாவின் தேச விரோதச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஏதுவாகும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி 7 தேசவிரோதிகளும் கைது செய்யப்பட்டதைப் பொறுக்க முடியாத கொழும்பு ஊடகங்கள் தற்போது புதுவிதமான செய்தியொன்றை உலாவ விட்டுள்ளன. அதன் பிரகாரம் கருணா வெகுவிரைவில் புதிய கட்சியொன்றைத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யவுள்ளதாகவும் அதில் கருணாவின் அணி முக்கியஸ்தர்கள் பலரும் அங்கம் வகிப்பார்கள் என்றும் ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியை அவை திட்டமிட்ட வகையில் பரப்பி வருகின்றன.
தற்போது ஒட்டுமொத்தமாகச் செயலிழந்து போயுள்ள கருணாவிற்கு முண்டு கொடுப்பது போல இந்தச் செய்தி தெரிந்தாலும், சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் கருணாவிற்கும் இடையேயான உறவைப் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதைத் தடுக்குமுகமாகவும், தமிழ்மக்களை மீண்டும் குழப்பும் முகமாகவுமே இவ்வாறான செய்திகளை மேற்படி ஊடகங்கள் பரப்பி வருகின்றன.
எனினும் நிலாவினி போன்றோர் விரைவில் கருணா விவகாரத்திலான சிறீலங்கா அரசின் பங்கு குறித்த மேலதிக தகவல்களை பத்திரிகையாளர்களிற்கு வழங்கவுள்ள அதேவேளை, மேற்படி தேசவிரோதிகள் எழுவரும் மட்டக்களப்பில் தாங்கள் நிகழ்த்திய தேசவிரோதச் செயற்பாடுகளையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கருணாவுடனான தொடர்பையும் விரைவில் பத்திரிகையாளர்களிற்குத் தெரியப்படுத்துவார்கள் என்றும் தெரியவருகிறது.
எனவே சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமிட்ட பொய்ப் பரப்புரைகள் மற்றும் செய்திகள் குறித்து தமிழ் ஊடகங்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், செய்திகளை முந்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, நம்பகத்தன்மையற்ற இவ்வாறான பொய்ச் செய்திகளை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதே இன்றைய திகதியில் தமிழ் மக்களிற்கு நன்மை பயக்கும் செயலாகும்.
நன்றிபுதினம்
தாத்தா நீங்களும் அந்த ஊடகத்தில்....அல்லது காசு கீசு????? :wink: