![]() |
|
கருணாவை கைது செய்ய இராணுவ உதவி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கருணாவை கைது செய்ய இராணுவ உதவி? (/showthread.php?tid=6992) |
கருணாவை கைது செய்ய இரா - Mathan - 06-29-2004 கருணாவை கைது செய்ய புலிகள் இராணுவ உதவியை கோரலாம் என்று இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. LTTE to seek Armys assistance to arrest Karuna? Alladin Hussein in Colombo, June 29, 2004, 10.59 p.m.. The LTTE, which is continuing to hunt down its rebel leader Karuna, may seek the assistance of the Sri Lanka Army for this task, unconfirmed reports claim. The LTTE might ask for the Armys assistance to arrest Karuna, sources claimed. This report comes in the midst of conflicting stories that the Military is giving protection to the LTTE rebel leader. Meanwhile, LTTE Political Wing Leader S.P. Thamilselvam told the Sri Lanka Monitoring Mission yesterday that his organization had received sufficient evidence that the Sri Lanka Military is giving protection to Karuna. And noted that this was a big black mark to the ceasefire agreement. - kirubans - 06-29-2004 வடக்கில் டக்ளஸ் மாதிரி கருணா கிழக்கில் புலிகளுக்கு ஒறு முள்ளாக பல காலம் நிலைத்து நிற்பார் போலத்தான் தெரிகிறது. என்னதான் புலிகள் வெருட்டினாலும் தலைகீழாக நின்றாலும் இராணுவம் கருணாவை புலிகளிடம் கொடுக்கப் போவதில்லை. தேடிப்போய்ப் பிடித்தால் தான் உன்டு. - tamilini - 06-29-2004 Quote:தேடிப்போய்ப் பிடித்தால் தான் உன்டு. அது பெரிய வேலையோ?...... - Mathan - 06-29-2004 ம் - kirubans - 06-29-2004 பெரிய வேலையில்லத்தான். என்றாலும் டக்ளசின் ஆயுள் ரேகை மாதிரி கருணாவின் ஆயுள் ரேகையும் வலு கெட்டி போலுள்ளது. :wink: - tamilini - 06-29-2004 டக்ளஸ்க்கு இருந்தென்ன இல்லாமல் இருந்தென்ன?..... காலம் பதில் சொல்லும்....... - kirubans - 06-29-2004 காலம் போனால் புலி எதிர்ப்பு கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடும். பின்பு தமிழ் தேசியக் கூட்டணியும் மற்றப் பக்கம் தாவி விடும். - tamilini - 06-29-2004 Quote:தேசியக் கூட்டணியும் மற்றப் பக்கம் தாவி விடும்.விட்டால் அவர்களால் தான் எல்லாம் நடக்குது என்டு சொல்லுவியள் போல கிடக்கு.... - kirubans - 06-29-2004 தமிழ் தேசிய உணர்வுள்ள மக்களால்தான் இவ்வளவு தூரம் போராட்டம் முன்னேறியுள்ளது. மற்றும்படி எவரும் தங்களால்தான் என்று உரிமை கூறமுடியாது. மக்களின் அபிலாஷைகளை புலிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மக்கள் புலிகளை அரவணைத்துள்ளார்கள். - Aalavanthan - 06-29-2004 கருணா என்ற விடயத்தினை நாங்கள் தான் ஊதிப் பெருப்பிக்கின்றோம். பேசாது நாம் எமது கடமைகளைச் செய்வோம். கருணா விவகாரத்தை எமது தலைமை கவனிக்கும். நெருப்பைப் புகைய வைக்க முடியும். புகைய வைக்கட்டா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-29-2004 சரியாக சொன்னியள்....... ஆளவந்தான் ........ - Aalavanthan - 06-29-2004 தற்போது TTNல் கருணாவிடம் இருந்து தப்பி வந்தவர்களதும், ரமேசினதும் பேட்டிகள் ஒளிபரப்பானது. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள். எம்மைத்தான் இங்கு குழப்ப முயற்சிக்கின்றார்கள். காலம் இந்தக் கும்பல்களுக்கு பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம் ! - kirubans - 06-30-2004 புலிகள் தெளிவாக இருப்பதால்தான் கருணாவின் பிரச்சனையை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இராணுவம் ஒருபோதும் புலிகளுக்கு உதவி செய்யாது என்பதுதான் என் கணிப்பு. தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்க சிங்கள அரசு கருணாவை பயன்படுத்துகிறது என்பதுதான் யதார்த்தம். சிங்கள அரசின் பிடியிலிருந்து கருணா தப்ப முடியாது. ஏனெனில் அவரின் எதிர்காலமே தன்னுயிரைக் காப்ப்பதில்தான் உள்ளது. உயிரின் மீது உள்ள ஆசையால்தான் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு தலைமைக்கு எதிராகக் கிளம்பினார். இப்போதும் அதனால்தான் புலனாய்வு பிரிவுடன் இயங்குகிறார். - Mathivathanan - 06-30-2004 மசேஸ்வரன் கருணாவை சந்தித்தாக விடப்பட்ட வதந்திக்கு பிபிஸி தமிழோசை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. மகேஸ்வரன் அதனை முற்றுமுழுதாக நிராகரித்து நியாயமாக ஆதாரத்தையும் வழங்கியுள்ளார்..
- Mathivathanan - 07-01-2004 கருணாவென்ன.. இங்கு கருத்தெழுதும் அத்தனைபேரும் தங்கள் தங்கள் உயிரை காப்பாற்றத்தான் வெளிநாடு வந்துள்ளார்கள்.. ஒருவேளை அவர் தப்பி இங்கு வநதால் இங்கு எழுதும் பலரையும்போல தேசியம் என்று கூறாவிட்டாலும் கடைசி விடுதலையென்றாலும் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்காமல்லவா..?
- Kanani - 07-01-2004 <b>கொழும்பில் கருணாவின் பெயரால் உயிர்பெறும் பொய்ப்பிரச்சாரங்கள் </b> [ கொழும்பிலிருந்து தேசிகன் ] [ வியாழக்கிழமை, 01 யுூலை 2004, 0:03 ஈழம் ] மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவுடன் சேர்ந்து இயங்கிய ஏழு தேச விரோதிகள் கைதுசெய்யப்பட்ட செய்தியின் முக்கியத்துவத்தைத் திருப்புமுகமாக கொழும்பு ஊடகங்கள் திட்டமிட்ட பொய்ச் செய்திகளைப் பரப்பும் வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, நிலாவினியுட்பட நால்வர் இரு வாரங்களிற்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் தஞ்சமடைந்த போது அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை குறைப்பதற்காகவும், மக்களின் அவதானத்தை திசை திருப்புமுகமாகவும், தொப்பிகல காட்டுப்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றதாகவும் அதில் கேணல் ரமேஸ் உள்ளிட்ட பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன. எனினும் அந்த முயற்சியில் மேற்படி ஊடகங்கள் தோல்வியடைந்தன. இருந்தும் கருணா தீவிரமாகச் செயற்படுவது போன்ற தோற்றத்தையேற்படுத்தும் மலினத்தனமான பிரச்சாரங்களையும் கருணாவிற்கு பின்னால் பலர் இருப்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த அவை தீவிரமாக முயன்று வந்தன. குறிப்பாக இத்தகைய செய்திகளைத் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஒரு குழப்பநிலையை உருவாக்கும் என்று எதிர்பார்த்தே அவை இவ்வாறான பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்கின்றன. எனினும் கருணாவுடன் தப்பியோடியவர்களில் வரதனைத் தவிர ஏனையோர் விடுதலைப்புலிகளிடம் மீண்டும் வந்துள்ளனர். இவர்களில் இறுதியாக வந்திணைந்த நிலாவினி போன்றோரின் தகவலின்படி, கருணா சுமார் 10ல் இருந்து 20 வரையான தேசவிரோதிகளை மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் வைத்திருப்பதாகவும் அவர்களே இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதாகவும் உறுதியாகத் தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி தேசவிரோதிகளில் 7 பேரை விடுதலைப்புலிகள் கைது செய்துள்ளதானது மேலும் பல தகவல்களைக் வெளிக்கொணரும் என்பதோடு கருணாவின் தேச விரோதச் செயற்பாடுகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஏதுவாகும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் மேற்படி 7 தேசவிரோதிகளும் கைது செய்யப்பட்டதைப் பொறுக்க முடியாத கொழும்பு ஊடகங்கள் தற்போது புதுவிதமான செய்தியொன்றை உலாவ விட்டுள்ளன. அதன் பிரகாரம் கருணா வெகுவிரைவில் புதிய கட்சியொன்றைத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யவுள்ளதாகவும் அதில் கருணாவின் அணி முக்கியஸ்தர்கள் பலரும் அங்கம் வகிப்பார்கள் என்றும் ஒரு உண்மைக்குப் புறம்பான செய்தியை அவை திட்டமிட்ட வகையில் பரப்பி வருகின்றன. தற்போது ஒட்டுமொத்தமாகச் செயலிழந்து போயுள்ள கருணாவிற்கு முண்டு கொடுப்பது போல இந்தச் செய்தி தெரிந்தாலும், சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் கருணாவிற்கும் இடையேயான உறவைப் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறுவதைத் தடுக்குமுகமாகவும், தமிழ்மக்களை மீண்டும் குழப்பும் முகமாகவுமே இவ்வாறான செய்திகளை மேற்படி ஊடகங்கள் பரப்பி வருகின்றன. எனினும் நிலாவினி போன்றோர் விரைவில் கருணா விவகாரத்திலான சிறீலங்கா அரசின் பங்கு குறித்த மேலதிக தகவல்களை பத்திரிகையாளர்களிற்கு வழங்கவுள்ள அதேவேளை, மேற்படி தேசவிரோதிகள் எழுவரும் மட்டக்களப்பில் தாங்கள் நிகழ்த்திய தேசவிரோதச் செயற்பாடுகளையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கருணாவுடனான தொடர்பையும் விரைவில் பத்திரிகையாளர்களிற்குத் தெரியப்படுத்துவார்கள் என்றும் தெரியவருகிறது. எனவே சிறீலங்கா அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டமிட்ட பொய்ப் பரப்புரைகள் மற்றும் செய்திகள் குறித்து தமிழ் ஊடகங்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், செய்திகளை முந்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, நம்பகத்தன்மையற்ற இவ்வாறான பொய்ச் செய்திகளை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதே இன்றைய திகதியில் தமிழ் மக்களிற்கு நன்மை பயக்கும் செயலாகும். நன்றிபுதினம் தாத்தா நீங்களும் அந்த ஊடகத்தில்....அல்லது காசு கீசு????? :wink: - Mathivathanan - 07-01-2004 கணணி.. உங்களுக்கு காசு கிடைக்குது எண்டு சொல்லாமல் சொல்லுறியள்.. சரி சரி.. நடக்கட்டும்.. எது பொய் எது மெய் எண்டு தெரியாமல்க்கிடக்கு.. சொன்ன எதுவுக்கும் ஆதாரமில்லை.. (புறூவ்ஹொப்டே சொன்னது) அப்படியிருக்க எது பொய்ப்பிரச்சாரமெண்டு நானெப்படி தீர்மானிக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Shan - 07-01-2004 உம்மைத் தவிர! நீர் இங்கை தப்பி வந்தது ஒளிச்சிருந்து கழுத்தறுக்க! தப்பி வந்தது தப்பி வந்தது எண்டு புலம்புற உமக்கு மனித உரிமை பற்றி பேச என்ன யோக்கியதை? அவன் அவன் மனித உரிமை தப்பிவாறதும் பேசுவதும் அதை ஏளனம் செய்வது நீர் செய்யும் முதலாவது மனித உரிமை மீறல். நீர் ஸ்ருடனற் விசாவில் வந்தவர் எண்டு நல்லா புழுகும். நீர் அப்படி வந்திருந்தால் இப்ப திரும்பியெல்லே போயிருக்க வேணும். உம்மடை தெற்கிலை உம்மை அவை பாதுகாப்பினம் தானே! தேசியம் ஒரு மனிதனின் உணர்வு! அந்த உணர்வை ஏளனம் செய்வது நீர் மீறும் அடுத்த மனித உரிமை! ஒரு இனத் தனித்து வாழ விரும்பினால் அந்த உணர்வை மதிக்க முதலிலை பழகும். உமக்கு விருப்பமில்லாட்டி மற்ற தேசியத்துடன் கலந்து வாழும் அது உமது உரிமை. ஆனால் மற்றவர்களை ஏளனமம் செய்யும் சொறிச்சேட்டைஐய விடும்! - Mathivathanan - 07-01-2004 நீக்கப்பட்டுள்ளது. மதிவதனன் முதலில் யதார்த்தத்திற்கு வாருங்கள். வரலாற்தை திருப்பிப்படியுங்கள். எங்கே பிழை என்று தெரியும். திரும்பத்திரும்ப ஒரே விடயத்தில் நிற்கின்றீர்கள். உண்மை நிலவரங்கள் உங்களுக்குத் தெரிவில்லை. மற்றவர்களின் கருத்தினைவிட்டு நீங்கள் சென்று உண்மையை அறிந்துவாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> - மோகன்.
- kavithan - 07-01-2004 தாத்தா நீங்கள் கதைப்பது எனக்கு புரியவில்லை உங்களுக்கும் கருணாவுக்கும் அப்படி என்ன உறவு அல்லது அன்பு. கொஞ்சம் சொல்லுங்களேன் எனக்கும். |