06-30-2004, 01:56 AM
kavithan Wrote:கிட்டத்தட்ட சரி என்றதனால் அசட்டையாக இருந்துவிட்டோம் மன்னித்து கொள்ளுங்கள் இளங்கோ அண்ணா.
kavithan உங்களைச்சொல்லவில்லை
நீங்கள் பதில் தானே எழுதினீர்கள்.தவறில்லை.
இந்தப்பேனைகதையும் இந்த அமெரிக்கரின் ஏமாற்றுவித்தை பற்றியும் சிறுவயதில் கேள்விப்பட்டது.
அவர் கூறிய பதிலால் எனக்கும் சின்னசந்தேகம் நான் கூறுவது தான் தவறோ என்று
vennila விலும் தவறில்லை அவரை எல்லோரும் குழப்பிவிட்டீர்கள்.
அவர் வாழைப்பழம் = Musa sapientum பற்றி தந்த தகவல் சரியானபோதும் google இல் கிடைக்கவில்லை என்றும் அப்படி ஒன்றும் இல்லை என்றும் குதக்கம் செய்தீர்கள். ஆனால் சாதரணதர விஞ்ஞானப்புத்தகத்திலியே இது பற்றி இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படி குழப்பியதால் நாம் சொல்வது எதனையும் அவர் கருத்தில் எடுக்காமல் இருந்திருக்கலாம்.

