06-29-2004, 09:42 PM
கண்ணீர் மலர்கள்
பாலைவனம் தானே என்று
பலர் நினைத்தாலும்
பாதம்பதித்த எமது மண்
எமக்குச் சோலைவனம்தான்
அறியாமையின் அழுக்குப்பிடியில்
வறுமையின் வக்கிரத்தனத்தில்
மிதவாதத்தின் சூட்சுமத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
அங்கே சாகப் பிறந்தவர்கள்
பேரினவாதத்தின் பித்தலாட்டமும்
அரசியில்வாதியின் அசிங்கத்தனமும்
தலைவிரித்தாடுவதால்
அடிப்படை மனித உரிமைகள்
மறுக்கப்பட்டு மறக்கப்பட்டு
செத்துக் கொண்டிருக்கின்றது
அடக்கு முறையாளர்களால்
தடம்பதித்த அட்டூழியத்தை
தட்டிக்கேட்கும் தமிழனுக்கு
தானமாகக் கிடைப்பதெல்லாம்
மரணம் என்ற கொடூரம்தான்
அமைதியென்ற பெயரால்
அரங்கேறும் கொடுமையினால்
மனையிழந்தோர் எத்தனைபேர்
மகவிழந்தோர் எத்தனைபேர்
வெட்டிக்கொன்றார்கள் சுட்டுச்சென்றார்கள்
ஆளைக் கூட்டிப்போய் தட்டிப்போட்டார்கள்
இரவும் பகலும் இலவசமாய்
இலங்கையில் கிடைப்பது
இந்த மரணம் ஒன்றுதான்
வாழவேண்டும் என்ற ஆசை
வருவதும் பாவமா
கண்ணுக்குள் தெரியும்
கனவுகளைக் கூட கருத்தரிக்க விடாமல்
கலைத்துவிடும் கரிச்சவண்டே
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னச் சின்ன ஆசைகளில்
பறக்கத்துடிக்கும் இதயங்களின்
பாவத்தின் சிறகுகளை
அறுக்க நினைப்பது என்ன நியாயம்;
துப்பாக்கிக் குண்டுக்குப் பயந்து
தொலைதூரம் ஓடிவந்து
பத்தைக்குள் பதுங்கையிலே
படுத்திருந்த பாம்பு தீண்டி
பரலோகம் செல்லும்
பரிதாபப் பிறவிகளின்
மரணங்கள் சுமந்த கல்லறைகள் மீது
கண்ணீர் மலர்கள் முத்தமிடுகின்றன
கண்ணீர் மலர்கள்
நன்றி - சௌந்தரி சிவானந்தன்
பாலைவனம் தானே என்று
பலர் நினைத்தாலும்
பாதம்பதித்த எமது மண்
எமக்குச் சோலைவனம்தான்
அறியாமையின் அழுக்குப்பிடியில்
வறுமையின் வக்கிரத்தனத்தில்
மிதவாதத்தின் சூட்சுமத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்
அங்கே சாகப் பிறந்தவர்கள்
பேரினவாதத்தின் பித்தலாட்டமும்
அரசியில்வாதியின் அசிங்கத்தனமும்
தலைவிரித்தாடுவதால்
அடிப்படை மனித உரிமைகள்
மறுக்கப்பட்டு மறக்கப்பட்டு
செத்துக் கொண்டிருக்கின்றது
அடக்கு முறையாளர்களால்
தடம்பதித்த அட்டூழியத்தை
தட்டிக்கேட்கும் தமிழனுக்கு
தானமாகக் கிடைப்பதெல்லாம்
மரணம் என்ற கொடூரம்தான்
அமைதியென்ற பெயரால்
அரங்கேறும் கொடுமையினால்
மனையிழந்தோர் எத்தனைபேர்
மகவிழந்தோர் எத்தனைபேர்
வெட்டிக்கொன்றார்கள் சுட்டுச்சென்றார்கள்
ஆளைக் கூட்டிப்போய் தட்டிப்போட்டார்கள்
இரவும் பகலும் இலவசமாய்
இலங்கையில் கிடைப்பது
இந்த மரணம் ஒன்றுதான்
வாழவேண்டும் என்ற ஆசை
வருவதும் பாவமா
கண்ணுக்குள் தெரியும்
கனவுகளைக் கூட கருத்தரிக்க விடாமல்
கலைத்துவிடும் கரிச்சவண்டே
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னச் சின்ன ஆசைகளில்
பறக்கத்துடிக்கும் இதயங்களின்
பாவத்தின் சிறகுகளை
அறுக்க நினைப்பது என்ன நியாயம்;
துப்பாக்கிக் குண்டுக்குப் பயந்து
தொலைதூரம் ஓடிவந்து
பத்தைக்குள் பதுங்கையிலே
படுத்திருந்த பாம்பு தீண்டி
பரலோகம் செல்லும்
பரிதாபப் பிறவிகளின்
மரணங்கள் சுமந்த கல்லறைகள் மீது
கண்ணீர் மலர்கள் முத்தமிடுகின்றன
கண்ணீர் மலர்கள்
நன்றி - சௌந்தரி சிவானந்தன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

