07-11-2003, 11:22 AM
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கென அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள இடைக்கால நிர்வாக சபை தொடர்பாக அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், மிலிந்தமொறகொட ஆகியோர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து விளக்கமளித்துள்ளனர். இந்த இடைக்கால நிர்வாக சபை தொடர்பான நகல் வரைபு புூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும், புலிகளின் கருத்துக்களைத் தெரிந்து கொண்ட பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் பீரிஸ் இங்கு தெரிவித்துள்ளார். இக்கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொதுசன முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்ட போதும் அவை அதில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

