06-25-2004, 01:25 AM
<img src='http://www.kumudam.com/reporter/270604/pg8t.jpg' border='0' alt='user posted image'>
ஆனமட்டும் ஐ.நா. தடுத்துப் பார்த்தது. எதற்கு தண்டத்துக்கு ஒரு சண்டை, வீண் செலவு என்று கதறிப் பார்த்தது. ம்ஹ§ம். கேட்கவில்லையே புஷ். அபாயகரமான ரசாயன, உயிரியல் ஆயுதங்கள் வைத்திருக்கிறார் சதாம் உசேன் என்று சொல்லி, வார்த்தைகளால் அவரை மானிட குலத்தின் எதிரியாகச் சித்திரித்து ஈராக்கின் மீது யுத்தம் தொடங்கினார்.
மார்ச் 19, 2003 அன்று யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்பதாம் தேதி பாக்தாத் விழுந்தது. உடனே ஈராக்கின் நிர்வாகத்தை அமெரிக்க _ பிரிட்டன் கூட்டு ராணுவப்படையே ஏற்றுக்கொண்டது. டிசம்பர் 14_ம் தேதி சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டுகள் வெடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இன்றுவரை அந்தச் சத்தம் குறைந்தபாடில்லை.
ஆனால் என்ன காரணம் சொல்லி அமெரிக்கா அந்த யுத்தத்தைத் தொடங்கியதோ, அந்தக் காரணமே ஆதாரமில்லாதது என்பது நிரூபணமாகிவிட்டது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுப்படி ஈராக்கில் எந்தவிதமான ரசாயன, உயிரியல் ஆயுதங்களும் இல்லவே இல்லை. இதனை இன்றைக்கு அமெரிக்காவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. சதாம் உலக உத்தமர் என்று இதற்கு அர்த்தமல்ல. எண்பதுகளில் தமது எதிரிகளைக் கூண்டோடு ஒழிக்க அவர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது உண்மையே. ஆயிரக்கணக்கான குர்து இன மக்களை அவர் அந்த ஆயுதங்களைப் பிரயோகித்துத்தான் கொன்று வீசினார். இது ஈராக்கில் எல்லோருக்கும் தெரியும். உலகுக்கே தெரியும். ஆனால் அதன்பின் சதாம், ரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதிலோ, விலைக்கு வாங்குவதிலோ ஆர்வம் செலுத்தியதாகத் தெரியவில்லை.
<img src='http://www.kumudam.com/reporter/270604/pg8.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-3.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/270604/pg8-5.jpg' border='0' alt='user posted image'>
மாறாக, அபாயகரமான ஏவுகணைகளைத் தொடர்ந்து தயாரிப்பதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். வளைகுடா யுத்தத்தின்போது சதாமின் ஸ்பெஷல் தயாரிப்பான 'ஸ்கட்' ஏவுகணை வித்தை காட்டியதை உலகே அறியும். அதன் குறிப்பிடத்தகுந்த வெற்றிக்குப் பிறகு சதாம் ரசாயன ஆயுதங்களின்பால் நாட்டம் செலுத்தவே இல்லை.
ஆனாலும் சதாமை ஒழிப்பது என்று முடிவு செய்த அமெரிக்காவுக்கு மேற்படி குற்றச்சாட்டை விட்டுவிடமுடியாத அரசியல் நெருக்கடி இருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஈராக் மீதும் போர் தொடுத்தது. ஆகவே, சதாம் உசேன் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் என்கிற பல்லவி அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.
இன்றைக்கு சதாமைக் கைப்பற்றி, ஈராக்கில் தாம் விரும்பிய வண்ணம் ஓர் இடைக்கால அரசை ஏற்பாடு செய்ய முடிந்தபிறகு, "ஆமாம், ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்" என்று சொல்லுவதற்கு அத்தேசம் வெட்கப்படவே இல்லை. ஈராக்கியர்கள்தான் காறித்துப்பிவிட்டார்கள். "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று சொல்லுபவர்கள் ஜனநாயகவாதிகளாகவா நடந்துகொண்டார்கள்?இவர்களும் பயங்கரவாதிகளாகத்தானே நடந்துகொண்டார்கள்!" என்று கேட்கிறார்கள். அமெரிக்கா அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. போர் முடிந்த ஆறு மாதத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என்று சொல்லியிருந்தாலும் அவர்களுக்கு அது சாத்தியமாக இல்லை.
கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் முடிந்தபிற்பாடுதான் அவர்களால் ஓர் இடைக்கால அரசுக்கான ஆசாமிகளைப் பொறுக்கியெடுக்க முடிந்திருக்கிறது. ஷேக் காஜி அல் யாவர் என்றொருவரைப் பிடித்து "இவர்தான் புதிய பிரதமர்" என்று இப்போது அடையாளம் காட்டியிருக்கிறார்கள். "சுதந்திர ஈராக் இனி விரைவில் உருவாகும். சவாலை ஏற்று அல் யாவர் சிறப்பாகப் பணியாற்றுவார். அவருக்கு எல்லா ஒத்தாசைகளையும் அமெரிக்கா செய்துகொடுக்கும்" என்று புஷ் அறிவித்திருக்கிறார்.
ஹோஷியர் ஜெபாரி என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஃபலா அஸல் அல் நகிப் என்பவர் உள்துறை அமைச்சராகவும், ஹஸீம் சலான் அல் குஸேய் என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், அதில் அப்துல் மஹதி என்பவர் நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் யார், எங்கிருந்து முளைத்தார்கள் என்று இன்னும் வெளியுலகத்துக்கு முழு விவரம் தெரியாது. ஆனால் சிறப்பான ஆட்சியாளர்கள் என்று அமெரிக்கா சான்றிதழ் கொடுக்கிறது. என்ன அடிப்படை? அதையெல்லாம் கேட்கக் கூடாது. ஜூன் 30_ம் தேதி மேற்படி அமைச்சர் குழுவினர் அல் யாவர் தலைமையில் ஈராக்கில் இடைக்கால ஆட்சி அமைத்ததும், ஈராக்கில் அமைதியும் ஜனநாயகமும் ஓடோடி வந்துவிடும் என்று அமெரிக்கா சொன்னது. சிரிப்பாக இல்லை? அதுதான் அமெரிக்கா.
இந்த ஒரு யுத்தத்துக்காக மட்டும் அமெரிக்கா எத்தனை பில்லியன் டாலர்களைச் செலவழித்திருக்கிறது என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. சதாம் உசேன் என்கிற ஒரு தனிநபரை ஒழிக்கவேண்டும் என்பதற்காக ஈராக் என்கிற தேசத்தையே கொளுத்தலாம் என்பது அமெரிக்காவின் சித்தாந்தமாக இருந்திருக்கிறது.
எப்போது ஈராக்கிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை என்பது தெரியவந்ததோ, அந்தக் கணமே ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் ஈராக் யுத்தம் பற்றிய தமது அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தார்கள். செப்டம்பர் 11 சம்பவத்துடன் சதாம் உசேன் அரசுக்கு ஏதோ ஒÊரு தொடர்பு இருக்கும் என்கிற வதந்தியை திட்டமிட்டுப் பரப்பி, அதற்குச் சம்பந்தமில்லாத இன்னொரு எல்லையில் நின்று _ ரசாயன ஆயுதங்களைக் காரணம் காட்டி _ ஈராக் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. முதலில் புஷ் செய்வது சரிதான் என்றே அமெரிக்கர்கள் நினைத்தார்கள். இயல்பாகவே அமெரிக்கர்களுக்கு சதாம் உசேனைப் பிடிக்காது. ஆனால் ஆப்கன் யுத்தத்தை ஆதரித்த அளவுக்கு அவர்கள் ஈராக் யுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே முழுமையாக ஆதரித்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆயிரம் சொன்னாலும் பின்லேடனையும் சதாம் உசேனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க அவர்களால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.
இன்னொரு காரணம், மேலே சொன்ன ரசாயன ஆயுத விவகாரம். அடிப்படையில் அமெரிக்கர்களின் மனோபாவப்படி, போரையெல்லாம் அவர்கள் ரொம்பப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். "அதெல்லாம் அரசாங்கத்தின் தலைவலி" என்று ஒரு வரியில் முடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு வினாடி யோசிப்பார்கள். இந்தப் போர் தேவைதான் என்று தோன்றினால் ஆதரிப்பதாக அறிவிப்பார்கள். (இதற்கெல்லாம் வக்கணையாக நூறு கருத்துக் கணிப்புகள் நடத்தப்படும்!) வேண்டாம் என்று தோன்றினால் வேஸ்ட் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். வியட்நாமில் நடந்தமாதிரி பெரிய பாதிப்புகள் ஏதாவது வந்தால்தான் கொஞ்சம் தீவிரமாகக் கவலைப்படுவார்கள்.
அமெரிக்கர்களின் போர் பற்றிய எண்ணங்களை, கார்கில் யுத்தம் நடந்தபோது நம் மக்கள் அடைந்த மன எழுச்சியோடெல்லாம் ஒப்பிடவே முடியாது _ ஏனெனில் அடிக்கடி அவர்கள் போர்களைப் பார்த்து வருவதுதான். உலக நாடுகளெல்லாம் கிரிக்கெட் ஆடவும் ஃபுட்பால் ஆடவும் ஊர் ஊராக அணிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன என்றால், அமெரிக்கா மட்டும் சண்டை போடுவதற்காகத் தம் ராணுவத்தை அனுப்பிக்கொண்டிருக்கிறது. இது இன்று நேற்று நடக்கிற விஷயம் இல்லை என்பதால், அமெரிக்கர்கள் பொதுவில் இதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவர்களது பிரதான கவலைகளெல்லாம் வேலை வாய்ப்புகள் பற்றியும் பொருளாதார மேம்பாடு பற்றியும்தான்.
ஒரு யுத்தம் அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது மிக முக்கியமான விஷயம். யுத்தத்துக்குப் போன ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் சொல்லும் துயரக்கதைகளைக் கேட்டுக்கேட்டு மிகவும் மனப்பதற்றம் கொள்வார்கள். ஐயோ என்று அவர்களுக்காகப் பதறுவார்களே தவிர, எதற்கு இந்த யுத்தம் என்றோ, அரசாங்கம் அநியாயம் செய்கிறது என்றோ விமரிசனம் செய்யமாட்டார்கள். மாறாக, யுத்தத்தின் பொருட்டு ஏதாவது புதிய வரி விதிக்கப்படுமா, குடியேற்றச் சட்டங்களில் என்னவாவது திருத்தம் செய்யப்படுமா, செக்யூரிடி கெடுபிடி அதிகரித்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுமா என்றுதான் முதலில் கவலைப்படுவார்கள்.
உண்மையில் சொல்லப்போனால் செப்டம்பர் 11 சம்பவம் நடந்தபோது அறிவிக்கப்பட்ட ஆப்கன் யுத்தம் ஒன்றைத்தான் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக அணுகினார்கள். அமெரிக்க சரித்திரத்திலேயே அது முதல்முறை.
அதே சமயம் ஏதாவது யுத்தம் சார்ந்து அவர்கள் அரசுமீது அதிருப்தி கொள்வார்களேயானால், அடுத்து வரும் பொதுத்தேர்தலில் அதனை அவசியம் காட்டிவிடுவது வழக்கம். என்ன சமாதானம் சொன்னாலும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் சமரசம் செய்துகொள்வதே இல்லை. இதுவும் சரித்திர உண்மை.
ஈராக் விஷயத்தில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் அமெரிக்கர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இந்த அதிருப்தி நிச்சயம் எதிர்வரும் அமெரிக்கப் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று பல வல்லுநர்கள் இப்போதே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா. தடுத்தும் கேளாமல், ரசாயன ஆயுதம் இருப்பதாகச் சொல்லி, போரைத் தொடங்கியது முதல் குற்றம். ஈராக் முழுவதையும் துவம்சம் செய்துவிட்டு, அப்படி எந்த ஆயுதமும் அங்கே இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னது அடுத்த குற்றம். போர் முடிந்துவிட்டதாகச் சொன்னாலும் இன்றுவரை தொடரும் குண்டுவெடிப்புகளைக் கட்டுப்படுத்தவோ, எஞ்சியுள்ள சதாம் ஆதரவாளர்களை முற்றிலுமாகப் பிடிக்கவோ முடியாமல் தவிப்பது மூன்றாவது குற்றம்.
நான்காவதும் அதிமுக்கியமானதுமான குற்றம், போர்க்கைதிகளாகப் பிடிபட்ட ஈராக் ராணுவத்தினரை அமெரிக்க _ பிரிட்டிஷ் ராணுவம் சிறைச்சாலைகளில் நடத்திய விதம். நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட தேசங்கள் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் போர்க்கைதிகள் விஷயத்தில் அத்தனை கேவலமாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் என்பதுதான் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் தீர்ப்பு. 2004 மார்ச் மாதம் தொடங்கி இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள், கல்லைக்கூடக் கதறச்செய்யக் கூடியவை. போர்க்கைதிகளை அடித்தும் உதைத்தும் நிர்வாணப்படுத்தி மேலே சிறுநீர் கழித்தும் முகத்தைத் துணியால் மறைத்து, பிறப்புறுப்பைத் தாக்கியும் அமெரிக்க ராணுவம் செய்த அராஜகங்களைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. மூடி மறைக்கவே முடியாத புகைப்பட ஆதாரங்கள் வெளியானபிறகு, வேறு வழியில்லாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் மன்னிப்புக் கேட்டன. இனிமேல் இந்த மாதிரியெல்லாம் நடக்காது என்று அவசர அவசரமாக வாக்குறுதி அளித்திருக்கின்றன.
உலகம் முழுவதையும் பாதித்த இந்தச் சம்பவம், அமெரிக்கர்களைச் சற்று அதிகமாகவே பாதித்தது. போரை அவர்கள் அத்தனை விரும்பவில்லை என்றாலும், சதாம் உசேன் பிடிபட்ட சந்தோஷத்தில் புஷ்ஷை மன்னிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் ஈராக் சிறைச்சாலைகளில் நடக்கும் கொடூரத்தைப் புகைப்படங்களில் பார்த்தபிறகு கட்டுக்கடங்காத வெறுப்புணர்வே அவர்களிடம் பெருகியிருக்கிறது. உலகின் காவலர்களாகத் தம்மை நினைத்து இறுமாந்திருந்தவர்கள், தம்மையே கிரிமினல்களாக உணரத் தொடங்கி அவமானத்தில் கூனிக் குறுகியிருக்கிறார்கள். இது நிச்சயம் எதிர்வரும் தேர்தலில் புஷ்ஷ§க்கு மிகப்பெரிய சரிவைத் தரும் என்பது அமெரிக்க மீடியாவின் கணிப்பு.
அமெரிக்காவின் நாற்பத்து மூன்றாவது அதிபராகக் கடந்த 2001_ம் ஆÊண்டு பதவியேற்ற ஜார்ஜ் புஷ்ஷ§க்கு இந்த வருடத்துடன் பதவிக்காலம் முடிவடைகிறது. பதவியில் இருந்த காலமெல்லாம் அவர் யுத்தம் செய்திருக்கிறார். சில புதிய யுத்தங்களுக்கும் திட்டம் தீட்டியிருக்கிறார். நிற்க நேரமில்லாமலேயே அவருடைய நான்காண்டு பதவிக்காலமும் ஓடிக் கழிந்திருக்கிறது.
மயிரிழையில் ஆட்சிப்பொறுப்பு அதிர்ஷ்டம் அடித்தவர் அவர். அந்த ஃப்ளோரிடா மாகாண எலக்டொரல் ஓட்டுகள் ஞாபகமிருக்கிறதல்லவா? அதுவே கூட, ஜார்ஜ் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ், ஃப்ளோரிடாவின் கவர்னராக இருந்ததால்தான் சாத்தியமானது என்று இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அல்கோர் ஜெயித்து ஆட்சிக்கு வந்திருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாகவோ, திருட்டுத்தனமாகவோதான் புஷ் ஆட்சிக்கு வந்தார் என்கிறது இன்றைய அமெரிக்க மீடியா. ஆயிரம் சொன்னாலும் புஷ் அதிபராகி, நான்கு வருடங்களையும் ஓட்டிவிட்டார். இனி அடுத்தது என்ன?
(தொடரும்)