07-10-2003, 05:12 PM
காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அதிகரிப்பு சிறையிலிருந்து வீடு
திரும்பிய தந்தை மகனின் தலையை சீவிக்கொன்றார்!!! ஆனைக்கோட்டையில் பயங்கரம்
சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி வீடு திரும்பிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளைக் கொன்றொழிக்க முயன்றுள்ளார். வெறிபிடித்த அந்தத் தந்தையின் கையில் சிக்கிய 15 வயது மகன் கோரமாகத் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். ஆனைக் கோட்டை உயரப்புலம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தப் படுபயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.நீண்ட நாள்கள் யாழ்.சிறையில் தடுத்துவைக்கப்பட்டபின் நேற்று நீதி மன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பஞ்சாட்சரம் சிறீகாந்தன் (காந் தன், வயது 34) என்ற தந்தையே பெற்ற மகனைக் கோரமாக வெட்டிக் கொன்றிருக்கிறார். 15 வயதுடைய சிறீகாந்தன் தயாளன் என்ற சிறுவனே தந்தையின் கோரத் தாண்டவத்தில் பலியாகியுள்ளான்.இந்தச் சம்பவம் பற்றித்தெரிய வருவதாவது:-
நீண்டகாலமாகக் கோப்பாயில் வசித்துவந்த பஞ்சாட்சரம் சிறீகாந்தன் (காந்தன், வயது 34) என்ற இந்தப் பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனைக் கோட்டை உயரப்புலம் பகுதியில் குடும்பத்துடன் குடியமர்ந்திருந்தார்.
குற்றச்செயல் ஒன்றுக்காக கடந்த சில நாள்களுக்கு முன்னர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறீகாந்தன் நேற்று யாழ்.நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை அவரது மனைவி
நேற்று நீதிமன்றிலிருந்து பிணையில் வெளியே எடுத்திருந்தார்.
நண்பகல் 12 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்ட சிறீகாந்தன் வீட்டுக்குத் திரும்பியபோது நிறைபோதையில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
வெறிபிடித்துக் காணப்பட்ட அவர், கையில் கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியிருக் கின்றார். முதலில் தனது மூத்த மகனைப் பிடித்து இழுத்து ~~ஏனடா என்னைப் பார்க்க சிறைக்கு வரவில்லை|| என்று கேட்டு அதட்டியவாறு சிறுவனது கையில் கத்தியால் வெட்டினார் என்றும் -
அப்போது வலிதாங்கமுடியாத சிறுவன் உரத்த்து கதறியவாறு தந்தையின் பிடியிலிருந்து தப்பியோட முற்பட்டவேளை கத்தியால் வேகமாக வீசி அவனது கழுத்தில் வெட்டினார் என்றும் -கூறப்படுகிறது.
சிறுவன் அந்த இடத்திலேயே துடிதுடித்து வீழ்ந்தான்.
இந்தக் கோரச்சம்பவத்தை நேரில் கண்ட சிறுவனின் தாயும் சகோதரர்களும் அலறியடித்துக்கொண்டு அயலவர்களின் உதவியைக் கோரியவாறு ஓடியிருக்கின்றனர்.
தனது மூத்த மகனின் கழுத்தைச் சீவிய பாதகத் தந்தை தனது கொலை வெறி தணியாது ஏனைய பச்சிளம் பாலகர்களையும் கொல்வதற்காக விரட்டிச் சென்றார்.
அலறல் சத்தம் கேட்டு அயலவர் கள் ஓடிவந்து பார்த்தபொழுது அங்கு பிரஸ்தாப சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.
அவனை வெட்டிக் கொன்ற தந்தை தனது ஏனைய பிள்ளைகளையும் வெட்டுவதற்காக துரத்திக்கொண்டிருந்ததை அயலவர்கள் கண்டனர். நிலைமையைப் புரிந்துகொண்ட அயலவர்கள், கொலைஞ்ஞனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துமர மொன்றில் கட்டி நையப்புடைத்து விட்டு மானிப்பாய் பொலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த பொலீஸார். கொலைக்காரத்தந்தையைக் கைது செய்தனர். அவருடன் அவரது மனைவியையும் பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் நேற்று மாலைவரை அந்த இடத்திலேயேகிடந்தது. ஏராளமான பொது மக்கள் அங்கு வந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டனர்.மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சிறுவ னின் சடலத்தைப் பார்வையிட்ட யாழ். நீதிமன்ன மேலதிக நீதிவான் திரு மதி சரோஜினிதேவி இளங்கோவன் சடலத்தை யாழ்.போத னாவைத்தி யசாலையில் ஒப்படைக்கு மாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து மாலை 6 மணி யளவில் சிறுனின் சடலம் மானிப் பாய் பொலீஸாரால் யாழ்.ஆஸ்பத் திரியில் ஒப்படைக்கப்பட்டது. மரணவிசாரனை பிரேத பரிசோதனை என்பன இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இதேவேளை-
மானிப்பாய் பொலீஸ் நிலையத் தில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் சிறுவனின் தந்தையை இன்று யாழ்.நீதி மன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் பொலீஸாருக்குப் பணித்தார்.
[size=9]நன்றி உதயன்