06-23-2004, 04:34 PM
¸Õ½¡×ìÌ «Ãº¡í¸õ ҸƢ¼õ
«Ç¢த்ÐûǨÁ§Â ºÁ¡¾¡É §Àº¢î¢ø
²üÀðÎûÇ ¸Õãð¼ò¾¢üÌ ¸¡Ã½õ
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் கூறுகின்றார்
புலிகளால் நிராகரிக்கப்பட்ட கருணாவுக்கு இலங்கை அரசாங்கம் புகலிடம் அளித்திருப்பது இந்நாட்டின் சமாதான முன்னெடுப்புகளில் கருமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புலிகள்அரசு சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாததற்கு கருணா விவகாரமே காரணமாக அமைந்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் கொழும்பு நிருபர் பி.கே. பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கருணா விவகாரம் குறித்தும், அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாகவும் மேலும் அவர் குறிப்பிடுகையில்;
இந்த விவகாரம் புலிகளுக்கு எவ்வகையிலும் திருப்தியளிக்கமாட்டாது. மூடு மந்திரமாக இருந்து வெளிப்பட்டுள்ள கருணாவின் விவகாரத்தால் இருவழிகளால் மாத்திரமே புலிகளுக்கு திருப்தி கிட்டும்.
அதில் முதலாவது வழி கருணாவை அரசு புலிகளிடம் கையளிக்க வேண்டும். இல்லையேல் அவர் இருக்குமிடம் தொடர்பான தகவல்களை புலிகளுக்கு வெளியிட வேண்டும். இது புலிகளுக்குத் திருப்தியளிக்கும்.
இரண்டாவது வழி இது நடக்காத பட்சத்தில் உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ புலிகள் சுயமாக கருணா பதுங்கியுள்ள இடத்திலிருந்து துரிதமாக கருணாவை மீட்க வேண்டும். இவ்விரு வழிகளால் மட்டுமே புலிகளைத் திருப்தியுறச் செய்யலாம்.
இவ்விரு வழிகளும் கடுமையானவையே. கருணாவுக்கு அரசு புகலிடம் அளித்து வருவதாக புலிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டை அரசு தொடர்ந்து மறுதலித்து வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில்ஹேரத்,பி.பி.சி. சிங்களச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் ஆயுதப் படைகள் கருணாவுக்கு புகலிடம் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் சாட்சியங்களைச் சமர்ப்பித்தால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அண்மையில் கருணாவிடமிருந்து தப்பி வந்து புலிகளுடன் இணைந்து கொண்ட பெண் போராளிகள் அளித்த தகவல்கள் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
கருணா தாம் எந்த ஒரு தமிழ்க்குழுவுடனும் சேரப்போவதில்லையென்றும் கிழக்கில் சுயமாக ஒரு அரசியல் கட்சியை அமைக்கப்போவதாகவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து கிழக்கில் நேரடியாகத் தாம் செயற்படப்போவதாகவும் தம்மோடு தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளதாக கருணாவிடமிருந்து தப்பிவந்து விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட நால்வரில் ஒருவரான புலிகளின் முன்னாள் மகளிர் அணிப்பொறுப்பாளர் நிலாவினி மட்டக்களப்பிலுள்ள புலிகளின் சோலையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி தொலைபேசி வாயிலாக கருணாவுடன் தொடர்பு கொள்வார். இருவரும் நீண்ட நேர சம்பாஷணையில் ஈடுபடுவர். ஒரு முறை டக்ளஸ் தேவானந்தா தமது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து தம்மோடு பணிபுரியுமாறு கருணாவைக் கேட்டுக் கொண்டார். இதற்கும் கருணா முன்வரவில்லை. அவர் அப்படிச் சேர்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார், என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில்தான் கருணா தாம் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கப் போவதாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அறிவித்தார். எது எப்படியிருப்பினும் ஏப்ரல் 18 இற்குப் பின்னர் வன்னியிலும் மட்டக்களப்பிலுமுள்ள புலிகளின் தலைமை அலுவலகங்களிருந்து பெண் போராளிகள் கையடக்கத் தொலைபேசி மூலமாக எம்முடன் தொடர்பு கொள்ள முற்பட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பிவருமாறு அழைப்பு விடுத்து வந்தார்கள் என்றும் நிலாவினி தெரிவித்துள்ளார்.
கருணாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. இதை நாம் அவதானித்து வந்தோம். காலப்போக்கில் அவர் எம்மோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டார். குறிப்பாக அவரது மனைவியும் இரு புதல்வர்களும் மலேஷியாவிலிருந்து திரும்பியது முதல் அவரில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது என்றும் அவர் கூறியுள்ளார்.
கருணா தமது மனைவியின் கைப்பொம்மையாக செயல்படத்தொடங்கினார். அவர் தம் மனைவி சொல்வதையே செய்வார். இந்தப் போக்கு அவ்விருவரும் ஆடம்பர வாழ்க்கை நடத்த விரும்புகின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. ஒரு நாள் பெண்போராளிகள் எம்முடன் தொடர்பு கொண்டதை கருணாவின் மனைவி கண்டு விட்டார். அடுத்து எமது கையடக்கத் தொலைபேசி பறிமுதலுக்குள்ளாகியது என்றும் நிலாவினி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் ஏப்ரல் ஆரம்பத்தில் கிழக்கில், கருணா அணி மீது தாக்குதலை மேற்கொண்டனர். அச்சமயத்தில் தலைமறைவான கருணாவுடன் இந் நான்கு மகளிரும் தலைமறைவாகினர்.
மட்டக்களப்பு மாவட்ட மகளிர் இராணுவப் பிரிவு தலைவி நிலாவினி மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவி பிரேமினி, மகளிர் இராணுவப் பிரதித் தலைவி லாவண்யா, இந்த இராணுவ அணியின் பிறிதொரு சிரேஷ்ட தலைவியான தீந்தமிழ் ஆகியோரே இந்நால்வருமாவர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>