Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆய்த எழுத்து
#27
கையை சுட்ட 'ஆய்த எழுத்து'


மணி ரத்னத்தின் 'ஆய்த எழுத்தை' வாங்கிய வினியோகஸ்தர்களின் கைகளைக் குத்திக் கிழித்துவிட்டதாம்.

சுமார் ரூ. 12 கோடிக்கும் மேல் செலவு செய்து இந்தப் படத்தை இந்தியிலும் தமிழிலும் உருவாக்கினார் மணி.

'ஆய்த எழுத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா, திர்ஷா, இஷா என நடிகை நடிகையர் பட்டாளமும், இந்தியில் உருவான 'யுவா'வில் அபிஷேக், விவேக் ஓபராய், அஜய் தேவ்கன், ராணி முகர்ஜி, கரீனா என பெரும் பட்டாளமும் நடித்தன.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையுடன் பெரும் பரபரப்பாக வெளிவந்த இந்தப் படத்தை தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு டப்பிங் என மும்மொழிகளில் ரூ. 30 கோடிக்கு மணி ரத்னம் விற்றதாக சொல்கிறார்கள்.

தமிழில் படம் தோல்வியடைந்தது. இந்தியிலோ படுதோல்வியடைந்துள்ளது.

மும்பை உள்பட எங்கும் போட்ட காசை திருப்பித் தரவில்லை 'யுவா'. இதனால் மணியையும் யுவாவையும் கிழி கிழி என கிழித்து வருகின்றன வட இந்திய பத்திரிக்கைகள்.


'ஆய்த எழுத்தை'ப் பொறுத்தவரை வெளிநாடுகளில் ஹவுஸ் புல்லாக ஓடியிருக்கிறது.

ஆனால், அவ்வளவு கூட்டம் தமிழகத்தில் எந்தத் தியேட்டருக்கும் வரவில்லை என்பது தான் சோகம். இதனால் படத்தை வாங்கிய எல்லா வினியோகஸ்தர்களும் கையை சுட்டுக் கொண்டு 'பர்னால்' போட்டுக் கொண்டுள்ளனர்.

நஷ்டம் பெருமளவில் என்பதால் மணியை சந்தித்து தமிழக வினியோகஸ்தர்கள் பேச, வாங்கிய காசில் 20 சதவீதப் பணத்தை திருப்பித் தந்துவிடுவிதாகச் சொல்லிவிட்டாராம்.

மணியை ஜென்டில் மேன் என புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

இது 'ஆய்த எழுத்து'க்கு மட்டும் தான். இந்தி வினியோகஸ்தர்கள் விஷயம் என்ன என்று தெரியவில்லை.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், நான் தமிழ்ப் படங்களே பாக்குறதில்ல என்று மணி சொல்லி வைக்க, தமிழத் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் அது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டதாம்.

டென்சன் பார்ட்டிகளான சில இளம் இயக்குனர்கள், வாய்ப்பு கிடைக்கட்டும், மணியை ஒரு பிடி பிடிக்கிறோம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொசுறு:

'ஆய்த எழுத்தில்' நடித்த சூர்யா ஈஷா தியோல் ஜோடி தொடரப் போகிறது. அடுத்து பாலாவே தயாரித்து, இயக்கப் போகும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.


Source: http://www.thatstamil.com
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
ஆய்த எழுத்து - by shanmuhi - 03-19-2004, 08:45 PM
[No subject] - by shanmuhi - 03-23-2004, 11:52 AM
[No subject] - by kuruvikal - 03-23-2004, 12:58 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 02:03 PM
[No subject] - by Eelavan - 03-23-2004, 05:57 PM
[No subject] - by Mathan - 03-23-2004, 06:43 PM
[No subject] - by Eelavan - 03-24-2004, 05:21 AM
[No subject] - by shanmuhi - 03-24-2004, 10:42 AM
[No subject] - by shanmuhi - 03-25-2004, 10:15 AM
[No subject] - by Mathan - 03-25-2004, 02:10 PM
[No subject] - by Mathan - 04-02-2004, 01:56 PM
[No subject] - by sWEEtmICHe - 04-03-2004, 03:53 PM
[No subject] - by shanmuhi - 05-01-2004, 10:43 AM
[No subject] - by Mathan - 05-26-2004, 06:25 PM
[No subject] - by Eelavan - 05-26-2004, 06:32 PM
[No subject] - by tamilini - 05-26-2004, 06:45 PM
[No subject] - by kuruvikal - 05-27-2004, 12:23 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:11 PM
[No subject] - by Mathan - 05-27-2004, 03:19 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 12:24 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 02:36 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 09:27 PM
[No subject] - by Eelavan - 05-28-2004, 09:32 PM
[No subject] - by Mathan - 05-28-2004, 10:34 PM
[No subject] - by Eelavan - 05-29-2004, 12:47 PM
[No subject] - by tamilini - 06-15-2004, 03:57 PM
[No subject] - by Mathan - 06-23-2004, 03:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)