Yarl Forum
ஆய்த எழுத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஆய்த எழுத்து (/showthread.php?tid=7310)

Pages: 1 2


ஆய்த எழுத்து - shanmuhi - 03-19-2004

எ. ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த<b> "ஆய்த எழுத்து"</b> படம், பாடல்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன..?

பாடல்கள் கேட்டேன். கேட்கக்கூடியதாக இருக்கின்றது.


- shanmuhi - 03-23-2004

ஆயுத எழுத்து படப்பாடல்களை கேட்டு பாருங்கள்.

1. http://www.tamilmahalmp3z.com/Songs/Aayith...u/Dol%20Dol.mp3

2. http://www.tamilmahalmp3z.com/Songs/Aayith...20God%20Bye.mp3

3. http://www.tamilmahalmp3z.com/Songs/Aayith...Gana%20Mana.mp3

4. http://www.tamilmahalmp3z.com/Songs/Aayith...jam%20Ellam.mp3

5. http://www.tamilmahalmp3z.com/Songs/Aayith...dai%20Kozhi.mp3


- kuruvikal - 03-23-2004

லிங்கு போட்டதுக்கு நன்றிகள்...! நல்லதோ கெட்டதோ கேட்டுத்தான் பார்ப்போமே....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 03-23-2004

நன்றி சண்முகி
ஒரு பகுதியில் நண்பர் B.B.C வைரமுத்துவின் வரிகளை சிலாகித்தார்
காதல் பற்றிய பாட்டு
யாக்கை திரி காதல் சுடர் என்று ஆரம்பிக்கும்

அதே போன்று இன்னொரு பாட்டு எனக்குப் பிடித்தது
ஜனகண மண
ஜனங்களை நினை
கனவுகள் அல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக

மிகுந்ததொரு தன்னம்பிக்கை தரும் வரிகள்

டோல் டோல் இசை அருமை
எல்லப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ரகுமானின் தன்னடக்கம் எல்லாவற்றையும் விட அருமை


- Eelavan - 03-23-2004

ஆய்த எழுத்து’க்காக ஐந்து பாடல்கள் ஒலிப்பதிவு செய்து முடித்தபிறகு, ‘‘என்ன சார் நினைக்கிறீர்கள், பாடல்கள் பற்றி...’’ என்றார் மணிரத்னம் என்னை.

‘‘முதல் முறை கேட்டால் இசை பிடிக்கும். இரண்டாம் முறை கேட்டால் தமிழ் பிடிக்கும். மூன்றாம் முறை கேட்டால் பைத்தியம் பிடிக்கும்’’ என்றேன் நான்.

நான் அன்று சொன்னது இன்று தப்பாகிவிட்டது.

முதல்முறை கேட்கும்போதே பைத்தியம் பிடிக்கத் தொடங்கிவிட்டது.

பைத்தியம் என்றால் இது ஆனந்தப் பைத்தியம்.

பாடல் கேட்டுத் தனக்குத்தானே பேசிக்கொண்டு தலையாட்டும் பரவசப் பைத்தியம்.

‘ஆய்த எழுத்து’ திரைத் தமிழுக்கு ஓர் ஆறுதல் எழுத்து.

தமிழில் மட்டுமில்லாமல், இந்தியாவின் எல்லா மொழிகளிலுமே திரைப்பாட்டு வரிகள் தங்கள் உயரத்தைச் சற்றே இழந்திருக்கின்றன. இது பாடலுக்கு மட்டும் நேர்ந்த துயரமன்று.

உலகமயமாதலும், மேற்கத்திய நுகர்வுக் கலாசாரத்தின் மோகமும், இந்தியாவின் தளர்ந்த ஜனநாயகமும் கால் பிடித்திழுத்துத் தலைகீழாய்ப் பிடித்துத் தரையில் துவைக்கும்பொழுது வெகுஜனக் கலைகள் கதறவே கதறுகின்றன. இந்த நிலையில், கலையின் எல்லாக் கூறுகளும் நிறம் மாறி சற்றொப்ப நிர்வாணப்படும்போது பாடல்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. மணிரத்னம் போன்ற குறிப்பிட்ட சில கலைஞர்களே தங்கள் உயரங்களை இழந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.ஸ் முதல் பாடலுக்கு உட்காரும்போதே மணிரத்னம் _ ரகுமான் _ நான் ஆகிய மூவரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

ஏற்கெனவே இயங்கிவரும் தளங்களிலிருந்து பாடல்களை வெளியே எடுத்து வந்துவிடுவது.

ஆனால் அது எத்தனை சிரமம் என்பது செயல்படும்போது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் சந்திப்போம்; விவாதிப்போம்; சண்டையிடுவோம்; சீண்டுவோம்; செல்லமாகக் கோபித்துக்கொள்வோம்; சிரித்துவிடுவோம்.

எல்லாமே படைப்பு நன்றாக வரவேண்டுமே என்ற வெறிதான்.

ஒரு காதல் பாடலை பதிவு செய்தோம்.




‘‘கடலில் இரண்டு அலைகளாய்

நீயும் நானும் விளையாடினோம்

இதோ காலவெப்பத்தில்

ஆவியாகிறோம்

நீ ஒரு மேகமாய்

நான் ஒரு மேகமாய்

எங்கோ ஒரு மலையில் நீ மழையாக

எங்கோ ஒரு மலையில் நான் மழையாக

மீண்டும் நதிகளாவோம்

மீண்டும் கடல் சேர்வோம்

அலைகளாய்த் தழுவிக்

கொள்வோம்

அதுவரை பொறுத்திரு.’’

_ என்ற பொருளில் ஒரு பாடல் எழுதிப் பதிவும் செய்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து மீண்டும் பாடலைக் கேட்டபோது, அது நாங்கள் நினைத்த உயரத்தில் இல்லாததுமாதிரி இருந்தது. வேறு பாட்டு எடுப்பது என்று தீர்மானித்துவிட்டோம். ஒரு பொறியும் தட்டவில்லை. அப்போதுதான் குமுதத்தில் என் கவிதைத் தொடரான ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ வந்து கொண்டிருந்தது. அதில் ‘ஆறாம் பூதம்’ என்ற என் கவிதையை வாசித்தபோது, ‘‘பாட்டு; இதுதான் பாட்டு’’ என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் மணிரத்னம். அந்தக் கவிதையை ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்து, ‘‘என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ... ஏற்கெனவே எடுத்த பாடலின் அதே ட்ராக்கில் இந்தக் கவிதையைப் பொருத்திக் கொடுங்கள் _ திருத்தங்கள் தேவைப்பட்டால் கவிஞரை அழைத்துக்கொள்ளலாம்’’ என்றாராம். ஆச்சரியமான ஆச்சரியம்! வேறு பாடலுக்காக எடுக்கப்பட்ட ட்ராக்கில் என் கவிதையைக் சம்மணங்களால் போட்டு சாமர்த்தியமாக உட்கார வைத்துவிட்டார் ஏ.ஆர். ரகுமான்.

யாக்கை திரி
காதல் சுடர்
ஜீவன் நதி
காதல் கடல்
பிறவி பிழை
காதல் திருத்தம்
இருதயம் கல்
காதல் சிற்பம்’’

வாக்கியங்களற்ற வார்த்தைகளால் கட்டப்பட்ட ஒரு கவிதை பாடலாகி விட்டது. குமுதத்திற்கு நன்றி.

ஓர் ஆணும் பெண்ணும் எதிர்பாராமல் சந்தித்து மனசின் ஓரங்களால் பழகி _ அதன் மையத்தை நோக்கி நகரும்போது பிரிகிறார்கள்.

அந்தப் பிரிவின் சிறுவலியை அவள் மனசுக்குள் ரகசியமாய் பாடுகிறாள்.



மனசின் மர்மஒலிபோல் ஏ.ஆர்.ரகுமான் அமைத்த அந்த மெட்டைக் கேட்டபோது, அதன் ரகசியம் கெடாமல் வார்த்தைகள் உள்தளத்திலும் அது சிதறியடிக்கும் ஓசைகள் வெளித்தளத்திலும் புலப்படுமாறு இதற்கு வார்த்தைகள் அமைக்கவேண்டும் என்று சிந்தித்தேன். கடைசியில் ஒரு பல்லவியை ஓ.கே. செய்தார் மணிரத்னம்.

பாடல் ஒலிப்பதிவாகிக்கொண்டிருக்கிறது; பாடும் சந்தங்கள் என் காதில் விழவிழ, நான் காத்துக்கிடந்த சொற்கள் உள்ளிருந்து சிறகடித்து வெளியேறி வந்தன. என்ன ஆச்சரியம்! அவை முழுக்கத் தமிழ்ச் சொற்கள் அல்ல; சமஸ்கிருதச் சொற்கள். ஆங்கிலமோ, சமஸ்கிருதமோ முடிந்த அளவுக்குத் தவிர்த்துத் தனித்தமிழ் செய்யவே ஆசைப்படுபவன் நான். ஆனால் அந்த மெட்டு சமஸ்கிருதம் வேண்டும் என்றே கேட்டு அணிந்துகொண்டது. ஒலிப்பதிவு நிறுத்தப்பட்டு அங்கேயே பல்லவி மாற்றப்படுகிறது.

‘‘ஹேய் குட்பை
நண்பா
கண்ணிலே கல்மிஷம்
போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளிவிஷம்
நானில்லை என் வசம்
நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றிக் கண்காணாக் கண்ணீரோ?’’

_இந்தக் கல்மிஷம், சில்மிஷம், துளிவிஷம் என்ற சொற்களை சுனிதாசாரதியின் பரவசக்குரல் ரகசியமாய்ப் பாடும்போது சொல்லுக்குப் பாத்தியப்படாத சொல்லின் அர்த்தங்கள் விசிறியடிக்கப்படுவதை உணர்வீர்கள்.

‘‘சமூகவிரோத சக்திகளை எதிர்த்துப் போருக்குப் புறப்படும் இளைஞர்கள் பாடும் படைநடைப் பாட்டுக்கு வரிகள் போடுங்கள்’’ என்று மணிரத்னம் என்னைக் கேட்டபோது, ‘‘கவிஞருக்கு இது லட்டு ஆயிற்றே’’ என்று சிரித்தார் ஏ.ஆர்.ரகுமான்.

நம்பிக்கை கொடுக்கும் பாடல்கள் _ துருப்பிடித்த வாழ்க்கையைத் துலக்கிவைக்கும் பாடல்கள், திசையற்றுப் பறக்கும் இளைஞர்களை நெறிப்படுத்தும் பாடல்கள், கனவுகளை வளர்ப்பதோடு காரியத்தில் செலுத்தும் பாடல்கள் நிறைய நிறைய வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்தத் தினவுக்குத் தீனிபோடும் பாடலாக உருவானது ஜனகண மன. ‘‘ஜனகண மன’’ என்று பாடலைத் தொடங்குவதற்கு நாங்கள் பலமுறை யோசித்தோம். தேசிய கீதத்தின் முதல் வரியை எடுத்தாளுவதில் சிக்கல் வருமா? யாராவது ஒருவர், தேசிய கீதத்துக்கு அவமரியாதை என்று நினைப்பார்களா? என்றெல்லாம் நாங்களே கேள்வி கேட்டுப் பதில் சொல்லிக் கொண்டோம்.

‘‘காட்டுக்குள் நுழைகின்ற காற்று
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’

_ என்ற வரியைப் படித்துவிட்டு, ‘‘‘ஆய்த எழுத்து’ என்று படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறோம். ஆயுதம் தேவையில்லை என்கிறீர்களே!’’ என்று சிரித்த மணிரத்னம், ‘‘ஆனாலும் அழகான இந்த வரியை மாற்ற எனக்கு மனமில்லை’’ என்று சொல்லி ஏ.ஆர். ரகுமானையே பாடுமாறு கேட்டுக்கொண்டார்.

‘‘ஃபர்ஸ்ட் நைட்டுக்குக் கவிஞர் ஒரு புது நைட் லாம்ப் கண்டுபிடித்திருக்கிறார்’’ என்று பலரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர். ரகுமான். அது வேறொன்றுமில்லை.

‘‘மச்சு வீடு வேணாம் எட்டுக் கெட்டு போதும்
மெத்தை ஏதும் வேணாம்
ஒத்தப் பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்குப் போதும்
_ என்று எழுதியிருந்தேன்.

அந்த மூன்றாம் வரி புரியவில்லை ஏ.ஆர்.ரகுமானுக்கு. ‘‘எல்லா விளக்கும் அணைக்கப்பட்ட பிறகு மூக்குத்தியின் வெளிச்சம் தான் முதலிரவின் வெளிச்சம்’’ என்று விளக்கினேன். ‘அடேங்கப்பா!’ என்றவர், வியந்து வியந்து சிரித்தார்; ரசித்தார்.

வெளியில் பார்க்கத்தான் ஏ.ஆர்.ரகுமான் இறுக்கம். தனிமைச் சந்திப்புகளில் குழந்தையாகிவிடுவார்; குதூகலிப்பார்.

இன்னொரு காதல் பாடல்_

பொய் சொல்லிக் காதலிக்கும் உலகத்தில் ஒரு காதலன் மெய்சொல்லிக் காதலித்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் சிந்தித்தோம்.

‘‘நெஞ்சம் எல்லாம் காதல்
தேகம் எல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?
_ என்ற பல்லவி பிறந்தது.

இந்தப் பாடலைப் பாட வந்த அட்நான் சாமி, பாகிஸ்தான் பாடகர். மும்பையிலிருந்து சென்னை வந்து பாடினார்.

ஒலிப்பதிவின்போது நான் உடன் இல்லை. இதில் _
‘‘நீ முத்தப் பார்வை பார்க்கும்போது _ என்
முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்’’

என்று ஒரு வரி வரும். பாடலைக் கேட்கும்போதுதான் தெரிந்தது, ‘‘முத்தப்பார்வைக்குப் பதிலாக அவர் மூத்த பார்வை’’ என்று பாடியிருந்தது, ஓர் எழுத்து மாறியதில் பாடலுக்கே வயசாகிவிட்டதே என்று வருந்தினேன். மீண்டும் அவரை அழைத்துச் சொல்லிக் கொடுத்துப் பக்கத்திலிருந்து பாடவைத்தோம்.

இந்தப் படத்துக்கான பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் லண்டனில் செய்துகொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு படம் வெளிவரப் போகிறது. இளைஞர்களின் விடுமுறை விருப்பமாக இந்தப் படம் இருக்கும்.

பாடல் காட்சிகளை மணிரத்னம் எனக்குப் போட்டுக் காட்டினார். அற்புதம்! மணிரத்னத்திற்கு வயது 18.

தொகுப்பு : சந்துரு


- Mathan - 03-23-2004

பாடல் இணைப்புக்கு மிக்க நன்றி சண்முகி.


- Eelavan - 03-24-2004

இதனை விட www.tamilbeat.com இல் பாருங்கள் தரமான பாடல் Download செய்யலாம்


- shanmuhi - 03-24-2004

நன்றி... Eelavan


- shanmuhi - 03-25-2004

விரும்பினால்
http://www.akkthefilm.com/ போய்
Video Trailer
போய் பார்க்கலாம்


- Mathan - 03-25-2004

shanmuhi Wrote:விரும்பினால்
http://www.akkthefilm.com/ போய்
Video Trailer
போய் பார்க்கலாம்

Video Trailer அருமையாக இருக்கின்றது. தகவலுக்கு மிக்க நன்றி சண்முகி. படத்துக்காக காத்திருப்போம்.


- Mathan - 04-02-2004

உலகப்படவிழாவில் 'ஆய்த எழுத்து'

ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' திரையிடப்படுகிறது.


தமிழ்ப் பட உலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இப்போது 'ஆய்த எழுத்து' படத்தை இயக்கிவருகிறார். அநேகமாக இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளிவரலாம். இந்தப் படத்தை ஒரே சமயத்தில் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் எடுத்து வருகிறார். இந்தியில் இப்படத்திற்கு 'யுவா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரே கதைக்கு இரு மொழிகளிலும் அந்தந்த மொழி நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கிறார். மற்றபடி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என்று அனைத்திற்கும் இந்தி, தமிழ் இரு மொழிகளிலும் ஒரே டெக்னீசியன்கள்தான் பணியாற்றுகிறார்கள். பாடல்கள், வசனம் எழுதுபவர்கள் மட்டும் இந்தியில் மாறுபடும். தமிழில் வசனத்தை சுஜாதாவும், பாடல்களை வைரமுத்துவும் எழுதுகிறார்கள்.

'யுவா'வில் அஜய்தேவ்கான், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன், ராணிமுகர்ஜி, கரீனாகபூர், மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடிக்கிறார்கள். 'ஆய்த எழுத்தி'ல் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிக்ஷ£, ஈஷா தியால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் ஜொகன்னஸ்பர்க் நகரத்தில் அடுத்தமாதம் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் 'ஆய்த எழுத்து', 'யுவா', இரு படங்களுமே திரையிடப்பட உள்ளதால் மணிரத்னம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

நன்றி - சினி சவுத்


- sWEEtmICHe - 04-03-2004

BBC @ SHANMUHI @ Eelavan <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_b.gif' border='0' alt='user posted image'>


- shanmuhi - 05-01-2004

http://akkthefilm.com/ ஆய்த எழுத்து பாடல்கள் இரண்டு (Video Trailer) பார்க்கலாம்


- Mathan - 05-26-2004

படம் வெலிவந்துவிட்டது. பார்த்தவர்கள் யாராவது ... எப்படி இருக்கின்றது என்று சொன்னால் ?


- Eelavan - 05-26-2004

படம் ஆகா ஓகோ ரகமில்லை,ஆனால் நன்றாக இருக்கிறது,வழமையான மணிரத்தினம் படங்களில் இருக்கும் ஏதோ ஒரு உணர்வை இப்படத்தில் காணமுடியவில்லை ,கதாநாயகர்களான சூர்யா,சித்தார்த் இருவரையும் விட வில்லன்களான மாதவனும்,பாரதிராஜாவும் மிரட்டியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி படத்துக்குப் படம் வளர்ந்து வருகின்றது விருமாண்டி ஒரு வகை என்றால் இது இன்னோர் வகை
அது என்னவென்று வெள்ளித் திரையில் காண்க


- tamilini - 05-26-2004

ஓ அப்படியா? தகவலுக்கு நன்றி!......


- kuruvikal - 05-27-2004

ஆய்த எழுத்து அகேனம்...அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்...பப்படம் பாத்தாக்கள் கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன்....அதுசரி ஆட்டோகிராபில ஆய்த எழுத்த இட்டா எது திறம்...???!

அத்தோட களவாப் பாக்க எங்கையேன் லிங்கிருந்தாக் கொடுங்களேன்... :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:


- Mathan - 05-27-2004

"ஆய்த எழுத்து': திரை விமர்சனம்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்திருக்கிறது மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து'.

சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார் சூர்யா. அவரை காரில் பின் தொடர்கிறார் மாதவன். அதே பாலத்தில் காதலி த்ரிஷாவின் சம்மதத்துக்காக தவம் கிடக்கிறார் காதலன் சித்தார்த். சூர்யாவை நெருங்கியதும் துப்பாக்கியால் சுடுகிறார் மாதவன். சூர்யாவை மாதவன் சுட்டது எதற்காக... "ப்ளாஷ் பேக்' நீள்கிறது.

கல்லூரி மாணவரான சூர்யா அரசியலுக்கு வர முடிவு செய்கிறார். அவரது நடவடிக்கைகள் அமைச்சரான பாரதிராஜாவுக்கு தலைவலியாக அமையவே மாதவனை வைத்து அவரை சுட வைக்கிறார்.

குண்டடிப்பட்ட சூர்யாவை காப்பாற்றுகிறார் சித்தார்த். சூர்யாவுடன் அவரும் அரசியலில் நுழைய தயாராகிறார். மாதவனும் அவர்களுடன் இணைந்தாரா, இல்லையா. சூர்யா ஜெயித்தாரா என்பதை படம் விவரிக்கிறது.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படத்தில் இடையில் தொய்வு ஏற்படுகிறது. அதே சமயம் மாதவன், தனது அண்ணனை சுட்டுக் கொன்ற பின்னரே மீண்டும் ஒருவித ஈர்ப்பு படத்தின் மீது ஏற்படுகிறது. அந்த இறுதிக்கட்ட காட்சிகள் தான் "ஆய்த எழுத்து'க்கு பலம்.

சித்தார்த் -த்ரிஷா கேரக்டர், படத்தை இளமைத் தனத்துடன் காட்ட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த கதைக்கு சித்தார்த் கேரக்டர் தேவைதானா என்பதை மணிரத்னம் யோசித்திருக்கலாம்.

சுயநலவாதியாக சித்திரிக்கப்படும் சித்தார்த், உயிரைப் பணயம் வைத்து சூர்யாவைக் காப்பாற்றுவது, அவருடன் அரசியலில் நுழைவது நம்பும்படியாக இல்லை.

"நெஞ்சமெல்லாம்' பாடலில் அத்னான் சமியின் அந்த குரலும், ரஹ்மானின் இசையும் இதயத்தில் நுழைந்து இதம் தருபவை. படம் வரும் முன் இப்பாடலைக் கேட்டபோது இப்படித்தான் உணர முடிந்தது. ஆனால் படத்தில் அப்பாடலை படமாக்கியுள்ள விதம், அந்த சூழல் எரிச்சலூட்டுகிறது.

பேசிப் பேசியே நேயர்களை தனது பித்தர்களாக்கிவிட்ட ரேடியோ மிர்ச்சி சுசித்ராவை, நடிக்க வாய்ப்பளித்துவிட்டு வசனமே தரவில்லையே.

கணவனைப் பிரிந்த மீரா ஜாஸ்மின் என்ன ஆனார் என்பதை காட்டாததும் "மைனஸ்'.

இந்த குறைகளுக்கிடையே நிறைகளை தெளிப்பதில் சூர்யா, மாதவனின் கேரக்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

தலையில் சின்ன சின்ன முடிகளுடன் நக்கலான சிரிப்புடன் மெட்ராஸ் தமிழில் பேசும்போது நிஜ ரெüடியும் மீரா ஜாஸ்மினை அடித்து துன்புறுத்தும்போது சேரியில் வாழும் போக்கிரி கணவனும் "இன்பா' போலத்தான் இருப்பான் என சொல்லவைக்கிறார் மாதவன்.

"இளம் ரத்தம், அதுதான் கொதிக்கிறது' என்பார்களே சூர்யாவின் நடிப்பு, அந்த சொல்லுக்கு அர்த்தம் புகட்டுகிறது. படத்துக்குப் படம் நடிப்புடன் தோற்றத்தையும் மாற்றி ஏற்றம் கண்டு வருகிறார் இந்த இளைய சூரியன். ஒவ்வொரு படத்திலும் சூர்யா நடிப்பில் புதுமை செய்தாலும் கோபக்கார இளைஞனாகவே (பேரழகனில் கூட குத்துச் சண்டைக்காரன் வேடம்) எல்லாப் படங்களிலும் சித்திரிக்கப்படுகிறார். சூர்யா இதை கவனிக்க வேண்டும்.

மணிரத்னத்தின் எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நாயகிக்கு ஒரு தனி முக்கியத்துவம் இருக்கும். படத்தின் கதையும் அவளை சார்ந்து இருக்கும். ஆனால் இதில் அப்படி இல்லை. இஷா, த்ரிஷா அழகுக்கும் குறும்புக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள். கேரளா "கேக்' மீரா ஜாஸ்மின் மட்டும் தான் இதில் விதிவிலக்கு. முரட்டுக் கணவனிடம் அடிபட்டதால் அவனிடமிருந்து ஒதுங்குவதும் காதல் வந்ததும் அவனை அரவணைப்பதும் என மீரா, யதார்த்தமாகியிருக்கிறார்.

பாரதிராஜா பற்றி சொல்லியே ஆக வேண்டும். அப்பழுக்குடைய அரசியல்வாதியாக வந்து நடிப்பில் ஆர்ப்பரிக்கிறார். தைலம் போட்ட சூடு நீர் அண்டாவில் முகத்தை விட்டு, உடலை போர்த்திக் கொண்டு ஆவேசமடையும் பாரதிராஜா, நடிப்பிலும் தான் "ராஜா' எனக் காட்டியிருக்கிறார்.

ரஹ்மானின் இசையும் வைரமுத்துவின் வரிகளும் படத்துக்கு "ப்ளஸ்'. குறிப்பாக "ஜனகணமன' பாடலும் அதை படமாக்கிய விதமும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவில் மழையில் அந்த கபடி காட்சி, அழகு.

மூன்று பேரின் கதையை மூன்று "பிளாஷ் பேக்'காக காட்டியிருப்பது புதுமை.

விறுவிறுப்பான திரைக்கதையை நாடுவதாக இப்படத்தின் "தீம்' உள்ளது. தனது பாணியிலிருந்து சிறிது விலகி இன்னும் வேகமாக படத்தை கொண்டு சென்றிருக்கலாம் மணிரத்னம். அதே சமயம் படத்தில் தொய்வு ஏற்படும்போதொல்லாம் அடுத்து ஒரு நல்ல காட்சியுடன் படத்தை தூக்கி நிறுத்திவிடுகிறார்.

அரசியல் ஒரு சாக்கடை என இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருந்தால் போதாது. சாக்கடையில் இறங்கி அதை சுத்தப்படுத்த வேண்டும் என நல்ல செய்தியுடன் வந்திருக்கிறார் மணி. கை கொடுக்கலாம்.

நன்றி - திணமணி


- Mathan - 05-27-2004

kuruvikal Wrote:ஆய்த எழுத்து அகேனம்...அதுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்...பப்படம் பாத்தாக்கள் கொஞ்சம் விலாவாரியா சொல்லுங்களேன்....அதுசரி ஆட்டோகிராபில ஆய்த எழுத்த இட்டா எது திறம்...???!

அத்தோட களவாப் பாக்க எங்கையேன் லிங்கிருந்தாக் கொடுங்களேன்... :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

ஆட்டோகிராப்பையும் ஆயுத எழுத்த்தையும் ஒப்பிடமுடியாது என்று நினைக்கின்றேன் இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமா பார்வைகளை கொண்ட படங்கள். முதலாவது அரிசிசாதம் இரண்டாது பிட்சா .... இரண்டுமே தனித்தனியாக சுவையாகத்தான் இருக்கின்றது.


- kuruvikal - 05-28-2004

இரண்டு படங்களையும் இன்னும் பாக்கல்ல...நாமாத் தேடிப்போய் படம் பார்ப்பது மிக மிகக் குறைவு அவையா தேடிவந்தால் பார்ப்போம்...உங்கள் ஒப்பீட்டுக்கு நன்றிகள்...!